மருத்துவர் அய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவர் அய்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மார்ச், 2009

காருவெட்டி குரு திருவண்ணாமலையில் போட்டி

எத்தனை முறை சிறை சென்றிருப்பார் என அவருக்கே கணக்குத்தெரியாது.எத்தனை வழக்குகள் அவர் மீது உள்ளன என்று காவல் நிலயத்தில் கேட்டால் அவருக்கென தனி ஃபைலே இருக்கிறது என்கிறார்கள். வாயைத்திறந்தால் சென்னை பேசின் பிரிட்ஜை கிராஸான எபெக்ட் கிடைக்கும். அந்த அளவிற்கு அசிங்கம். "இங்க உள்ள போலீஸ்காரன் எவனும் இனிமே நைட்டுல அவனவன் பொண்டாட்டியோட  படுக்கமுடியாது என்றும்,ஆண்டிமடம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றும், சிவசங்கர‌ன் (ஆண்டிமடம் MLA) பொண்டாட்டி வெள்ளைப் புடவக் கட்டப்போறா என்றும் பேசக்கூடாத தகதா சொற்களை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அது மட்டுமின்றி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரை மிகமிக மோசமான வார்த்தைகளாலும், ஆற்காடு வீராசாமியை மிக மட்டமான வார்த்தைகளாலும் (வீராசமியை எவ்வளவு திட்டினாலும் அவர் கோபப்பட மாட்டார்.அவருக்கு பழகிப் போய் விட்டது) வதைத்த பெருமைக்காக காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது தமிழக அரசு

இதற்கு முன்பிருந்தே மருத்துவர் அய்யா டிராமா'தாஸ் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த நேரம். அதே சூட்டில் குருவும் திமுகவைக் குடைய ஆரம்பிக்க குருவை பிடித்துக் கொண்டு போய் உள்ளே போட்டுக் குமுறியது காவல்துறை .இதைக் கண்டு பொருக்கமுடியாத தமிழர்களின் தன்மாணத்தலைவர் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் அய்யா நைசாக கலைஞரிடம் தூது விட ஆரம்பித்தார்.

இப்ப இன்னா மேட்டருன்னா வரப்போற எலக்சனுல திருவண்ணாமலையில் காடுவெட்டி குரு வேட்பாளராக நிற்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பிணராக வருவதற்கு இந்த குருவிற்கு முழுத்தகுதியும் உள்ளது என அய்யா தெரிவித்துள்ளார். காடுவெட்டி என்பது ஊரின் பெயராக இருந்தாலும் முன்பு காடுகளை வெட்டி வெட்டி பஸ்களை மறித்துப் போட்டு பொது மக்களுக்கு பெருந்தொண்டாற்றிய இந்த குருவிற்கு உங்கள் மண்ணான வாக்குகளை வாரித்தெளித்து நாடாளமன்றத்தியையும் நாறவையுங்கள் என மருத்துவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  

அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி: "உதயசூரியன் சின்னத்திலே"கலைஞர் காமெடி கடிதம்

வியாழன், 26 மார்ச், 2009

எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டிதாயிருக்கு‍ - வைகைப் புயல் வைகோ

நேற்று தலைவ‌ர் கலைஞர் ஒரு அறிக்கைவிட்டாலும் விட்டார் அதக்கேட்டு சம்மந்தப் பட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு பதில் கொடுத்துக் கொண்டிருக்க அந்த அறிக்கையின் கதாநாயகன் மருத்துவரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூலாக கூட்டணி  பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.  மற்ற நேரங்களில் வீரத்தமிழ் பேசிக்கொண்டிருக்கும் மருத்துவர் தேர்தல் நேரம் வந்துவிட்டாலே அவரது குணம் கரைக்கு வந்த முதலை போல ஆகிவிடும். எதைப் பற்றியும் கவலைப் படமாட்டார், எதையும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் வரை மக்கள் தொலைக்காட்சியில் மசாலா படங்கள் ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

வேண்டுமானால்  இப்போதிருந் து மருத்துவரைக் கண்காணிக்க ஆரம்பியுங்கள். தேர்தல் முடியும் வரை என் அன்பு சகோதரி “மலர்ந்தும்  மலராத பாதிமலர் போல வளரும் விழிவண்ணமே,வந்து விடிந்தும் விடுயாத காலைப் பொழுதாக மலந்த தமிழ் அண்ணமே என்றெல்லாம் தாலாட்டுப் பாடுவார். தேர்தல் முடிந்து ஒரு நாலு MP சீட்டு கிடைத்தவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ஜெயா என்பவர் தமிழர்களுக்கு எதிரானவர் அவருடன் இனிமேல் கூட்டணி என்பதை நான் கண‌விலும் நினைக்க மாட்டேன் அவர் பெண்ணே அல்ல,கல்கத்தா காளி சிரிலங்கா சூலி என்று கலைஞர் பாணியில் ஒரு அறிக்கையை விட்டு விட்டு, என் ராசாவின் மனசில வடிவேலு பாணியில் அண்ணே! சௌக்கியமாண்ணே! உங்களப் பாத்து எத்தன நாளாச்சிண்ணே! நீங்கதாண்ணே தமிழினத்தின் தலைவர் என்று சொல்வார். உடனே அதைக்கேட்டு மயங்கும் கலைஞர் "காது வலித்தது கைகள் துடித்தது" என்ற பாணியில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மீண்டும் அவரை சேர்த்துக் கொள்வார்..  

ஆனால் நம்ம அண்ணன்  வைகோ கொஞ்சம் டிஃப்ரன்ஸ். நேற்று வந்த அறிக்கையில் வைகோவை நேரடியாகத் தாக்காத‌ நிலையில் கள்ளத்தோணி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒரு பதிலறிக்கையைக் கொடுத்துவிட்டார். அதில் இதுவரை ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியதே இல்லை.ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வீரமானவர்கள் என்றால் கள்ளத் தோணியில் செல்லுங்கள் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத் தமிழர்களை காக்க கள்ளத்தோணி என்ன? பிளாஸ்டிக் கேண், சைக்கிள் டியூப், தெர்மாக்கோல் என எது கிடைத்தாலும் போவோம் என்று சொல்வோம், ஆனா போக மாட்டோம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா?. வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம். அது தான் இன்றைக்கு நல்ல ரேட்டிங்கில் போய் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போது, அதை காலம் கடந்த முயற்சி என்றாலும், பாராட்டத்தக்கது என்று முன்பு சொன்ன திருமாவளவன் தற்போது அதை நாடகம் என்று சொல்லியிருக்கிறார். காரணம் திருமா இருந்தது சாகும் வரை 4 நாட்கள் உண்ணாவிரதம். அம்மா இருந்தது அஜீரணக் கோளாரு உண்ணாவிரதம். கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக்கொள்ள இலங்கை தமிழர்களை முதல்வர் கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் கூறியிருக்கிறார் வைகோ.எலக்சன் வந்துட்டா எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.,

ஆனால் அதே காங்கிரஸ் கூட்டணியினில் 9+1 சீட்டு கேட்டு கையில துண்டு போட்டு பேரம் பேசிப்பார்த்த மருத்துவர் , பேரம் படியாத பிறகு தான் இந்த தமிழருக்கு விரோதி காங்கிரஸ் அரசு என இரு கதையை விட்டிருக்கிறார்.ஒருவேளை பேரம் படிந்திருந்தால் தமிழர்களைக் “காக்க காக்க காங்கிரஸ் தான் சிறந்தது என்றும் ஒரு அறிக்கையை விட்டிருப்பார்.

