திங்கள், 30 மார்ச், 2009

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - வைகோ

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி என்ற பெயரில் முதல்வர் கலைஞர் நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். கலைஞருக்கு யாருடா தம்பி அப்டின்னு மண்டய பிச்சிக்கிட்டு நாம யோசிக்கிறதுக்குள்ள அது நான் தான் ராசா என்று புயல் தலைவர் வைகோ வெளியே வந்து அவரும் பதிலுக்கு பதில் ஒரு அறிக்கையை விட்டுவிட்டார்.ஆனா இந்த அறிக்கை கலைஞரின் அறிக்கையைப் போல வளவள என்றில்லாமலும், மறைந்திருந்து ஜாடை பேசாமலும் நேரடியாகத் தலைவரைத் தாக்குகிறது.

புயல் தலைவர் வைகோ  விடுத்துள்ள அறிக்கை ..

அந்தநாள் ஞாபகம் வந்தது என்றும், கட்சி தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில், தான் பெயர் சொல்ல விரும்பாத, குட்டை மனப் பேராசை கொண்ட ஒருவர் செயல்பட்டது தெரிந்தது என்றும், கவிதை கடிதம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி என்னை தாக்கி உள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவி என்பதை நான் கனவிலும் எண்ணியது இல்லை. கற்பனையிலும் கூடக் கருதியது இல்லை. என் மீது சுமத்தப்பட்ட கொடும்பழியால் வேதனையில் கொதித்த திமுக தோழர்கள் ஐவர் தீக்குளித்து மடிந்தார்கள். கடந்த 15 ஆண்டுகளில், மதிமுகவை சிதைப்பதற்கும், அழிப்பதற்கும் அவர் எடுத்துக்கொண்ட பல முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனது. கடைசியாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரை துரோகிகள் ஆக்கி தன்னோடு சேர்த்துக்கொண்ட பின், மதிமுகவை எந்த விதத்திலாவது நிர்மூலம் செய்து விட வேண்டும் என்று எண்ணி, 15 ஆண்டுகளுக்கு முன்பு என்மீது சுமத்திய கொடும்பழியை நியாயப்படுத்த முனைந்துதான் கவிதையை எழுதி இருக்கிறார்.

இப்போது என் மீது சுமத்தப்படும் நிந்தையும் பழியும், பெரிய பதவியில் இருப்பவர் என்னையும் எங்கள் இயக்கத்தையும் அழிப்பதற்காகவே ஏவி உள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்

இந்தப் பங்காளிச் சண்டை காலங்காலமாக நீடிப்பது தான். தன் குடும்பத்திற்கு மட்டுமே அறிஞர் அண்ணாவால் பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ள தலைவர் நாற்காலியை யாராவது கணவிலே நினைத்துப் பார்த்தாலும் அவர்களுக்கு கல்தா தான். இருந்தாலும் பழிவாங்குவதில் கலைஞருக்கு நிகராக தமிழகத்திலே யாருமில்லை எனலாம்.

அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி: "உதயசூரியன் சின்னத்திலே" கலைஞர் காமெடி கடிதம்

 

கருத்துகள் இல்லை: