கலைஞருக்கு தையல் பிரிக்க டைலர்கள் சாரி மருத்துவர்கள் தயாராகிவிட்ட நிலையில் தையல்கள் பிரிக்காமலேயே தானாக பிரிந்துவிடும் அளவிற்கு மருத்துவர் (டி)ராமதாஸ் ஒரு அறிக்கையை ஆவி பறக்க வெளியிட்டிருக்கிறார். நான் தூங்கும் போதே என் கட்டிலை அதாவது ஆட்சிக்கட்டிலை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கலைஞர் பொத்தாம்பொதுவாகத்தான் சொன்னார், அதக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் அய்யா,"அப்பன் குதுருக்குள் இல்லை" என்ற கதையாய் வெளியேவந்து கலைஞர் சொல்றது என்னைத்தான் என்றும்., நாங்கள் உங்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டியதில்லை அந்த வேலையை உங்கள் உடணிருப்பவர்களே செய்துவிடுவார்கள் என்றும் அள்ளி விட அங்குள்ள எடுபிடிகள் இதைக்கேட்டு உசாராகி தங்கள் நடவடிக்கைகளை கொஞ்சநாளைக்கு நிறுத்திவிட முடிவு செய்துவிட்டனர்.. கலைஞர் ஒரு சினிமாக்காரர் அவர் இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று சொல்வதெல்லாம் சும்மா உல்லுல்லாய்க்கி.,, அதுமட்டுமின்றி கலைஞர் ஒரு நல்ல நடிகர் என்றும் விளாசிவிட்டார் அய்யா. ஏற்கனவே என் தம்பி திருமா சாகும்வரை 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டான்., இனிமேல் யார் உண்ணாவிரதம் இருந்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும், அதனால் தான் நான் எதுவுமே செய்யாமல் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறேன் எனவும் கலைஞரை கடைந்துவிட்டார் மருத்துவர். இனிமேல் தன் அன்பு மகன் அன்புமணிக்கு ஆப்பு வைக்க கலைஞரால் முடியாது என்பதை நன்கு கண்பாம் செய்த பிறகே இந்த அறிக்கையை விட்டாராம் அய்யா., நொந்து போன கலைஞர் உடணடியாக அம்மையார் சோனியாவுக்கு போன் போட அது ரிங் ஆகி கட் ஆகிவிட்டதாம். மறுபடியும் முயற்சித்த போது" நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை" என ரிகார்ட் வாய்ஸ் கேட்டதாம். வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்திலாடுறான் பாரு, ஆடி முடிஞ்சி எறங்கிவந்தா அப்புறந்தான்டா சோறு., கமெண்ட போடுங்க பங்காளியளா..,,
செவ்வாய், 24 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக