சனி, 28 பிப்ரவரி, 2009

கலைஞர் கொடுத்த வெளம்பரம்

இன்று பத்திரிக்கைகள் முழுவதும் கலைஞர் கொடுத்த விளம்பரத்தால் நிரம்பி வழிகின்றன. இது அவ்களுது
நம்மகிட்டயே டகால்டியா? நாமலும் குடுப்போம்ல போட்டி வெளம்பரம். இது நம்மளுது
படிங்க கமெண்ட போடுங்க பங்காளியலா.

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்". நாளை படிக்கத்தவறாதீர்கள்

கலைஞருக்கு மீண்டும் இனித்த இதயம்

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லைநிரந்தர நண்பனும் இல்லைன்னு எவன் முதல்ல சொன்னானோ அவனே ஞானி. இத்தனை காலமும் எதிரிகள் போல் நடித்த வசணகர்த்தா கலைஞரும், முன்னால் பழைய படம் ஒன்றில் நடித்த நடிகர் மருத்துவர் அய்யாவும் மீண்டும் ஆஸ்பத்திரியில் சந்தித்து தழுவிக்கொண்டார்கள். "உன்ன விட்டா எனக்கு வேற நாதியில்ல, என்னவிட்டா உணக்கு வேற நாதியில்ல" என்ற பாணியில் இருவரின் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இருவருக்கும் இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல என விலகிவிட்டு மக்களுக்கு பூச்சிகாட்டிய நிலையில், அன்புமணியின் மாமா முன்னால் தமிழக காங் தலைவர் கிருஷ்ணசாமி இந்த கூட்டணி மீண்டும் வருவதற்கு "அந்த முயற்ச்சியை" செய்ததாக தவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.அண்புமணிக்கு பதவியை "ரினிவல்" செய்து கொடுக்க வேண்டும் என  சம்மந்தியிடம் சத்தமில்லாமல் சொன்னாராம் மருத்துவர். அதன் பின்னரே இந்த சந்திப்பு ஏற்பாடு என்கிறது கோபாலபுரத்து பட்சி ஒன்று. இதன் பின்னர் முதல்வரை மீட்டிய ராமதாஸிடம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியிலேயே பாமக நீடிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்ததாகவும், தானும் அதையே விரும்புவதாகவும் ராமதாஸ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இப்ப என்ன நியூஸ்னா கொஞ்ச நாளைக்கு முன்பிருந்து இன்றுவரை அப்பாவி திமுக,பாமக தொண்டர்கள் வெட்டிக்கொண்டும்,குத்திக்கொண்டும், குடும்பப் பகையாலும் பிரிந்தார்களே! அந்த முட்டாள் தொண்டர்கள் குடும்ப பகைகள் ஜென்ம பகையாகி விட்டனவே! இதற்கு கலைஞரும்,மருத்துவரும் என்ன சொல்லப் போகிறார்கள்? தேர்தல் என்று வந்து விட்டால் நாயுடன் பூனையும், பூனையுடன் நாயும், ராஜேபக்சேயுடன் பிரபாகரனும், பராக் ஒபாமாவுடன் ஒசாமாவும் கூட்டனி சேர்ந்தாலும் நாம பாத்துகினு தான் இருக்கனும் போல. "காவலரே வேசமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே".,

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்". நாளை படிக்கத்தவறாதீர்கள்

வியாழன், 26 பிப்ரவரி, 2009

சேப்பாக்கத்தில் நடந்த கேலிக்கூத்து

செய்தி1: உலகம் முழுதும் அதிகம் ரசிகர்களை பெற்றது சன் குழுமம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். அதிலும் சன் செய்திகள், சன்நியூஸ் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை என நம்பும் மக்கள் மிகமிக அதிகம். சில நாட்களுக்கு முன்பு அந்த தொலைக்காட்சிகளில் அரசு வழங்கும் இலவச டிவிகள் வெடிக்கின்றன, அடிக்கடி பழுதாகிறது என ஜெயா டிவியையும் தாண்டி செய்திகள் ஒளிபரப்பாகி பரபரப்பாயின.

செய்தி2: இல்லாத மின்வெட்டை இருப்பதாக காட்டி மக்களுக்கு திமுக மீது வெறுப்பை ஏற்படுத்தி மாறன் சோகோதரர்கள் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.-ஆற்காடு வீராச்சாமி

செய்தி3: எங்களுக்கும் தலைவர் கலைஞருக்கும் இடையே வெறுப்பை பற்றவைத்து அதாவது போட்டுக் கொடுத்து எங்களை திமுகவை விட்டு வெளியேற்றியது ஆற்காடு வீராசாமி தான்.-கலாநிதி மாறன்

செய்தி4: சேப்பாக்கத்தில் மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்ற இலவச டிவி வழங்கும் விழாவில் தயாநிதி மாறன் வெடிக்காத இலவச டிவிகளை வழங்கினார். அருகே மிக அருகே தமிழகத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது என்று காமெடி செய்து வெக்கமில்லாமல் சிரித்து இன்னமும் மின்வெட்டுத்துறை அமைச்சராகவே நீடிக்கும் ஆற்காடு வீராசாமி. 

சாக்கடயில உழுந்த பொறவு கருப்பு பன்னியென்ன வெள்ள பன்னியென்ன...,,

படந்தான் கருப்பு வெள்ள ஆனா குடுக்குற டிவி கலருங்க.., நீங்க கமெண்ட போடுங்கப்பு..

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்கள்". படிக்கத்தவறாதீர்கள்

அம்மாவை சீண்டும் உதவிப் பேராசியர்

இத்தன நாளா யாருக்கும் தெரியாததால பேராசிரியர் என போட்டுக்கொண்ட பேராசியர் உண்மையிலேயே உதவிபேராசிரியர் (அநேகமாக டுடோரியல் கல்லூரியாக இருக்கலாம்) என்பதை ஜெயா வெளிப்படுத்திய போது தான் நமக்கே தெரிந்தது. கலைஞர் முரசொலியில் சின்னக்குத்தூசி,ஆபிஸ்பாயாக ஒழிந்து கொண்டு சில கேள்வி பதில்களைப் போடுவார்.நிஜத்தில் நம்ம பேராசிரியரும்,மின்வெட்டாரும் தான் ஆபிஸ்பாயாகவும்,சின்னக்குத்தூசியாகவும் கலைஞருடைய செய்திகளை முரசறையும் ஜெமினி பொம்மைகளாக காலங்காலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் பேராசிரியர் மூலமாக ஊதிய செய்திதான் இன்றைய பரபரப்பு.

உயர்நீதி மண்றக் கலவரத்துக்குக் காரணம் ஜெ தான் என அடித்துச்சொல்கிறார் நம்ம சின்னக்குத்தூசி அய்யா. உலகில் எங்குமே இல்லாத வகையில் காவல்துறை, நீதித்துறை பிரச்சணையைக் கண்டு உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கின்றன. ஜெ ஆட்சியிலிருந்த போது காவல்துறை,அரசுத்துறை ஆகியவைகள் அடிபணிந்து கிடந்தன. கலைஞர் ஆட்சி வந்தவுடன் பெஞ்சி தேய்க்க மற்றும் ராணி,குமுதம்,விகடன் படிக்க எங்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளம் போதவில்லை என போர்கொடி தூக்கும் அரசு ஊழியர் சங்கங்கள் நிதம் ஒரு ஆர்ப்பாட்டம் திணம் ஒரு போராட்டம் என நடத்தி சேப்பாக்கத்தை நாரடித்து, திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் அருகே அமைந்திருக்கும் ஆர்த்தி உணவக கழிப்பறையை தினந்தோரும் நிரப்புகின்றனர். ஜெ ஆட்சிவந்தால் எங்களுக்கு யாவாரமே கிடையாது.ஆனால் மகராசன் கலைஞர் வந்து விட்டால் தினம் கூட்டம் நிரம்பி வழியும் என்கிறார் அந்த உணவக ஊழியர் ஒருவர். அதுபோலத் தான் கட்டுப்பாடின்றி அடித்துக் கொள்ளும் நீதித் துறையும் காவல்துறையும்.., இதற்கெல்லாம் விடிவு எப்போது?

நரி நாட்டாம பண்னுனா பல்லிகூட பழிச்சிக் காட்டுமாம்...,

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்". படிக்கத்தவறாதீர்கள்

புதன், 25 பிப்ரவரி, 2009

பட்டய கெளப்பும் விஜய T ராஜேந்தர்

எச்சரிக்கை:இதயநோயாளிகள்,கர்பிணிப்பெண்கள்,வயது  முதிர்ந்தவர்கள் தயவு செய்து மேலே உள்ள படத்தை பெரிசு பண்ணி பார்க்க வேண்டாம். பின் விளைவுகளுக்கு கழுதை பொருப்பாகாது.,

ஏற்கனவே லட்சிய திமுக என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொருப்பில் உள்ள விஜய T .ராஜேந்தர்தன் அயராத பணிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களுக்காக புதியதாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் என்ற அதிர்சியான செய்திதான் இன்றைய ஸ்பெசல். "தமிழ் இன பாதுகாப்பு முன்னணி"என்ற இந்த மாபெரும் அமைப்புக்குத் தலைவராக T.ராஜேந்தரே செயல்படுவார் என்று அவரே அறிவித்துக் கொண்டார். இதிலே கவிஞர் புலமைப்பித்தன்நடிகர் மன்சூர் அலிகான் போன்ற பெருந்தலைகள் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரட்டை அரங்கத்தில் அளப்பறை கொடுக்கும்  TR புது இயக்கம் தொடங்கியுள்ளது அனைவருக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சிய திமுகவில் அவர் மகன் சிம்புமனைவி உஷாபிள்ளைகள்இலக்கியாகுரலரசன் ஆகியவர்களே உறுப்பிணர்ளாக இல்லாத நிலையில், T. ராஜேந்தர் சினிமாவில் 7  பொருப்புகளை கையாளுவது போல லட்சியதிமுகவின் அனைத்துப் பொருப்புகளையும் அவர் மட்டும் தான் கவனிக்கிறார். உலகமே "கருப்பண்ணன் காதலி" என்ற TR ன் அடுத்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் போது தலைவர் இப்படியொரு முடிவு எடுத்தது அனைத்து ரசிகர்களுக்கும்  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொசுறுத் தகவல்: ஆஸ்கார் விழா முடிந்த பிறகு தான் செலக்ட் கமிட்டியிணர் நம்ம TR ன் "வீராசாமி" படத்தைப் பார்த்தார்களாம். படம் முடிந்து வெளியே வந்த குழுவினர் பத்திரிக்கையாளர்களிடம் "ஸ்லம்டாக் படத்துக்கு நாங்கள் தவறாக விருது கொடுத்துவிட்டோம். நாங்கள் முன் பே வீராசாமியைப் பார்த்திருந்தால் 8 ம் வீராசாமிக்கே" என தெரிவித்தனர். உஷ்.,, இப்பவே கண்ணக் கட்டுதே.,,,

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கலைஞரையே கலாய்த்த மருத்துவர்

கலைஞருக்கு தையல் பிரிக்க டைலர்கள் சாரி மருத்துவர்கள் தயாராகிவிட்ட நிலையில் தையல்கள் பிரிக்காமலேயே தானாக பிரிந்துவிடும் அளவிற்கு மருத்துவர் (டி)ராமதாஸ் ஒரு அறிக்கையை ஆவி பறக்க வெளியிட்டிருக்கிறார். நான் தூங்கும் போதே என் கட்டிலை அதாவது ஆட்சிக்கட்டிலை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கலைஞர் பொத்தாம்பொதுவாகத்தான் சொன்னார், அதக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அய்யா,"அப்பன் குதுருக்குள் இல்லை" என்ற கதையாய் வெளியேவந்து கலைஞர் சொல்றது என்னைத்தான் என்றும்., நாங்கள் உங்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டியதில்லை அந்த வேலையை உங்கள் உடணிருப்பவர்களே செய்துவிடுவார்கள் என்றும் அள்ளி விட அங்குள்ள எடுபிடிகள் இதைக்கேட்டு உசாராகி தங்கள் நடவடிக்கைகளை கொஞ்சநாளைக்கு நிறுத்திவிட முடிவு செய்துவிட்டனர்.. கலைஞர் ஒரு சினிமாக்காரர் அவர் இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று சொல்வதெல்லாம் சும்மா உல்லுல்லாய்க்கி.,, அதுமட்டுமின்றி கலைஞர் ஒரு நல்ல நடிகர் என்றும் விளாசிவிட்டார் அய்யா. ஏற்கவே என் தம்பி திருமா சாகும்வரை 4  நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டான்., இனிமேல் யார் உண்ணாவிரதம் இருந்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும்அதனால் தான் நான் எதுவுமே செய்யாமல் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறேன் எனவும் கலைஞரை கடைந்துவிட்டார் மருத்துவர்னிமேல் தன் அன்பு மகன் அன்புமணிக்கு ஆப்பு வைக்க  கலைஞரால் முடியாது என்பதை நன்கு கண்பாம் செய்த பிறகே இந்த அறிக்கையை விட்டாராம் அய்யா., நொந்து போன கலைஞர் உடணடியாக அம்மையார் சோனியாவுக்கு போன் போட அது ரிங் ஆகி கட் ஆகிவிட்டதாம். மறுபடியும் முயற்சித்த போது" நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை" என ரிகார்ட் வாய்ஸ் கேட்டதாம். வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்திலாடுறான் பாரு, ஆடி முடிஞ்சி எறங்கிவந்தா அப்புறந்தான்டா சோறு., கமெண்ட போடுங்க பங்காளியளா..,,

திங்கள், 23 பிப்ரவரி, 2009

புகைந்த இளையராசா

ரஹ்மானுக்கு விருது வழங்கியது ஆஸ்காருக்குத் தான் பெருமை.இந்த செய்திகேட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே கொண்டாடும் நிலையில் அவரது பழைய குருநாதர் இளையராசா செய்தி கேள்விப்பட்டு உடணடியாக ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கிட்டாராம். ஏற்கனவே சாம்புராணி சட்டியாய் புகைந்து கொண்டிருந்த ராசா இந்த செய்தியைக் கேட்டவுடன் தீமூட்டிய தந்தூரி அடுப்பாய் எரிய ஆரம்பித்து விட்டாராம். இனி இளையராசா திருவல்லிக்கேணி பக்கம் ஒரு லாட்ஜில ரூம் போட்டு விடிய விடிய அழுக வேண்டியது தான். புலவர்களிடையே போட்டி இருக்கலாம், அதுக்காக இப்படி பொங்கக் கூடாது.
இறுதிச் செய்தி: ரஹ்மானுக்கு திரைஉலகிணரால் எடுக்கப்படும் பாராட்டு விழாவில் இளையராஜா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடந்தால் தான் உறுதியாகும்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

வாயப் புடிங்கிய வைக்கோ

நம்ம சைக்கோ சாரி வைக்கோ தீக்குளித்து இறந்த ஒரு திமுக தொண்டருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல விசயம் தான். ஆனால் என் அன்புத்தம்பியே என்னைக்கொல்ல முயன்றான், கள்ளத்தோணியேறி கஸ்மாலம் வைக்கோ என் வாழ்வை முடிக்க முயன்றான், அதனால் அவனோடுள்ள உறவை முறியுங்கள் முடிந்தால் அவன் கையையும் முறியுங்கள் என்று முன்னர் சொன்னாரே உங்கள் அன்பு அண்ணன், அண்ணாவின் இதயக் கண்ணன் கலைஞர்., ஞாபகம் இருக்கோ உங்களுக்கு தலீவா? அதமுன்னிட்டு 3 அப்பாவி தொண்டர்கள் சோப்பு,டவல் கூட எடுக்காமல் அவசர அவசமாக தீக்குளித்தார்களே அல்லது குளிப்பாட்டப் பட்டார்களே! புயல் தலைவா அப்போது கூட நீங்கள் இதேபோலத் தானே சொன்னீர்கள், அன்று நீங்களும் உங்கள் அண்ணனைப் போல ஒரு இரங்கல் கவிதை வாசித்து அவர்களுக்கு சங்கு ஊதிவிட்டு அதன் நினைவாக சங்கொலி ஆரம்பித்து தலீவர் கலைஞரை தாருமாறாக வாருவாரு என வாரியதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்குமென நினைக்கிறேன் தலீவா! அப்பால மறுபடியும் என் மன்னன் அன்பு அண்ணன் கலைஞர் தான் என ஓடி வந்து 23 சீட்டுக்கு சீட்டியடிக்க ., தலைவர் கலைஞர் வழக்கம்போல வாடா தம்பி என்னை நம்பி என அழைத்து பின் ஒன்றும் இரண்டும் மூன்று தானே என்று ஒன்னாம் வகுப்பு கணக்கை உங்களிடம் சொல்லி உங்களுக்கு ஆப்படிக்க, நீங்கள் வெடித்து கிளம்பி அன்பு சகோதரியிடம் உங்கள் கம்பெனியை அடகுவைக்க இன்னமும் நீங்கள் அம்மாவிடம் அடிபணிந்து, தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக சிறந்த ஓ.பண்ணீர்செல்வம் விருது வாங்கிவிட்டதெல்லாம் உங்களுக்கு கணவு போல இருக்கலாம். ஆனால் உங்களுக்காக தீக்குளித்த அல்லது குளிப்பாட்டப் பட்ட 3 பேர் உங்கள் தாயகத்தில் போட்டோ வடிவில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது தீக்குளிக்கும் திராவிட தங்கங்களுக்கெல்லாம் உதாரணமப்பா, ஆனா அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா., வழக்கம் போல நீங்க கலக்குங்க தலீவா. உங்களிடம் தான் ஏற்கனவே சங்கொலி இருக்குல்ல., ஊதுங்க ஊருக்கெல்லாம் .,,

பொங்கி எழுந்த இராமநாராயணன்

வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் சும்மா படுத்துக்கெடக்கும் ராமநாராயணன் ஒரு சமோசா,டீ க்கு ஆசைப்பட்டு 22/02/2009 ஞாயிறன்று உண்மையிலேயே பிசியாக உள்ள இயக்குணர்கள் பொழப்பையும் கெடுக்க ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் திருட்டு VCD (DVDஇல்லை) ஒழிப்புக்கூட்டம். ஏனென்றால் படங்கள் தோல்வியடைய காரணம் திருட்டு விசிடி தான் என்று அடித்துச் சொல்கிறார் இராமநாராயணன் . நம்ம பேரரசு போன்ற மசாலா புலிகள் எல்லாம் இதிலே கலந்து கொண்டு திருட்டு VCD ஐ ஒழிக்கப்போகிறார்களாம். முன்பு 50 ரூபாய் வரை விற்ற ஒரு திருட்டு DVD மொக்கை படங்களின் வருகையால் இப்போது வெரும்15 ரூபாய் என்ற கணக்கில் ஓடிக்கிட்டு இருக்கு.இதுக்கே ஏட்டய்யா முதல் பேட்ரோல் DSP வரை கப்பங்கட்டுறோம். இந்த லட்சணத்துல இவிங்க ஒழுங்கா படமெடுக்க துப்பில்லாமல் எங்க யாவாரத்தகெடுத்துட்டு எங்கள கொற சொல்ல வந்துட்டாங்கே.,இராமநாராயணனுக்கு பொழுது போகலண்னா இங்க வந்து எங்களோட சேர்ந்து  எங்க யாவாரத்த பாக்காட்டும்., ஒரு DVD க்கு ரூவா வீதம் கமிஷனாக தர்ரோம் என வெடித்துச்சிதறினார் கடற்கரை சந்தி பர்மா பஜார் திருட்டு DVD  விற்பணர் ஒருவர்.அதுமட்டுமின்றி இதுல என்ன காமெடின்னா பூக்கட போலிஸ் பூத்துல ஒர்க் பண்ணுற எல்லா காவலர்களும் தெணம் வந்து நம்மகிட்டதான் படம் வாங்கிகினு போறாங்க. புதுப்படம் வர லேட்டாயிட்டாநீங்கெல்லாம் என்னய்யா யாவரம் பாக்குறீயன்னு சென்னை தமிழில் வையிறாக.அதிலும் அங்கு முக்கிய பொருப்பில் உள்ள ஒரு அதிகாரி தினம் தினம் ஆளனுப்பி விதவிதமான ஊதா கலர் படங்களா கேட்டு உசுற வாங்குறார் என்று மேலும் பொங்கித் தீர்த்தார். கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடிச்சாம்.படிச்சிட்டு சும்மா போவாம கமெண்ட போடுங்க பங்காளி.,

சனி, 21 பிப்ரவரி, 2009

கைகலத்த காக்கியும் கருப்பும்

ஆக்ஸிடென்ட்னா ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணலாம்., ஆனா ஆம்புலன்ஸே ஆக்ஸிடென்ட் ஆனா யாருக்கு போன் பண்றது. அந்த கதயில சந்தி சிரித்துவிட்டது சட்டமும் நீதியும். தமிழகத்திற்கே கேவலம் விளைவித்த இந்தகசமுசா கலகம் நடந்தேறியது டாஸ்மாக் கடையில் அல்ல. நீதிகிடைக்கும் என சில ஏ(ழை)மாளிகள் கால்கடுக்க காத்திருந்து கடைசியில் கருப்பு கோட்டு கணவான்கள் காசுக்கு வேசம்போட்டு கயவர்களை காப்பாற்றும் அந்த இடத்தில், அதாங்க நம்ம சூனா சாமிய குணியவச்சி கும்முனாங்கெல்ல அந்த உயர்நீதிமன்றத்தில். காக்கிகள் ஒருபக்கம் கல்வீச மறுபுறம் கருப்புகள் கல்வீச மண்றவளாகம் போர்களமாகி ரணகளமாகியது. வழக்கம்போல எவன் செத்தாலும்,எவன் அழிந்தாலும் உற்சாகத்தோடு படம்பிடிக்கும் மீடியாக்கள் தங்கள் பணிகளை செய்ய நேரலையிலும்,கோணலலையிலும் ஒருநாள் பொழுதை அங்கேயே ஓட்டி விட்டனர். இந்த சான்ஸை பயன்படுத்தி பழைய கடுப்பை வைத்து முகம்தெரியாத யாரோ சிலர் தலைமை நீதிபதியின் தோசைக்கல் தலையில் கொத்துபரோட்டா போட்டுவிட, ஸான்ட்விச் பிரட்டில் இருந்து வழியும் ஜாம் போல நீதியின் தலையில் இருந்து இரத்தம் கொட்ட அனைவரும் பரபரப்பு ஆனார்கள்.அப்பறம் ஆளாளுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.நம்ம சூனாசாமி வைத்த வெடி நினைத்ததை விட நன்றாகவே வெடித்துவிட்டது. நிச்சயம் இதற்கு அம்மாவிடம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் உண்டு. காவல்துறையை கையில் வைத்திருக்கும் கலைஞர், வழக்கம் போல அய்யகோ! என் ஆட்சியை கலைக்க சதி என கூப்பாடு போடுகிறார். ஆக கலைஞர் ஆட்சி வந்தால் பஸ்மறியல்,கடையடைப்பு, பந்த் போன்றவை இலவச இணைப்பாக கூடவே வந்துவிடும்,கலைஞர் ஆட்சியில் பிளேடு வச்சிருக்கறவன் பியூன மெரட்டுவான்,கத்தி வச்சிருக்குறவன் கலக்டர மெரட்டுவான் என்பது 100% உண்மை.இவ்ளோ நடந்தும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சீராக இருக்கிறது என்று சொல்வது தான் ஆஸ்கார் விருது காமெடி.

புதன், 18 பிப்ரவரி, 2009

சுவாமியை சுளுக்கெடுத்த சூரர்கள்

நம்ம சூனா சாமி எப்பவோ இந்தியாவுக்கு பிரதமரா வரவேண்டியவரு., அவரு மட்டும் இன்னேரம் பிரதமரா இருந்தா காஷ்மீர் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும். ஏன்னா அப்போ இந்தியா பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக இருக்கும். அட ஆமாங்க, இந்தாளு பிரதமரா வந்திருந்தார்னா இன்நேரம் இந்தியாவை பாகிஸ்தானுக்கு விற்றிருப்பார். யாராலும் தீர்க்கமுடியாத காஷ்மீர் பிரச்சனையும் தீர்ந்திருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் புரோக்கர்களை பார்த்திருக்கலாம். ஆனால் அரசியலின் முதல் புரோக்கர் இந்த சூனா சாமி தான். இப்ப நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். அதிலே நடிகர் சோ முதலிடம் வகிக்கிறார்,. சூனாசாமி தன் அறிவை நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் இந்தாளுதான் இந்தியாவின் பிரதம வேட்பாளர். சந்திரலேகா மந்திரத்தால் இந்தியா பிழைத்தது. இப்ப என்ன மேட்டர்னா நம்ம சூனா சாமியை 17/02/2009  காலையில் சென்னை உயர்நீதிமண்ற கிளையின் உள்ளார வைத்து நீதிபதிகள் முன்னாடியே கதற கதற குமுறிவிட்டார்கள் சக வக்கீல்கள்.அணைத்து கதவுகளும் சாத்தப்பட்டதால் சூனா சாமி சுத்தி சுத்தி வந்து அடிவாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த சூனாசாமி மீது இரக்கப்பட்ட சில வக்கீல்கள் சோடா தெளித்திருக்கிறார்கள். மயக்கம் தெளிந்த சூனாசாமி இனிமேல் அடிக்கமாட்டார்கள் என நம்பி எழும்பிய வேளையில், தயாராய் இருந்த அழுகிய முட்டை மற்றும் அழுகிய தக்காளிகளால் அபிசேகம் செய்திருக்கிறார்கள். அசைவத்தில் சந்திரலேகாவைத் தவிர எதையுமே கண்டிராதா சூனாசாமி அழுகிய முட்டையடி வாங்கியது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அடிவாங்குவது என்பது சூனாசாமிக்கு பழகிய ஒன்றுதான். ஒரு எடம் ரெண்டு எடம்னா பரவாயில்ல. பலஎடத்துல வாங்கி வாங்கி பழகிப்போச்சி.,, இவிங்க எப்போதுமே இப்டிதான் அடிச்சிகிட்டே இருப்பாங்கே., இவிங்க அடிக்கிறத பாத்தா தொழில் பண்ண முடியுமா? அட வாங்க பாஸ்.,,

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

ஏன் சிரிப்பொலி ? கலைஞர் காமெடி கடிதம்

உடன்பிறப்பே! ஈழம் ஒருபுறம் எரியதமிழகம் ஒருபுறம் கொதிக்கதங்களை தமிழின தலைவர்கள் என சொல்லித்திரிபவர்கள் தங்கள் நாடகங்களை அறங்கேற்ற, நானும் என் பங்குக்கு ஓரளவிற்கு செய்ய, ஒன்றுமே வேலைக்காகாமல் போய்விட்டது. நான் என்செய்வேன்? 40 MP களும் ராஜிணாமா செய்வார்கள் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவர் ரிஸீவரை லைனிலேயே வைத்துவிட்டு தடாலென தரையில் வீழ்ந்து, புரண்டு புரண்டு சிரித்தாரேஅப்போது நான் அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயமாக நின்றதெல்லாம் யாருக்காக உணக்காகத்தானே உடன்பிறப்பே! 

இப்போது நீங்களெல்லாம் உசாராகி விட்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆமாம் நானும் அழுது அழுது கண்கள் பொங்கி விட்டன. கடிதம் எழுதி எழுதி கை வீங்கிவிட்டது. உலகத்தமிழர்களின் அழுகையை நிறுத்த நான் எடுத்த சிறுமுயற்சி தான் இந்த செருப்பொலி, மன்னிக்க சிரிப்பொலி. இந்த காமெடி சேனலை நீங்கள் பார்ப்பது மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம். இலங்கைத்தமிழர்கள் இனியும் கவலைப்படவேண்டா. "டயலாக் டிவி" வழியாக உங்களுக்கு சிரிப்பொலி கிடைக்கும்.  மக்கள் டிவியைப் பார்த்துப் பார்த்து மண்டையை சொரிந்து கொண்டிருக்கும் மலேய தமிழர்கள் இனி "அஸ்த்ரோ" வழியாக சிரிப்பொலியைக் காணலாம். தமிழகமே! இன்னும் இசையருவிக்கே இடமளிக்காமல் இழுத்தடிக்கும் என் இதயம் இனித்த இம்சைகளின் சன்குழுமம் சிரிப்பொலியை சிதைக்காமல் அளிக்குமா என்பது சந்தேகமே! நான் சிரிப்பொலியென்றால் அவர்கள் ஆதித்யா என்கிறார்கள். நான் என் செய்வேன்..,மாற்றச் சொல்ல முடியாது அந்தப் பெயரை. ஆதித்யா என்பது என் கண்மணி கணிமொழியின் மகனல்லவா?  பாருங்கள் என்குடும்ப சிக்கலைஅது காய்ந்து போன இடியாப்பம் போன்றது,  பிரிக்க நினைத்தால் உடைந்து விடும். எந்தமிழ்மக்களே! உங்கள் துயரங்களைப் போக்க சிரிப்பொலி வரும் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தமிழகம் இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிப்பாய் சிரிக்கட்டும். -கலைஞர்

சனி, 14 பிப்ரவரி, 2009

"ஸ்பெசல்" காதலர்களுக்கு வாழ்த்துக்கள்

காந்திசிலை ஓரம் ஒதுங்குபவர்களுக்கும், மெரினா பீச் படகு மறைவில் பதுங்குபவர்களுக்கும், திருவல்லிக்கேணி லாட்ஜ்களில் ரூம் புக்செய்த நடுத்தரவர்க்க காதலர்களுக்கும், பார்க் செரட்டனில் ரூம் புக்செய்த உயர்ரக காதலர்களுக்கும், இதெற்கெல்லாம் வசதியின்றி மெரினாவுக்கு அப்பாயின்மென்ட் பெற்ற மற்றவர்களுக்கும், சாந்தி, தேவிபாரடைஸ் திரையரங்குகளில் ஓரசீட் புக்செய்தவர்களுக்கும், மெரினாபீச் குடையழகி கஷ்டமர்களுக்கும், 8+1 கஷ்டமர்களுக்கும், கோலாலம்பூர் ஓடியன், பினாங்கு வீனைஓடியன், சோலியா ஸ்டிரீட் ஆகியவற்றில் ஓரமாக காத்திருக்கும் கண்ணியருக்கும்,நேற்று இரவு 12 மணிக்கு தங்கள் கணவணின் செல் போனிலிருந்து பழைய காதலர்களுக்கு குருந்தகவல் அனுப்பிய கண்ணகியருக்கும்,நேற்று தங்கள் மணைவியர் செல்லுக்கு EC ரீசார்ஜ் பண்ணிய அப்பாவி கணவன்மார்களுக்கும் என் உளம் கணிந்த மணமார்ந்த காதலர்தின வாழ்த்துக்கள்