சனி, 27 ஜூன், 2009

மலரும் பதிவுகள்:பொங்கி எழுந்த இராமநாராயணன்

மலர்ந்த தேதி:பிப்ரவரி 22 2009
வீட்டில் வேலைவெட்டி இல்லாமல்
சும்மா படுத்துக்கெடக்கும் ராமநாராயணன் ஒரு சமோசா
,டீ க்கு ஆசைப்பட்டு 22/02/2009 ஞாயிறன்று உண்மையிலேயே பிசியாக உள்ள இயக்குணர்கள் பொழப்பையும் கெடுக்க ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் திருட்டு VCD (DVDஇல்லை) ஒழிப்புக்கூட்டம். ஏனென்றால் படங்கள் தோல்வியடைய காரணம் திருட்டு விசிடி தான் என்று அடித்துச் சொல்கிறார் இராமநாராயணன் . நம்ம பேரரசு போன்ற மசாலா புலிகள் எல்லாம் இதிலே கலந்து கொண்டு திருட்டு VCD ஐ ஒழிக்கப்போகிறார்களாம். முன்பு 50 ரூபாய் வரை விற்ற ஒரு திருட்டு DVD மொக்கை படங்களின் வருகையால் இப்போது வெரும்15 ரூபாய் என்ற கணக்கில் ஓடிக்கிட்டு இருக்கு., இதுக்கே ஏட்டய்யா முதல் பேட்ரோல் DSP வரை கப்பங்கட்டுறோம். இந்த லட்சணத்துல இவிங்க ஒழுங்கா படமெடுக்க துப்பில்லாமல் எங்க யாவாரத்தகெடுத்துட்டு எங்கள கொற சொல்ல வந்துட்டாங்கே.,இராமநாராயணனுக்கு பொழுது போகலண்னா இங்க வந்து எங்களோட சேர்ந்து எங்க யாவாரத்த பாக்காட்டும்., ஒரு DVD க்கு 2 ரூவா வீதம் கமிஷனாக தர்ரோம் என வெடித்துச்சிதறினார் கடற்கரை சந்தி பர்மா பஜார் திருட்டு DVD விற்பணர் ஒருவர்.அதுமட்டுமின்றி இதுல என்ன காமெடின்னா பூக்கட போலிஸ் பூத்துல ஒர்க் பண்ணுற எல்லா காவலர்களும் தெணம் வந்து நம்மகிட்டதான் படம் வாங்கிகினு போறாங்க. புதுப்படம் வர லேட்டாயிட்டா, நீங்கெல்லாம் என்னய்யா யாவரம் பாக்குறீயன்னு சென்னை தமிழில் வையிறாக., அதிலும் அங்கு முக்கிய பொருப்பில் உள்ள ஒரு அதிகாரி தினம் தினம் ஆளனுப்பி விதவிதமான ஊதா கலர் படங்களா கேட்டு உசுற வாங்குறார் என்று மேலும் பொங்கித் தீர்த்தார். கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடிச்சாம்.,

வியாழன், 25 ஜூன், 2009

சரவெடி: ரகுமான் கலைஞர் காமெடி சந்திப்பு 2ம் பாகம்

கலைஞர், ரகுமான் காமெடி சந்திப்பு முதல் பாகம் படிக்க இங்கே கிளிக்க‌

கலைஞர்: தம்பி படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா? "பாசப் பச்சோந்திகள்"

ஆற்காட்டார்: அப்படி போடுங்க தலைவரே! அருமையான டைட்டில். நீங்க கதைய ஆரம்பிங்க. நான் அந்தப் பக்கமா போயி இந்தப் படத்த தயாரிக்க எவனாவது இளிச்சவாயன் சிக்குறானான்னு பாத்துட்டு வாரேன்.

கலைஞர்: ஏய்யா புது ஆளத்தேடுற! என்னோட முந்தைய படம் "அலியின் ஆசை" யைத் தயாரிச்சாங்கள்ள சாந்தினி புரொடக்சன், அவங்களயே இந்தப் படத்துக்கும் புக் பண்ணுய்யா!

ஆற்காட்டார்: ஏது மறுபடியும் அவங்களயா? தலைவரே! உங்க அலியின் ஆசை படத்தைத் தயாரிச்ச அந்த சாந்தினி பட நிறுவனர் இப்ப லட்சாதிபதி ஆயிட்டார்.

கலைஞர்: கேட்டுக்குங்க தம்பி! நம்ம படத்தையும் எடுத்து ஒருத்தர் லட்சாதிபதியா ஆயிருக்கார்.

ஆற்காட்டார்: நாசமா போச்சி! அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா இருந்தாரு. சரி அவங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும். சரி தலைவரே! நீங்க கதைய ஆரம்பியுங்க. ரகுமான் தம்பி என்ன ரொம்ப நேரமா உங்ககிட்ட இருந்து எந்தவிதமான ரியாக்சனும் இல்ல.என்ன ஆச்சி.

ரகுமான்: ஒன்னுமில்ல சார்.(அட ஆண்டவா! பக்ரீத்துக்கு வந்து மாட்டிக்கிட்ட ஆடு மாதிரி ஆயிப்போச்சே என் நெலம)

ஆற்காட்டார்: தம்பி! உங்க மைன்ட் வாய்ஸ‌ நான் கேட்ச் பண்ணிட்டேன். பரவாயில்ல,சும்மா கேளுங்க தம்பி.

கலைஞர்: தம்பி! இந்தக் கதை சென்னிக்குளம் அப்டிங்கற ஊருல இருந்து ஆரம்பிக்குது. அந்த ஊருல சரியார் அப்டின்னு ஒரு பெரியவர் ஒரு பொட்டிக்கடை வச்சி நடத்திக்கிட்டு வர்றார். அந்தக் கடையில் செந்தாமரை அப்டின்னு ஒருத்தர் வேலைக்கு சேர்றார். அவர் சேர்ந்த பிறகு அங்க யாவரம் நல்லா சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுது. கொஞ்ச நாள் கழிச்சி சரணாகதி அப்டின்னு ஒருத்தர் அதே கடையில வேலைக்கு சேர்றார். ஒரு தடவ ஏதோ ஒரு விசயத்துல‌ செந்தாமரைக்கும் சரியாருக்கும் பிரச்சினையாகி, செந்தாமரை சரணாகதி சேர்ந்து தனியா ஒரு மளிகைக் கடைய ஆரம்பிக்கிறாங்க. கொஞ்ச நாள்லயே மளிகைக் கடை நல்ல டெவலப் ஆயிடுது. நல்ல டெவலப் ஆன நெலயில செந்தாமரை மரணமடைகிறார். அந்த சந்தர்பத்த பயன்படுத்தி அங்க இருந்த கல்லாப்பெட்டியில சரணாகதி உக்காந்துடுறாரு.

அவர் குடும்பமும் அந்தக் கடைக்குள்ள புகுந்து மிட்டாய் பிஸ்கட்டுன்னு ஏகத்துக்கும் சாப்புட ஆரம்பிச்சிடுது. கணக்கு ஒரு மாதிரி வர்றத பாத்துட்டு வேக்காடு மாடசாமின்னு ஒருத்தர கணக்கு புள்ளையா அந்தக் கடையில உக்கார வைக்கிறாரு சரணாகதி.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத..,இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

கலைஞர்: சும்மா இருய்யா, சுவாரஸ்யமா கத போய்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே! அந்த சரணாகதிக்கு 2 புள்ளைங்க. ஒரு மகன் பேரு தலக்கறி, இன்னொரு மகன் பேரு சுடலை. இதுல தலக்கறி பீடாக்கடையும், சுடலை சோடாக்கடையும் வச்சி நடத்திக்கிட்டு வாறாங்க. சரணாகதியோட இன்னொரு சொந்தக்காரங்களுக்கு ரெண்டு புள்ளைங்க. அவங்க ரெண்டு பேரும் அந்த மளிகைக்கடைக்குப் பக்கத்துலயே ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸூம், ஒரு 16 MM பட புரொஜக்டரும் அவங்க வச்சிருந்தாங்க. அவங்களுக்கு என்ன வேலையின்னா அந்த மளிகைக் கடைக்கி வெளம்பர நோட்டீஸ் அடிச்சிக்குடுப்பாங்க. அதாவது மைதா மாவு வாங்கினா மசாலாப்பொடி இலவசம், கடலப்புண்ணாக்கு வாங்குனா கருப்பட்டி இலவசம்னு நோட்டீஸ் அடிச்சி வெளியிடுவாங்க. அது மட்டுமில்லாம சுத்துவட்டார கோயில்கள்ல திருவிழா வந்தா அங்க போயி திரையக் கட்டி 16 MM படம் ஓட்டுவாங்க. படத்துக்கு நடு நடுவே அந்த கடை வெளம்பரத்தையும் போட்டுக்குவாங்க. இவங்களோட வளர்ச்சியப் புடிக்காத வேக்காடு மாடசாமி இவங்க எந்த ஊர் திருவிழாவுக்கு படம் ஓட்டப்போனாலும் பின்னாடியே போயி அந்த ஊர்ல இருக்குற கரண்டு கம்பத்துல உள்ள பியூஸ வெட்டிவிட்டுட்டு வந்திடுவார்.

ஆற்காட்டார்: தலைவரே!..., தலைவரே! இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

கலைஞர்: சும்மா இருய்யா..,ஒரு நாளு பக்கத்து ஊரு திருவிழாவுக்கு படம் ஓட்டப் போகும் போது க‌ரண்டு போயிட்டதால படம் ஓட்ட முடியாம அந்த ரெண்டு பேரும் வேற ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது ஒரு பட்டிமன்றம் வச்சிறலாம்னு சொல்லி காண்டா வெளக்க கொளுத்திக்கிட்டு பட்டிமன்றத்த ஆரம்பிச்சாங்க. என்ன தலைப்புன்னா "செரிமாணத்திற்குச் சிறந்தது தலக்கறி விக்கிற பீடாவா? சுடலை விக்கிற சோடாவா? " அப்டின்னு பட்டிமன்றத்த போட்டு கடைசியில , செரிமாணத்திற்குச் சிறந்தது சுடலை விக்கிற சோடாதான்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. இந்த விசயத்த‌ கேள்விப்பட்ட தலக்கறி தன்னோட ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து அந்த தம்பிகளோட பிரிண்டிங் பிரஸ்ஸ அடிச்சி நொறுக்கிட்டாங்க. சரணாகதியும் அவங்கள அந்த எடத்துலேந்து கடைய காலி பண்ணச்சொல்லிட்டார்.

தன் கடைக்கு இனிமேல் நோட்டீஸ் அடிக்க வேண்டாமுன்னு அந்த ஆர்டரையும் கேன்சல் பண்ணிட்டார். அதுமட்டுமில்லாம அவங்களுக்குன்னு தனியா ஒரு பட புரொஜக்டரையும் வாங்கி அவங்களுக்குப் போட்டியா கம்மிவெலயில படம் ஓட்ட ஆரம்பிக்கிறாரு சரணாகதி. அத்தோட அவங்க கடையில வேல பாத்தா ஆப்பரேட்டர்ல இருந்து, கூட்டிப்பெருக்குற ஆயா வரைக்கும் இவங்களோட புதுக்கடைக்கு இழுத்துக்கிறாங்க.இந்த நிலையில அவங்க கடைக்கு எதிரில செவப்பு சாந்துன்னு ஒருத்தர் புதுசா கடை ஆரம்பிக்கிறாரு. இந்தத் தம்பிக செவப்புச்சாந்து கடைக்கு வெளம்பரம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. நோட்டீஸூம் அடிச்சி வெளியிடுறாங்க, அதுமட்டுமில்லாம சரணாகதி கடையில எல்லா பொருளுமே எக்ஸ்பெயரி ஆனது, கலப்படம் அப்டி இப்டின்னு கிளப்பிவுடுறாங்க.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத....

கலைஞர்: சும்மா இருய்யா. அப்பறம் கேளுங்க தம்பி,அந்த தம்பிக பண்ணுற வெளம்பரத்தால சரணாகதி கடைக்கி யாவரம் கொறய ஆரம்பிச்சி செவப்புச்சாந்து கடைக்கி கூட்டம் கூடுது. இதனால ஒருமுடிவுக்கு வந்த சரணாகதி அந்த ரெண்டு தம்பிகளையும் அழைச்சி மீண்டும் தன் கடைக்கே நோட்டீஸ் அடிக்கிற வேலையக் குடுத்துடுறாரு. இதப்பத்தி அந்த ஏரியா ஆளுங்க கேட்டதுக்கு, இரும்பு பழுத்தது கரும்பு இனித்தது அப்டின்னு சம்பந்தம் இல்லாம எதை எதையோ அள்ளிவிட்டாரு சரணாகதி.

