சனி, 28 மார்ச், 2009

முஸ்லீம் லீக்‍ எனும் திவாலான கடை

கண்ணியம் மிக்க காயிதேமில்லத் காலத்தில் முஸ்லீம் மக்களுக்காக பிரம்மாண்டமாக‌ ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் முஸ்லீம் லீக்ஏன் லீக் என்று பெயர் வைத்தாரோ இஸ்மாயில் சாகிப், தண்ணீர் டேங்க் லீக் ஆகுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆகி வீக் ஆகிவிட்டது. காயிதே மில்லத் அவர்கள் ஆரம்பித்து வைத்து தலைவர் கலைஞரோடு தேர்தல் களம் கண்டு வெற்றியும் பெற்றார்(அப்பத்தில இருந்து ஒரு சீட்டுத்தான்). காயிதேமில்லத் மறைவிற்குப் பிறகு கொஞ்ச நாள் ஓடிய முஸ்லீம் லீக் எனும் கடையில் கல்லாவில் யார் உக்காருவது என்ற போட்டி ஏற்ப்பட்டு திருவாளர்.சமது அவர்கள் தலைமையில்  ஒரு அணியும் திருவாளர்.லத்தீப் சாகிபு தலைமையில் ஒரு அணியும் என கடை இரண்டாகப் பிரிக்கப் பட்டு ஓரளவிற்கு வியாபாரம் நடந்து வந்தது.சமது சாகிப் அணி அதிமுகவுடனும்,லத்தீப் சாகிப் அணி திமுகவுடனும் தங்களது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள்.

காலம் போகப் போக கடைகளின் வியாபாரம் டல் ஆகிக்கொண்டே போனது.கடையில் வேலை பார்த்தவர்கள் ஆளுக்கொரு மிட்டாய் பாட்டிலை கிளப்பிக்கொண்டு போய் தனியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.ஒரே ஒரு மிட்டாய் பாட்டிலை வைத்துக் கொண்டு இதுவும் ஒரு கடை(கட்சி) என்றது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதயாக முஸ்லீம் லீக் தேய்ந்து இன்று ஒரு அணி கலைஞரின் அடிவருடியாகவும், மற்றொரு அணி அம்மாவின் அடிவருடியாகவும் மாறி தங்கள் வாழ்க்கையை (கட்சியை அல்ல) ஓட்டிவருகின்றனர்.என்ன சொன்னாலும் ஆமாம் போடுவது, கலைஞர் எந்த தொகுதி கொடுத்தாலும் அதை பல்லைக்காட்டி வாங்கிக்கொண்டு உதயசூரியனிலேயே போட்டியிடுவது ன காலம் காலமாய் நடந்து வருகிற கலாச்சாரம்.இனி அதை மாற்ற  யாரலும் முடியாது.வேண்டுமானால்

இப்ப என்ன மேட்டர்னா தங்கள் கட்சியின் தொகுதிப் பங்கீடு(?) (ஒரு தொகுதிக்கு மேல் கெஞ்சிக் கெஞ்சிக் கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள்) குறித்து பேசுவதற்காக இன்று கலைஞரைச் சந்தித்த காதர்முகைதீன் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பாக முதல்வர் கருணாநிதியிடம் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் (?) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற திருப்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

இவர் என்னவோ 10 சீட்டுக் கேட்டது போலவும் அவர் 5 கொடுத்தது போலவும் பத்திரிக்கைகளிடம் அலப்பறை கொடுத்திருக்கிறார். இவர்கள் எதிர்பார்த்ததும் ஒற்றை,தலைவர் கலைஞர் முன்னயே முடிவு செய்ததும் ஒற்றை, அப்பறம் இதுல என்ன பேச்சிவார்த்தை வேண்டிகெடக்கு .,, அடடடா..,இந்த லட்டர் பேடுங்க தொல்லைத் தாங்கலடா.

4 கருத்துகள்:

puduvaisiva சொன்னது…

அடடடா..,இந்த லட்டர் பேடுங்க தொல்லைத் தாங்கலடா.

:-))))))))))))

nice kapali

சிம்பா சொன்னது…

திராவிட கட்சிகளின் விழாக்கள் அனைத்திலும் ஒலிக்கும் ஒரு கணீர் குரல் பாட்டுக்காக இவர்கள் கொடுக்கும் regular royalty share என்று நினைக்கிறன்...

பெயரில்லா சொன்னது…

தங்கள் பார்வையில் இப்படி? அது எப்படி!!!!!!

பெயரில்லா சொன்னது…

then what should expect from dinamalam(r). we will always nightmare for all party oneday that will come quickly not far away.