மருத்துவர் அய்யாவை மண‌மார நம்புபவர்களுக்கு கடைசியாக ஒன்று. மருத்துவர் அய்யாவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது குற்றால  சீசனுக்கு வர்ர விசிட்டர்கிட்ட பண்ணுற யாவரம் மாதிரி.  வெறும் 3 மாசம் தான். சீசன் முடிஞ்சிட்டா அவரு வேற எடத்துக்கு எஸ்கேப் ஆயிடுவார்.. எப்போதுமே யாவரம் நல்லா இருக்கும்னு நம்பி காலம்பூரா கடையப் போட்டா தலையில துண்ட போட்டுக்கிட்டு போகவேண்டியது தான்.

அடுத்து வருவது:ராயப்பேட்டை ராமுவின் நினைவுகள் "சம்சாரம் அது மின்சாரம்"

புதன், 25 மார்ச், 2009

ஓய்ந்த கூட்டணி, பாய்ந்த கலைஞர்

நேத்து நம்ம அறிக்கையை கலைஞர் படிச்சிருப்பாரோ என்னவோ,இன்னிக்கு அவர் எழுதியிருக்கிற கேள்வி‍-பதில் அறிக்கை ரொம்பவே சூடாக சுவையாக இருக்கிறது. கலைஞரிடம் இருந்து வரும் மொக்கை அறிக்கைகள்,மொக்கை கடிதங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் இது போன்ற ரசனையான அறிக்கைகளும் வெளியாகும். அந்த வகையில் கலைஞர் இன்று வெளியிட்டுள்ள கரம் மசாலா அறிக்கை.

கேள்வி: இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது தமிழக முதல்-அமைச்சரும் அந்த பிரச்சினையை கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

 பதில்: இறையாண்மையைக் காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை மறுக்கவோ, மறைக்கவோ, அலட்சியப்படுத்தவோ நானும் சரி- என் தலைமையிலே உள்ள தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை. டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கை பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள- காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள சேனாதிபதிகள் சமீப காலமாக முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா? இவைகளைப் பற்றித்தான் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் அல்லும், பகலும் ஆராய்ச்சி செய்து- அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அலையில் நம்மைப் பார்த்து இலங்கை தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

எச்சரிக்கை: அவர் தவறிப்போய் 2002-ம் ஆண்டு சட்டமன்றத்திலே முதல்-அமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம்- தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவோமென்று- அதை நினைத்து ராஜபக்சேவுக்கு பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார். எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: மேடையேறி இலங்கை தமிழர்களைப் பற்றி பேசினால் இந்த அரசு அவர்களை கைது செய்து விடுகிறது என்று ஒரு பிரசாரம் நடைபெறுகிறதே?

பதில்:காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும் - இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

கேள்வி: அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில் தான் இருந்தது. இப்போது சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்-அமைச்சரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்: அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்தில்- தம்பி பரிதி இளம்வழுதி இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு கவனஈர்ப்பு தீர்மானத்தை அவையிலே எழுப்ப முனைந்தபோது- அதற்கு அனுமதி மறுத்து அ.தி.மு.க. அரசின் சார்பில் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா- இலங்கை பிரச்சினையிலே இந்தியா தலையிட முடியாது- அது ஒரு அயல் நாட்டு பிரச்சினை என்று பேசி அது இன்றும் நடவடிக்கை குறிப்பிலே இருக்கிறதே, அதை டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விடலாமா? என்று கூறியுள்ளார்.

தேர்தல் பயிற்சிகளில் (?) முழுமூச்சாய் ஈடுபட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு இந்த கடிதம் மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.

கடைசியா ஒரு சந்தேகம் தலீவரே: இந்த அறிக்கையில் கல்லத்தோணி,சேனாதிபதிகள் போன்ற “கீவேர்ட்ஸ்  வைக்கோவையும் சேர்த்துத் தானே குறிக்கிறது தலீவரே?

தென்னமரத்துல தேள் கடிச்சா பன மரத்துல நெரிகட்டிச்சாம்