சனி, 13 ஜூன், 2009

கபாலியின் சூடான சுவையான‌ பதில்கள்

*இராகவன் நைஜீரியா கேட்டது

எப்படி இருக்கீங்க. நலமா?

இதுவும் கேள்விதான்,ஆனா கணக்குல வரல. நலம்ணே! நீங்க.

1. அரசியல் இப்போ எப்படி இருக்கு?

கலைஞர் கேட்ட கப்பல்துறைய அவங்களே எடுத்துக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாம அத தமிழகத்திலேயே வாசனுக்கு குடுத்து கலைஞரை வெறுப்பேத்தியிருக்கிறது தான் உட்சபட்ச காமெடி.

2.. முன்னேற்றம் உண்டா? 3. முன்னேற வழி உண்டா?

முன்னேற்றம் உண்டு**தலைவர்களுக்கு

முன்னேற வழியே இல்லை** தொண்டர்களுக்கு

4.நீங்களும் நானும் சேர்ந்து தனிக் கட்சி ஆரம்பிக்கலாமா? 5. டாஸ்மார்க் அன்பர்கள் ஓட்டுப் போடுவார்களா?

அண்ணனுக்கு சம்பாதிக்க ஆச வந்திருச்சி போல. டாஸ்மாக அன்பர்கள நம்ப முடியாது. காரணம் நமக்கு போடவேண்டிய ஓட்ட போதையில மாத்திகுத்திருவாங்க.

6. கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் யாருடன் கூட்டு சேரலாம்?

நம்ம கூட யார கூட்டுசேக்கலாம்னு பெருசா திங் பண்ணுங்கண்ணே!

7. டாஸ்மார்க் வியாபரம் இப்போ எப்படி இருக்கு? 8. சால்னா எல்லாம் ஒழுங்கா கிடைக்கின்றதா?

எல்லா நாளிலும் சீசன் இருக்கும் ஒரே வியாபாரம் டாஸ்மாக் தான். சால்னா ஓகே தான். காசுதான் ரொம்ப ஜாஸ்தி.

9. டாஸ்மார்க் சரக்கு பெஸ்டா (அ) சுண்ட கஞ்சி பெஸ்டா? 10. டாஸ்மார்க் சரக்கில் எது பெஸ்ட் - விஸ்கி / பிராண்டி / ரம் / ஜின்? யாமறிந்த போதையிலே இதுபோல வேறெதுவும் இல்லையாம்னு சொல்றதுக்கு இது எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணினவங்க யாராவது இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க.

//மேலும் கேள்விகள் இருக்கு //அண்ணே! இனிமே தயவு செஞ்சி 1 இல்லாட்டி 2 மட்டும் கேளுங்க சாமி. முடியல‌..,

*மகேஷ் கேட்டது..,

கேள்வி: கபாலி சார்,இலாபம் தரக்கூடியது ஜவுளியா, கப்பலா?

மகேஷ் சார். ஜவுளியும் இலாபம் தான், ஆனா ஜவுளிய விட கப்பல் தான் இலாபம். ஆகா! நீங்க எந்த இலாபத்த கேட்குறீங்கன்னு தெரியாம எதையோ உளறிட்டேன்னு நினைக்கிறேன். நீங்க மேல நாட்டுக்கு இலாபம் தரக்கூடயதுன்னு சேர்த்துப் படிங்க.

*திலீபன் கேட்டது..,

கேள்வி : கலைஞர் பிறந்த நாளுக்கு ராஜபசக்சே வாழ்த்து தெரிவித்தாரா இல்லையா?

நிச்சயமா நடக்க சான்ஸே இல்லை. ஏன்னா இலங்கை சம்பந்தமாக போன்பேச முயற்சி பண்ணினா கலைஞர் வீட்டுப் போன் அவுட் ஆப் ஆர்டர் ஆயிடும். ஒருவேள (வாழ்த்து) கடிதம் எழுதியிருப்பாருன்னு நெனக்கிறேன்.

கேள்வி: தமிழ் நாட்டில் எனக்கு நிறைய சொந்தங்கள் இருக்கிறார்கள் அப்டின்னு ராஜபகசே பேட்டி கொடுத்திருந்தாரே, அது யாரு கபாலி?

தமிழ் நாட்டில் கலைஞர் குடும்பத்தில் தான் நிறைய பேர் இருக்கிறார்கள். அவுங்களாகக் கூட இருக்கலாம் திலீபா!

*அப்துல் ரஹ்மான்,துபாய் கேட்டது..,

கேள்வி: கபாலி சார், நான் துபாய் வந்து நிறைய சம்பாதிசிட்டேன். இனி ஊருக்குப் போய் ஏதாவது செஞ்சி பிரபலம் ஆகுறதுக்கு ஏதாவது ஐடியா குடுங்களேன்?

ஓகே! இதோ, சென்னை வந்தவுடன் நேரா மூர் மார்க்கெட்டுக்கு போங்க, அங்க இருக்கிற புத்தகக் கடைகளில் "ஈசியா முன்னேற 22 வழிகள்" அப்டின்னு நம்ம வீரத்தளபதி ரித்தீஸ் எழுதின புத்தகம் இருக்கான்னு கேளுங்க. அப்படியில்லைன்னா நேரா ரித்தீஸ்கிட்ட போய் உதவியாளரா சேர்ந்திடுங்க. அவருக்கு போஸ்டர் அடிக்கும் போது உங்க படத்தையும் போட்டுக்கலாம்.

* தர்ஸினி கேட்டது..,

கேள்வி: கபாலி அண்ண! தமிழ் நாட்டுல இருக்கிற தொலைக்காட்சிகளில் இன்னிக்கு வரைக்கும் முன்னேற்றமில்லாத‌ மகா மட்டமான தொலைக்காட்சி எது?

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது சகோதரி

* பூதக்கண்ணாடி கேட்டது...,

கேள்வி: நீங்கள் கலைஞரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள் தலைவரே?

கலைஞர் டிவி மானாட மயிலாட நிகழ்ச்சியில மறுபடியும் நமீதாவ சிபாரிசு செஞ்சது யாருன்னு கேட்பேன்.

கேள்வி: கலைஞர் அடுத்து ஏதோ ஒரு படத்துக்கு கதை எழுதுறாராமே?

அவருக்கு அதை விட்டால் வேறு ஏது வேலை. எல்லாரும் எப்போதும் வேலை செய்து விட்டு ஓய்விலே ஏதாவது எழுதுவார்கள்.இவர் எப்போதும் எழுதிவிட்டு ஓய்விலே பணிசெய்வார். ஏற்கனவே உளியின் ஓசை என்ற பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.கருப்பை வெள்ளையாக்கும் கடின உழைப்புதான் இது. தெரியாத்தனமா தியேட்டருக்குள்ள புகுந்து மாட்டிக்கிறவங்க பாடு தான் திண்டாட்டம். அதிலும் கலைஞர் டிவி டாப் 10 மூவீஸில் கிட்டத்தட்ட 5 வாரம் உளியின் ஓசை தான் முதலிடத்தில் இருந்தது. அதை நினைத்து நினைத்து எனக்கு இன்றைக்கும் சிரிப்புதான் வருகிறது.

*ராஜேஸ் கேட்டது..,

கேள்வி: எஸ்வி.சேகர் புதியதாக ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறாராமே? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்வி.சேகர் காமெடி நடிகர் என்பதால் அவர் எதைச் செய்தாலும் காமெடியாகப் போய்விடுகிறது. அகில இந்திய ஆரிய முன்னேற்றக் கழகம் தான் கட்சி பேரு. இந்த கேள்விய நீங்க கேட்டவுடன் எனக்கு தங்கம் படத்துல ஒரு வர்ற ஒரு டைலாக் ஞாபகத்துக்கு வந்திருச்சி. சத்யராஜ்: மரியாதையா கட்சிக்கு ஒரு பேரச்சொல்லிட்டுப் போ.

கவுண்டமனி: வா.ப.கா.க அப்படின்னு வச்சிக்க‌

சத்யராஜ்: அப்டின்னா...?

கவுண்டமனி: அட வாழப் பழ காமெடி கழகம்யா....

*இணைய நண்பன் கேட்டது..,

கேள்வி: கபாலி! கலைஞருக்கும் வைகோவுக்கும் என்ன வித்தியாசம்? கலைஞர் எது சொன்னாலும் மக்கள் நம்புவார்கள். வைகோ எது சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். அது ஏன்னே தெரியல இன்னிக்கு வரைக்கும் வைகோவின் அரசியல் வாழ்க்கை கயிறருந்து அலையில் தள்ளாடும் படகு போலத்தான் இருக்கிறது.

கேள்வி : இவ்வளவு எதிர்ப்பு இருந்தும் காங்கிரஸ் எப்படி தனிப்பெரும்பான்மை பெற்றது?

இது காங்கிரஸூக்கு கிடைத்த வெற்றியல்ல. பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வி. காரணம் வாஜ்பாய் அளவுக்கு கூட அத்வானியை யாரும் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.

உங்கள் கேள்விகளை kabaali007@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். கேள்விகளை கமெண்டிலும் பதிவு செய்யலாம்.

கருத்துகள் இல்லை: