திங்கள், 20 ஏப்ரல், 2009

ஞாயிறு அதிரடி : நிதி தாருங்கள்-கலைஞர் காமெடி கடிதம்

தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் அதையும் பாக்கெட் போட்டு அயல் நாட்டுக்கு விற்று விடுவேன். கடல் இருந்தால் தானே நீங்கள் கட்டுமரத்தில் பயணம் செய்வதற்கு. கொஞ்ச நாள் ஓய்வாக இருக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் இந்த பாலாப்போன பாராளுமன்ற எலக்சன் வந்து தொலைந்து விட்டது. இனி எனக்கேது ஓய்வு? கடந்த காலங்களில் ஓய்வே இல்லாமல் எத்தனை பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டேன் என கணக்கெடுத்துப் பார்க்க முடியுமா? ஒரு புறம் அந்த அம்மையார் சூராவளி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். மழைக்காலத்திற்கு முன்னரே  உணவு சேர்க்கும் எரும்பு போல கட்டுக்கட்டாக காசுகளைச் சேர்த்து விட்டு கவலையில்லாமல் மேடையேறி கதைத்துக் கொண்டிருக்கிறார் அம்மையார்.நம்மை யார் திரும்பிப் பார்ப்பார்கள்? அறிவாலயம் வருகின்ற முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நிதி தாருங்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் "தலைவரோட எப்பவுமே காமெடி தான் " என்று சொல்லியவாறு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.நான் என்ன செய்ய? 

உடன் பிறப்பே! அறிவாலய கஜானாவின் நிலை தெரியுமா உனக்கு? முன்பு பொருளாராக இருந்த வெளிச்சம் பிடிக்காதார் கஜானாவைச் சுரண்டி சுரண்டி பூமியின் அந்தப் பக்கமே தெரிகிறது. அது மட்டுமின்றி அவர் சுரண்டிய இடத்தில் தற்போது ஊற்று உண்டாகி தண்ணீர் ஊர ஆரம்பித்து விட்டது. அய்யகோ! இந்த விசயம் வெளியே தெரிந்தால் ஏற்கணவே தண்ணீர் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருக்கக் கூடிய அந்த ஏரியா மக்கள் குடங்களோடு குமுறி விடுவார்களே! 

அம்மையார் வெட்டிக்கொண்டு வா என்று சொன்னால் கட்டிக்கொண்டு வந்து கட்டுக் கட்டாக் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே நிலையே வேறு.கட்சி நிதி கேட்டால், தலைவர் பெயரிலேயே நிதி இருக்கிறதே! பிறகு ஏன் நிதி என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்கள். இது போதாதென்று புதிதாக வந்து சேர்ந்துள்ள எல்.கணேசனுக்கு வெத்தலை பாக்கு வாங்க பேட்டா கொடுத்தே என் கோட்டா முடிந்து விடுகிறது. பணவீக்கம், பணவாட்டம் என ஒரு பக்கம் நாடே ஆடிக்கொண்டிருக்கும் போது அவர்களிடம் மட்டும் லாண்டரியில் கொடுத்து கஞ்சிபோட்டு சலவை செய்த கதர் வேட்டி போல கட்டுக் கட்டாக கரண்சிகள் எப்படித்தான்  புழங்குகிறதோ தெரியவில்லை! அந்த சூட்சமத்தை அறிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் அன்பர்களே! அங்கு புழங்கும் பணத்தைக் கண்டு நானும் போய் அதிமுகவில் சேர்ந்து விடலாமா என்ற எண்ணம் சில நேரங்களில் தலை தூக்குகிறது. என்ன செய்ய என் மக்களுக்காக அதையும் பொருத்துக் கொள்கிறேன். 

வாக்களப் பெருமக்களே! முன்பெல்லாம் நீங்கள் வெறும் பிளாஸ்டிக் குடம், சோப்பு டப்பாவை வாங்கிகொண்டு ஓட்டுப் போட்டீர்கள். ஆனால் இப்போது நீங்களெல்லாம் உசாராகி உயர் பொருளாய் கேட்கிறீர்கள்.நான் எங்கு போவேன்? முடிந்த அளவிற்கு போன எலக்சனில் இலவச கலர் டிவி கொடுத்து ஓட்டுக்கேட்டேன். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு டிவி என்று நான் சொன்னால் உங்களிடம் மின்கட்டண அட்டை, பால் வாங்கும் அட்டைக்கெல்லாம் சேர்த்து ஒவ்வொருவரும் ஐந்து ஆறு என வாங்கிக் குவித்து விட்டீர்கள். நான் ஒரு பக்கம் டெண்டர் விட்டு 2200 ரூபாய்க்கு டிவி வாங்கிக்கொடுத்தால் நீங்கள் அதை அவர்களுக்கே மீண்டும் 1500 ரூபாய்க்கு டெண்டர் விட்டு விற்று விடுகிறீர்கள். அவர்கள் மீண்டும் என்னிடம் 2200 ரூபாய்க்கு விற்கிறார்கள். இப்படி செய்தால் கம்பெணிக்கு கட்டுபடியாகுமா என் கண்மணிகளே! 

ஒரு பக்கம் புலம் பெயர்வாழ் இலங்கைத் தமிழர்கள் என்னை வாரித்தூற்றி வசைமாறி பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.  மறுபக்கம் அம்மையாரின் கூட்டணிக் கும்பல்கள் கூடி என்னைக் கும்மியடிக்கிறார்கள். நான் என்ன செய்வேன்! இனிமேல் 40 எம்.பி களும் ராஜினாமா செய்வார்கள் என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள். வரும் தேர்தலை நம்பி நிறைய புராஜக்டுகளைப் போட்டுவிட்டேன். தயவு செய்து கவுத்து விடாதீர்கள். முரசொலியில் வரும் என் தொடர் கடிதங்களைப் படித்து தினம் தினம் வேதனையை அனுபவிக்கும் என் கழகக் கண்மணிகள் இந்த எலக்சனில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியடைய உங்களால் இயன்ற நிதிகளை வாரி வழங்குவீர். 

"நாளை நமதே" எம்ஜிஆர் படம்!  "நாற்பதும் நமதே" உங்களிடம் ! அண்ணா நாமம் வாழ்க! கலைஞர் டிவி வாழ்க.

6 கருத்துகள்:

இராகவன் நைஜிரியா சொன்னது…

// என்ன செய்ய என் மக்களுக்காக அதையும் பொருத்துக் கொள்கிறேன். //

நச்...

ttpian சொன்னது…

உங்கள் கட்டுரை சம்பந்தமாக....
நாம் முக்கியமாக செய்யவேண்டியது...டெல்லியில் உள்ள மலயாலிகலின் கைகலை முடக்க வேண்டும்:இந்த கைகல்தான்,நமக்கு எதிராக எல்லா கெடுதிகளையும் செய்கிறது!

Karthikeyan G சொன்னது…

// தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் அதையும் பாக்கெட் போட்டு அயல் நாட்டுக்கு விற்று விடுவேன். //

அயல் நாட்டில் தி.மு.க-காரன் கிடையாது. அதனால் அவரால் கடல் நீரை வெளிநாட்டில் விற்க முடியாது.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// இராகவன் நைஜிரியா கூறியது...
// என்ன செய்ய என் மக்களுக்காக அதையும் பொருத்துக் கொள்கிறேன். //

நச்...//

புரிஞ்சிகிட்டீங்களே அண்ணே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ttpian கூறியது...
உங்கள் கட்டுரை சம்பந்தமாக....
நாம் முக்கியமாக செய்யவேண்டியது...டெல்லியில் உள்ள மலயாலிகலின் கைகலை முடக்க வேண்டும்:இந்த கைகல்தான்,நமக்கு எதிராக எல்லா கெடுதிகளையும் செய்கிறது!//


யோசிக்க வேண்டிய விசயம் தான். ஆனால் என்னைப் பொருத்தவரை வடக்கில் உள்ளவர்களை விட மற்றவர்கள் நம்மீது அந்த அளவிற்கு விசம் கக்குவதில்லை என நினைக்கிறேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
// தமிழர்களே!தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் அதையும் பாக்கெட் போட்டு அயல் நாட்டுக்கு விற்று விடுவேன். //

அயல் நாட்டில் தி.மு.க-காரன் கிடையாது. அதனால் அவரால் கடல் நீரை வெளிநாட்டில் விற்க முடியாது.
//

ஒரு காலத்தில் பர்மா, இலங்கை என வெளி நாடுகளிலும் திமுக இருந்ததை நாம் மறுக்கமுடியாது.