ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பொங்கி எழுந்த இராமநாராயணன்

வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் சும்மா படுத்துக்கெடக்கும் ராமநாராயணன் ஒரு சமோசா,டீ க்கு ஆசைப்பட்டு 22/02/2009 ஞாயிறன்று உண்மையிலேயே பிசியாக உள்ள இயக்குணர்கள் பொழப்பையும் கெடுக்க ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் திருட்டு VCD (DVDஇல்லை) ஒழிப்புக்கூட்டம். ஏனென்றால் படங்கள் தோல்வியடைய காரணம் திருட்டு விசிடி தான் என்று அடித்துச் சொல்கிறார் இராமநாராயணன் . நம்ம பேரரசு போன்ற மசாலா புலிகள் எல்லாம் இதிலே கலந்து கொண்டு திருட்டு VCD ஐ ஒழிக்கப்போகிறார்களாம். முன்பு 50 ரூபாய் வரை விற்ற ஒரு திருட்டு DVD மொக்கை படங்களின் வருகையால் இப்போது வெரும்15 ரூபாய் என்ற கணக்கில் ஓடிக்கிட்டு இருக்கு.இதுக்கே ஏட்டய்யா முதல் பேட்ரோல் DSP வரை கப்பங்கட்டுறோம். இந்த லட்சணத்துல இவிங்க ஒழுங்கா படமெடுக்க துப்பில்லாமல் எங்க யாவாரத்தகெடுத்துட்டு எங்கள கொற சொல்ல வந்துட்டாங்கே.,இராமநாராயணனுக்கு பொழுது போகலண்னா இங்க வந்து எங்களோட சேர்ந்து  எங்க யாவாரத்த பாக்காட்டும்., ஒரு DVD க்கு ரூவா வீதம் கமிஷனாக தர்ரோம் என வெடித்துச்சிதறினார் கடற்கரை சந்தி பர்மா பஜார் திருட்டு DVD  விற்பணர் ஒருவர்.அதுமட்டுமின்றி இதுல என்ன காமெடின்னா பூக்கட போலிஸ் பூத்துல ஒர்க் பண்ணுற எல்லா காவலர்களும் தெணம் வந்து நம்மகிட்டதான் படம் வாங்கிகினு போறாங்க. புதுப்படம் வர லேட்டாயிட்டாநீங்கெல்லாம் என்னய்யா யாவரம் பாக்குறீயன்னு சென்னை தமிழில் வையிறாக.அதிலும் அங்கு முக்கிய பொருப்பில் உள்ள ஒரு அதிகாரி தினம் தினம் ஆளனுப்பி விதவிதமான ஊதா கலர் படங்களா கேட்டு உசுற வாங்குறார் என்று மேலும் பொங்கித் தீர்த்தார். கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடிச்சாம்.படிச்சிட்டு சும்மா போவாம கமெண்ட போடுங்க பங்காளி.,

1 கருத்து:

இராகவன் நைஜிரியா சொன்னது…

சரியான சவுக்கடி...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

இதில் விற்பவர்களை மட்டும் குறை சொல்லக்கூடாது, வாங்குபவர்கள் இல்லை என்றால், அவர்கள் விற்கப் போவதில்லை.

நாம் முதலில் திருந்த வேண்டும்... திருட்டு விசிடி / டிவிடி பார்ப்பது என்பது நமக்கு அவமானம் என புரிந்தால் அதை வாங்கி பார்க்க மாட்டோம்.