வெள்ளி, 19 ஜூன், 2009

சூடான சுவையான கபாலி பதில்கள்

வசந்தம் கேட்டது...,

* எங்கள் வீரத்தளபதி அண்ணன் ரித்தீஸின் வெற்றி ?

இந்த உலகத்தில் பிறக்கும் ல‌ட்சம் பேர்களில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்ட நட்சத்திர மச்சத்தோடு பிறப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் அந்த லட்சத்தில் ஒருவர் தான் அண்ணன் வீரத்தளபதி ரித்தீஸ். அவர் போகிற போக்கைப் பார்த்தால் வருங்காலத்தில் பாரதப் பிரதமராக வருவதற்கு கூடத் தகுதி (மேட்டர்) இருக்கிறது. கீழேயுள்ளதையும் சேர்த்துப் படிங்க‌

தருமன்,வேளச்சேரி கேட்டது..,

*கபாலி சார், தமிழக அரசியலின் வருங்காலம் எப்படி இருக்கும்? மிகச்சிறப்பாக இருக்கும்.காரணம் என்றைக்கு மக்கள் தங்கள் வாக்குகளை காசுக்காக விற்க ஆரம்பித்துவிட்டார்களோ அன்றைக்கே தமிழகத்தின் தலைவிதி மாறிவிட்டது. இனி வரும் தேர்தல்களில் காசு மட்டும் தான் பிரதானமாகப் பார்க்கப்படும். மற்றபடி வேட்பாளர் யார்? அவரது தகுதி என்ன‌ என்பது பற்றியெல்லாம் இனி மக்கள் கவலையே படமாட்டார்கள்.

முத்து கேட்டது..,

*கபாலி சார்.அரசியல்வாதியாக என்ன இருக்க வேண்டும்? என்ன இருக்கக் கூடாது?

பணம் இருக்க வேண்டும், மானம் ரோசம் இருக்கக்கூடாது.

அஜ்மீர் துபாய் கேட்டது..,

*ஸ்டாலின் துணைமுதல்வரானதற்கு மமகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்களே?

அவர்கள் முழு அரசியல்வாதிகளாகி விட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஆடு பகை குட்டி உறவாம் என கிராமங்களிலே ஒரு பழமொழி சொல்வார்கள். அதே போல தலைவரிடம் கறக்க முடியாமல் போனதால் தான் இப்போதிருந்தே தளபதிக்கு எண்ணெய் தடவ ஆரம்பித்து விட்டார்கள்.

பிரபு, அமைந்தக்கரை கேட்டது...,

* நீங்கள் டிவியில் விரும்பிப் பார்க்கும் நிகழ்சி எது கபாலி?

பொதுவாக செய்திகள்,அரசியல் அலசல்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். காமெடி காட்சிகள், திரைப்படங்கள் விரும்பிப் பார்ப்பேன். குறிப்பாக தினசரி காலையில் 8 மணிக்கு வின் டிவியில் வரும் “செய்திகளும் நிஜங்களும் நிகழ்ச்சி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதிலே வரும் டி.எஸ்.எஸ்.எஸ் மணியின் செய்தி அலசல்களுக்கு இணையாக யாருமே இல்லை.

பாலாஜி கேட்டது..,

* எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

விஜயகாந்தின் அரசியல் இன்றைய நிலையில் எடுபட வாய்ப்பேயில்லை. ஆனால் அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாளைய அரசியலுக்கு இன்றைக்கே துவக்கம் சிறந்த முறையில் அஸ்திவாரம் போடுபவர். என்றாவது ஒருநாள் தமிழத்தின் முதல்வராக நிச்சயம் வருவது உறுதி. ஆனால் இன்று அவரிடம் இருக்கும் கொள்கை உறுதி வருங்காலத்தில் இருக்குமா என்பது தெரியாது. அதேபோல இந்த விசயங்கள் முழுக்க முழுக்க விஜயகாந்திற்கு மட்டும் தான் பொருந்துமே தவிர அவரது கட்சியில் இருக்கும் பழைய அரசியல்வாதிகள் யாருக்கும் பொருந்த வாய்ப்பேயில்லை.

ராஜேஸ்வரன் திருச்சி கேட்டது...,

*உண்மையிலேயே மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு அதிகமா? அழகிரிக்கு அதிகமா?

ஆஹா! இந்த ஒரு கேள்வியக் கேட்டு ஏற்கனவே ரணகளம் ஆனது பத்தாதா? மறுபடியுமா? ஆளவிடுங்க சாமி.

*ஜெயலலிதா ஆட்சி - கலைஞர் ஆட்சி ***ஒப்பிடுக‌?

## ஜெயலலிதாவின் திட்டங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும். ஆனால் கலைஞரின் திட்டங்கள் ஒரே ஒரு நாள் பயன் தரக்கூடயதாக மட்டுமே இருக்கும்.

##ஜெ*யின் ஆட்சியிலே அனைத்துத் துறைகளும் கட்டுப்பாட்டிலே இருக்கும். ஸ்டிரைக், மறியல் என்று கிடையவே கிடையாது. ஆனால் கலைஞர் ஆட்சியில் தினம் ஒரு மறியல் நித்தம் ஒரு ஆர்ப்பாட்டம் என்று தான் இருக்கும்.

##ஜெ**யின் மைனஸ் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடித்துவிடுவார். கலைஞர் அப்படியல்ல, எதையும் நிதானமாக செய்வார்.

##பொதுவாகவே ஜெ**யின் ஆட்சியில் கொலை,கொள்ளைகள் குறைவாக இருக்கும்.ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். காவல்துறை கட்டுப்பாட்டிலே இருக்கும் ஆனால் கலைஞர் ஆட்சியில் இவர்களில் யாருக்கும் கட்டுப்பாடே கிடையாது.

திலீபன் கேட்டது..,

*கபாலி, இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழ்க்கை எப்படியுள்ளது?

கடும் நரகம் என்று சொல்வார்களே அதேபோலத் தான். காரணம் புலிகளின் மீது சிங்கள அரசிற்கு இருந்த வெறி அவர்கள் கண்ணில்படும் அனைத்துத் தமிழர்களையும் புலிகளாகத்தான் காட்டுகிறது.அது இனி மாற வாய்ப்பேயில்லை.தமிழர்களுக்கான அரசியலமைப்பு அமைந்தாலும் அது ஈராக் அரசு போல ஆப்கன் அரசு போல அடிமை அரசாகத் தான் இருக்கமுடியும். இப்போது அங்கே இருக்கும் தமிழர்களின் வாழ்க்கை 50 வருடங்கள் பின்னோக்கி போய்விட்டது. இனிமேல் அவர்களுக்கு புணர்வாழ்வு கொடுத்து,கல்வி,வேலை கொடுத்து அவர்கள் முன்னேற எப்படியும் 10 வருடங்களுக்கு மேல் ஆகும். பாவம் இலங்கையில் தமிழர்களாகப் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக துயரங்களை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.

*பிரபாகரனின் தோல்வி, சிங்கள அரசின் வெற்றி என்ன காரணம்?

ஒரே ஒரு காரணம் தான். அதற்குப் பெயர் கருணா.

*சிங்கள ராணுவம் நடத்திய‌ போர் யாரை முன்மாதிரியாகக் கொண்டது?

முன்மாதிரி என்று சொல்லவேண்டுமானால் அது முழுக்க முழுக்க இஸ்ரேல் பின்பற்றும் போர்தந்திரம் தான். அதாவது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய ராணுவத்தினர் குறிவைப்பது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைத் தான். அதைத் தான் இந்தப் போரில் சிங்கள அரசு பின்பற்றி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்களைக் கொன்று குவித்தது. அதேபோல தமிழ் கர்ப்பிணிகளின் கட்டாயக் கருக்கலைப்பு. இஸ்ரேல் பற்றி மற்றும் ஓர் செய்தி. இலங்கை அரசு கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு அதிநவீன ரேடார் கருவி வாங்கியதாக ஒரு செய்தி வந்ததல்லவா? அது வாங்கிய பிறகு தான் புலிகளின் இருப்பிடங்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். அந்த நவீன ரேடார் கருவியைத் தயாரித்தது இஸ்ரேல் தான். அதை இயக்குவதற்கு பயிற்சி கொடுத்தது சாட்சாத் இந்தியா தான்.

சிறந்த $ கேள்வி கேட்டவர் முத்துவாழ்த்துக்கள்

உங்கள் கேள்விகளை என்ற kabaali007@gmail.com என்ற‌ முகவரிக்கு அனுப்பி வையுங்கள். கேள்விகளை கமேண்டிலும் பதிவுசெய்யலாம்

1 கருத்து:

வீணாபோனவன் சொன்னது…

கபாலி சார், தங்களின் பதில்கள் அனைத்தும் நன்று, இலங்கைத் தமிழர் பற்றிய பதில்கள் தவிர!. தமிழ் கர்ப்பிணிகளின் கட்டாயக் கருக்கலைப்பு என்பது ஒரு கட்டுக்கதையாகவே தென்படுகிறது.

//அந்த நவீன ரேடார் கருவியைத் தயாரித்தது இஸ்ரேல் தான். அதை இயக்குவதற்கு பயிற்சி கொடுத்தது சாட்சாத் இந்தியா தான்.//
அதேபோல், 1980ன் ஆரம்ப காலகட்டத்தில் புலிகளுக்கு பயிற்ச்சி அளித்ததும் இந்தியா தானே? இஸ்ரேல், பாலஸ்தீன், ஈராக், உகண்டா, ருவாண்டா, ஏன் ஸான்சிபார் போன்ற நாடுகளைக் கூட இலங்கையுடன் ஒப்பிட முடியாது. கென்யா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 1970களில் இந்தியக் குடிமக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை ஒரு நல்ல உதாரணம். ஏனேனில் அவர்கள் அனைவரும் "வந்தேரியவர்கள்" மற்றுமன்றி நல்ல நிலையில் வாழ்ந்து காட்டியவர்கள். எனக்குத் தெரிந்து அதில் பல குடும்பங்கள் இன்றும் மேலை நாட்டில் நன்றாகவே வாழ்கின்றனர். இலங்கையை பொறுத்தவரை, எந்த இனத்தவரையும் குறை காண முடியாது. வேற்று இனத்தவரை என்று அவர்கள் மதிக்கிறார்களோ, அன்று தனியும் இந்த தாகம். என் பாலிய ஈழ நண்பர்கள் கூட இன்று என்னை சிங்களவன் என்று கூறுகிறார்கள்,சிரிப்பதா அழுவதா? கபாலி சார், தங்களின் இந்திய நுண்னரசியல் வரவேற்க ஒன்று, இருப்பினும், சர்வதேச அரசியல் சற்று மாறுபட்டது.ஓர் ஈழத்து பெண்மணியின் வயிற்றில் பிறந்த ஒரு தென்னக இலைங்கைத் தமிழன்.

-வீணாபோனவன்.