திங்கள், 15 ஜூன், 2009

கொலை வெறியாக மாற்றிய காதல்

சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியில் ஆட்டோ டிரைவரான சலீம்சேக் என்பவர் தனது இரண்டாவது மனைவியின் மகள் யாஸ்மீன் என்ற ஒன்பதாவது படிக்கும் 15 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் இன்றைக்கு நிகழ்ந்துள்ளது. இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் பருவம் அறியாத பாழாய்ப்போன காதல்தான். சினிமா மற்றும் சீரியல்களைப் பார்த்துவிட்டு அதிலே வரும் கதாநாயகி/கதாநாயகனாக தங்களை நினைத்துக் கொண்டு அதை வாழ்க்கையிலே ருசிக்கத்துடிக்கும் அறியாப் பிஞ்சுகள் அதற்கு வைத்திருக்கும் பெயர் தான் காதல்.இந்தச் சணியன் புகும் இடம் தெரியாது,புகுந்தால் உலகம் தெரியாது.

அந்த வகையிலே இந்த 9வது படிக்கும் இந்தச் சிறுமிக்கு அந்தப் பகுதியிலே வசித்த இஸ்மாயில் என்பவன் காதல்வலை விரிக்க, சிக்கியது இந்தப் பறவை அதனாலே மறந்தது தன் உறவை. இன்பேக்சுவேசன் எனப்படும் இந்த பருவமயக்கத்தில் தங்கள் குழந்தைகள் நிச்சயமாக வீழ்வார்கள். காரணம் அனைத்து சமாச்சாரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்க உரையோடு எடுத்துச்சொல்ல தொலைக்காட்சி ஒன்று போதாதா?

அதுமட்டுமின்றி இன்று உலகையே தன் உள்ளங்கையில் அடக்கிவிட்ட செல்போன்கள் போதும், நெட்வொர்க் கம்பெனிகள் வழங்கும் இலவச குறுந்தகவல் சேவை போதும். உதாரணமாக ஒருவன் தன் மொபைலில் இருந்து 10 குறுந்தகவல்களை முகம்தெரியாத 10 பேருக்கு அனுப்பினால் அதிலே நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள். இன்றைக்கு நாகரீக வளர்ச்சி என்று சொல்லி தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் அந்தப்பிள்ளை யாருக்கு பேசுகிறது யார் யாருக்கு குறுந்தகவல் அனுப்புகிறது என்ற எந்த விபரங்களையும் கண்டுகொள்வதில்லை.என் நண்பர்களில் பலர் சில பெண்களிடம் விடிய விடிய பேசுவதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நாகரீகம் என்ற பெயரிலே நாடு கெட்டு குட்டிச்சுவராய் ஆகிவிட்டது.

அந்த வகையில் இந்தப் பெண்ணும் அந்தப் பையன் வீசிய வலையில் மீளமுடியாத மீனாய் வீழ்ந்து இன்று வீணாய் போய்விட்டாள். உயிரை விட்டாலும் விடுவேன் ஆனால் கட்டினால் அந்தப்பையனைத் தான் கட்டுவேன் என்று இவள் பிடிவாதம் பிடித்திருக்கிறாள். அவள் தான் மெச்சூரிட்டி இல்லாமல் இவ்வாறு பேசிவிட்டால் என்றால் அவளின் தந்தை மிக மெச்சூராக கத்தியை எடுத்து தன் கோபம் தீரும்வரை குத்தி அந்த சிறுபிள்ளையைத் துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டார். இதிலே யாரைச் சொல்லி நோக. இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு தயவுசெய்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவணியுங்கள். அவர்கள் காதல் வயப்பட்டிருந்தால் மிகப்பக்குவமாக எடுத்துச்சொல்லி திருத்தப் பாருங்கள்.

படிப்பு முடியும் வரை கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் ஒத்திவை. படிப்பு முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மிகப்பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்துத் துன்புறுத்துதல்,அடைத்து வைத்தல் போன்றவை அவர்களின் உப்புசப்பில்லாத காதலை உயர்வாக்கி விடும். ஆக எப்படியும் பாதிக்கப் படுவது பெண்குழந்தை தான். எனவே பெண்ணை பெற்றவர்கள் விழித்தெழுங்கள்.கவணமாக கையாளுங்கள். ஒரு பழமொழி உண்டு தானே! முள்மீது சேலை பட்டாலும்......,

2 கருத்துகள்:

Babu (பாபு நடராஜன்} சொன்னது…

yarai kutram solla

Manjari சொன்னது…

Good Lesson for parents and their teenager kids.