திங்கள், 22 ஜூன், 2009

கல்ல ரயிலேறி வந்தது கலைஞரின் குற்றமா??

கச்சத்தீவு சம்பந்தமாக செல்வி ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க முடியாமல் வழக்கம் போல தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள ஒரு மழுப்பல் அறிக்கை யும் அதற்கான விளக்கங்களும் தான் இது . கலைஞர் திருட்டு ரயில் ஏறிவந்தார் என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனால் அதிலே ஏதோ அவதூறு இருப்பதாக நினைத்துக்கொண்டு பதட்டத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் கலைஞர். திருட்டு ரயில் ஏறி வருவது என்பது என்ன தவறான காரியமா? திருட்டு ரயில் ஏறிவருவது தவறான காரியம் அல்ல.

ஆனால் செல்வி.ஜெயலலிதா அவர்கள் கேட்கும் கேள்வி, திருட்டு ரயில் ஏறிவந்தவர்கள் ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலே எவ்வாறு மூன்றாவது இடத்தைப் பெறமுடிந்தது என்பது தான். இந்தக் கேள்வியின் சாராம்சத்தை நன்கு உணர்ந்த தலைவர் கலைஞர் இந்த விசயம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக அள்ளிபூசிய மழுப்பல் அறிக்கையின் சில சாராம்சங்கள் இதோ.

// கோடைவாசஸ்தலமான, கொடை நாடு எஸ்டேட்டில் போய் மாதக் கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாடம் அறிக்கை விட்டு, அதன் மூலமாக தன் கட்சியின் அரசியலை நடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு நாள் தவறினாலும் தவறாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி யாரும் எந்தக் கவலையும் படுவதில்லை.//

ஏழையின் பங்காளரார் என சொல்லிக்கொள்ளக் கூடிய‌ தலைவருக்கு இதெல்லாம் உறுத்தக்கூடிய விசயம் தான். அன்றாடம் மொக்கை கடிதங்களை எழுதி அதற்கென்றே ஒரு நாளிதழையும் நடத்தி உடன்பிறப்புகளின் பொறுமையை தினம் சோதிப்பது யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் தலைவரே!

// அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று அறிக்கை விடுபவரும் கவலைப்படுவதில்லை. ஏதோ தன் பெயர் ஏட்டிலே வந்தாலே "ஜென்ம சாபல்யம்'' அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு அறிக்கை விடுகிறார்.//

தலைவரே! அவசரப்பட்டு உங்களப் பத்தியே சில கருத்துக்களை எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன். யாராவது விழா எடுத்து தன்னை புகழ்ந்து பாராட்ட மாட்டார்களா என தினம் ஒரு விழா எடுப்பது யார் என்பது உடன்பிறப்புகளுக்குத் தெரியாதா என்ன? நித்தம் ஒரு விழா எடுத்து அதை விளம்பரப்படுத்தி, கொடி கட்டி போஸ்டர் ஒட்டி கலைவாணர் அரங்கத்திலேயே கிடையாய் கிடப்பது நீங்கள் தானே தலைவரே!

// இன்னும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் என்றால் தமிழக சட்டமன்றத்தில் 29-3-1972 அன்று கச்சத்தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம் பெற்று, அதற்கு நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில் "நாம் கச்சத்தீவு குறித்த நியாயமான விவகாரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். கச்சத்தீவு பிரச்சினை இந்திய அரசு தலையிட்டு சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை'' என்றும் தெரிவித்திருக்கிறேன்.//

ஹைதர் காலத்திலே நடந்த அதரப் பழய கதைகளை எழுதுவதை விடுத்து புதிதாக என்ன செய்தீர்கள் என சொல்லுங்க தலைவரே! நல்ல வேள இதுல காந்தி உப்புசத்தியா கிரகம் பண்ணியது பற்றி தகவல் வரல.

// அதுமட்டுமல்ல; 1974-ம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி திடீரென்று மத்திய அரசினால் கச்சத்தீவு பற்றிய அறிவிப்பு வந்தது. உடனடியாக அதே ஆண்டு ஜுன் 29-ம் தேதியன்றே சென்னை தலைமை செயலகத்திலே அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அன்றைய பிரதமருக்கு நான் எழுதினேன்.//

ஆக இலங்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் அன்று முதல் இன்றுவரை கடிதம் மட்டும் தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். போன் செய்வதே கிடையாது. அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியது என்பது இறந்த காலம். இன்றைக்கு இருக்கும் பிரதமர் இலங்கை அதிபரின் மிக நெருக்கமான உறவினர் போல இருக்கிறார். அதனால் நீங்கள் இதைப் பற்றி அவருக்கு கடிதம் எழுதுங்கள் அல்லது தந்தி அடியுங்கள். ஆனால் போன் மட்டும் செய்துவிடாதீர்கள்.

//``நல்ல வகை மீன் கிடைக்கும் என்று எண்ணுகின்ற சில பேராசை கொண்ட மீனவ மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது`` என்று நான் பேரவையில் கூறியதை எடுத்துக்காட்டி, மீனவ மக்களை பேராசை கொண்டவர்கள் என்று நான் கூறிவிட்டேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கண்டனம் தெரிவித்திருக்கிறார். நல்ல வகை மீன்கள் இந்திய கடல் எல்லைக்கு அப்பால் தான் கிடைக்கும் என்றும், அதனால் மீனவர்கள் அந்த இடங்களுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள் என்றும் அந்தக் கருத்தை பேசியதே 20-4-1992 அன்று இதே சட்டசபையில் ஜெயலலிதாதான். அவரே அதைப் பேசிவிட்டு, அதை நான் எடுத்துக்காட்டியதற்காக எனக்கு கண்டனம் தெரிவிப்பேன் என்று அறிக்கை விட்டிருப்பது நல்ல கோமாளித்தனம்..//

//நல்ல வகை மீன்கள் இந்திய கடல் எல்லைக்கு அப்பால் தான் கிடைக்கும் என்றும், அதனால் மீனவர்கள் அந்த இடங்களுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள்‍// - செல்வி.ஜெயலலிதா

// நல்ல வகை மீன் கிடைக்கும் என்று எண்ணுகின்ற சில பேராசை கொண்ட மீனவ மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது``//- இது நீங்கள்

இரண்டு செய்திகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே எடுத்துக்காட்டியதற்கு நன்றி தலைவரே!

//ஒரு முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் முதல்-அமைச்சரைப் பற்றி தன் அறிக்கையிலே அடுத்து கூறும்போது, "திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய தகுதியை பற்றி தமிழ்நாட்டு மக்கள் தான் எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்//

மடியில் கணம் இருந்தால் தான் வழியிலே பயமிருக்கும் என்பார்கள். அப்டின்னா அந்த திருட்டு ரெயில் சமாச்சாரத்தநீங்க ஏத்துக்கிறீங்கன்னு தானே அர்த்தம் தலைவரே! அது என்ன திருட்டு ரயில்? அது என்ன பர்மிட் இல்லாமலா ஓடுகிறது? இனி அடுத்த முறை திருட்டு ரயில் என்று எழுதுவதை விடுத்து வித்-அவுட் என எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

//அவரது இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்?. எப்படி இன்று கொட நாட்டில் தங்கியிருக்கிறார்?. எங்கிருந்து வந்தது இந்தச் சொத்து என்றெல்லாம் திருப்பி கேள்வி எழுப்ப நமக்குத் தெரியாதா?.//

தலைவரே! அந்தக்காலத்திலேயே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி ஏராளமான படங்களில் நடித்தவர் செல்வி.ஜெயலலிதா. எனவே அவரிடம் இவ்வளவு சொத்து இருப்பதில் ஆச்சயரியமில்லை. ஆனால் அந்தக் காலத்திலே கதை வசனம் எழுத வெறும் 1000 ரூபாய்க்கும் குறைவாகத் தான் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதால் தானே இந்தக்கேள்வியே எழுகிறது.

// கச்சத் தீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்தக் தகவலை இலங்கை தூதரகமே மறுத்து அப்படி எந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகளும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து, அது ஏடுகளில் வெளி வந்ததை கூடப் படிக்காமல் - ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பது அவருடைய அறியாமையை தான் எடுத்துக் காட்டுகின்றது.//

ஏது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்களா? அய்யகோ என்ன இது கொடூரம். அதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்றும் தான் ராஜபக்சே சொல்லியிருந்தார், அதுவும் பத்திரிக்கைகளில் வந்ததே தலைவரே! அப்படின்னா அதையும் நம்பலாமா?

// ``கச்சத்தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல்-அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்`` என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும் மறந்து ஒரு உண்மையை வெளியிட்டிருக்கிறார்.//

இலங்கையிலே நடக்கும் போர் இன்னொரு நாட்டின் உள்விவகார பிரச்சினை. அதிலே நாம் ஓரளவிற்கு மேல் தலையிடமுடியாது என முன்பு யாரோ சொன்னது எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது தலைவரே!

// எனவே, அவரது அறிக்கைக்கான பதிலை மேலும் வளர்க்காமல், ``திருட்டு ரெயில்`` போன்ற அவரது தரக்குறைவான வார்த்தைகளால் உடன்பிறப்பே, உனக்கும் மற்ற உடன்பிறப்புகளுக்கும் கொதிப்பு, கோபம் வருமேயானால், அதனை அடக்கிக் கொள்ள ஏற்கனவே முன்னாள் பேரவை தலைவர், தம்பி காளிமுத்து தயாரித்து வெளியிட்டுள்ள அம்மையாரை பற்றி ``அகராதி பட்டியல்`` ஒன்று இருக்கிறது. அதைப் படித்துப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.//

அதைப்போல ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே இதுபோன்ற அறிக்கைகளைக் கண்டு நமக்கு கோபம் வராது. காரணம் திருட்டு ரயில் ஏறி வந்தது உண்மையாதலால் தான் தலைவருக்கு அந்த வார்த்தை உறுத்துகிறது. உனக்கு இதற்கு மேல் விளக்கம் தேவையென்றால் தீப்பொறி ஆறுமுகம் பேசிய "கூடாத சேர்மானம்" என்ற ஒலி நாடா இருக்கிறது. அதைக்கேட்டு திருப்தியடைந்து கொள்.

நமது கழுதையில் சரவெடி "கலைஞர்- AR ரகுமான் காமெடி சந்திப்பு" இரண்டாம் பாகம் நாளை படிக்கத்தவறாதீர்கள்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Good post boss

பெயரில்லா சொன்னது…

But still there are lot of followers for Kalaignar. That is the comedy of this millenium

பெயரில்லா சொன்னது…

He might have done a lot to tamil soceity in the past decades. But what he is doing for the people now?
Prices of all the essential ingredients not at all decreasing!
Will the CM eat the 1 rupee ration rice?

பெயரில்லா சொன்னது…

Sriram,
"But what he is doing for the people now???""

nee ippadi poludhu pogaama moonu thadavai comment podura alavu santhosamaa valnthukittu irukka..
idhukku mela unakku avar enna panna venumbaa..