ரகுமான்: தலைவரே! நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?

ஆற்காட்டார்: என்னது கேள்வியா! தம்பி என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. தலைவர் யார் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவார்.

ரகுமான்: என்னது, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவாரா? இது என்ன போங்கு ஆட்டமால்ல இருக்கு.

கலைஞர்: யோவ்! என்னயா சம்பந்தமே இல்லாம இந்த டைலாக்க இங்க கொண்டு வந்து நொழக்கிறே?

ஆற்காட்டார்: அது ஒன்னுமில்ல தலைவரே! போன எபிசோடுல ஒரு உடன்பிறப்பு உங்க கேள்வி பதில் அறிக்கையையும் சேர்த்து ஒரு வாரு வாருனா நல்லா இருக்கும்னு எங்கிட்ட கேட்டார், அதான் கும்பலோட கும்பலா இதையும் சேர்த்து கும்மியடிச்சிட்டேன்.

கலைஞர் : இருக்கட்டும் இருக்கட்டும். அப்பறம் கவனிச்சிக்கிறேன். தம்பி நீங்க ஏதோ கேள்வி கேக்கனும்னு சொன்னியலே! என்னது அது?

ரகுமான்: தலைவரே! நீங்க எதுக்காக இவ்ளோ மெனக்கெட்டு எங்கிட்ட இந்த மொக்க‌ கதயச்சொல்லிக்கிட்டு இருக்கிய?

கலைஞர்: நல்லா கேட்டிய போங்க கேள்வி. என் அடுத்தப் படம் பாசப் பச்சோந்திகளை தயாரிக்கிறது சாந்தினி புரொடக்சன், வேலையில்லாம வீட்டுல படுத்துக்கெடக்குற‌ ராம நாராயானன் தான் இயக்குனர், இசை? வேற யாரு நீங்க தான்.

(இதைக் கேட்டவுடன் ரகுமான் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படாரென கீழே விழுகிறார். ஆற்காட்டார் சோடா தெளித்து எழுப்புகிறார்.)

ரகுமான்: தலைவரே! இவ்வளவு அதிர்ச்சியான செய்தியை என் வாழ்க்கையில இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்ல. நான் இந்த‌ படத்துக்கு இசையமைச்சேன்னா எனக்கு ஆஸ்கார் விருது குடுத்தவங்க என் வீடு தேடிவந்து அதப்புடிங்கிக்கிட்டு போயிடுவாங்க. அதனால என்ன விட்டுருங்க.

ஆற்காட்டார்: என்ன தம்பி இப்படி பயப்படுறீக. தலைவர் இந்த மாதிரி எத்தனையோ கதையெழுதி எத்தன பேரோட கதைய...

கலைஞர்: யோவ்….....,

ஆற்காட்டார்: உயர்த்தியிருக்காருன்னு சொல்ல வந்தேன் தலைவரே!

கலைஞர்: அதான பார்த்தேன். தம்பி கடைசியா என்ன தான் சொல்றிய?

ரகுமான்: இந்தப் படத்த என கடைசி படமாக்கிறாதியேன்னு சொல்றேன்.

கலைஞர்: புரியலையே!

ரகுமான்: தலைவரே! இந்த டாக்டர் பட்டத்த வேனுமின்னாலும் நீங்களே வச்சிக்கிங்க. அதுமட்டுமில்லாம எனக்கு குடுத்த 2 ஆஸ்கார் விருதையும் உங்கள்ட்டயே கொண்டுவந்து குடுத்துடுறேன். என்ன வுட்ருங்கோ.

ஆற்காட்டார்: தம்பி! கதவு சாத்தியிருக்கு. இது ஒன்வே. உள்ள வந்தா வெளியப்போறது ரொம்ப கஷ்டம்.அதனால நீங்களே நல்ல முடிவு பண்ணிக்கங்க.

(இதைக்கேட்டு எழுந்த ரகுமான் குபீரென அங்கேயிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுகிறார். “டேய் புடிங்கடா அவன என ஆற்காட்டார் கத்துவதைக் கேட்டு செக்யூரிட்டிகள் மெயின்கேட்டைப் பூட்டி விட்டு பாய்ந்து வர, அங்கே இருந்த கொடிக்கம்பத்தைப் பிடிங்கி அதன் உதவியோடு ஜம்ப் செய்து மெயின்கேட்டைத் தாண்டி அங்கு வந்த 13B பஸ் ஜன்னலைப் பிடித்து தொங்கியபடி எஸ்கேப் ஆகிறார் ரகுமான்)

கலைஞர்: என்னய்யா இப்டி ஆயிடிச்சி. சரி போனா போறான் விட்டுடு அவன பொழைக்கத்தெரியாத பய. நீ நம்ம பழையராசாவுக்கு போன போட்டு வரச்சொல்லுய்யா!

(ஆற்காட்டார் போன் போட அங்கே சேது பட காலர் டியூன் கேட்கிறது. “எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்)

ஆற்காட்டார்: (சிரித்தபடி) தலைவரே! நம்ம பழையராசா இன்னும் அலியின் ஆசை அதிர்சியில் இருந்து மீளலைன்னு நெனக்கிறேன். நல்லா ஓடுது பாருங்க ஒரு பாட்டு....,,

-முற்றும்

செவ்வாய், 23 ஜூன், 2009

உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே!

தனது 36 வது பிறந்த நாளை இனிதே கொண்டாடிய விஜய் அங்கு கூடியிருந்த ரசிகர்களை உற்சாகமாகச் சந்தித்தார். அத்தோடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின் சாராம்சங்கள் இதோ

//ஆண்டுதோறும் என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர்.//

ஆமாங்கண்ணா! ஆண்டுதோறும் உங்க ரசிகர்களின் அட்டசாசம் டாஸ்மாக்ல இருந்து ஆரம்பிச்சி நகரத்தின் சந்துபொந்துகள் வரை அவங்க கொடுக்குற அளப்பறை கொஞ்ச நஞ்சமா? பெரியப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து ஃபுல்சவுண்டில் பாட்டுப்போட்டு நடுரோட்டில் போக்குவரத்தை இடைஞ்சல் செய்து ஆட்டம் போடுகிறார்கள்,மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் ஆட்டம்பாம் வெடிகளை வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள்.அதிலும் குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோடு முதல் பாரதி சாலை,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை.மீர்சாகிப்பேட்டை வரை,புதுப்பேட்டை சாலை பிஎஸ்என்எல் முதல் ஆல்பர்ட் தியேட்டர் வரை,அமைந்தக் கரை முதல் செனாய் நகர் வரை, மவுண்ட் ரோடு தேனாம்பேட்டை வாணவில் உள்ளிருந்து ஜிஎன் செட்டி சாலை வரை ரொம்ப ரொம்ப மோசம். இது வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

//பலர் தங்களின் வருமானத்துக்கு மீறி என் மீதுள்ள அபிமானத்தில் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்து வருகின்றனர். //

கரெக்ட்ங்கண்ணா! வீட்டில கொழந்தைங்களுக்கு பால் வாங்க வச்சிருக்கிற காசைத் திருடிக்கிட்டு வந்து உங்க கட்அவுட்டுக்கு பீர் வாங்கி ஊத்துதுங்க வெளங்காம போறதுங்க. முன்னெல்லாம் ஏதோ உங்க பட டிக்கெட்டுகளை பிளாக்ல வித்து இதெல்லாம் சரி கட்டினிச்சிங்க‌. ஆனா இப்ப உங்க பட டிக்கெட்ட ஒயிட்ல வாங்கவே ஆளக்காணோம்.

//இனி உலகம் கம்ப்யூட்டர் மயமாகப் போகிறது. இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. //

ஆமா ராசா! உங்க படமெல்லாம் இன்டெர்நெட்டுல தானே ரிலீஸ் ஆவுது. அப்ப அவசியம் இன்டெர்நெட் தேவதான். போற போக்குல இனிமே உங்க படமெல்லாம் இன்டெர்நெட்டுல மட்டும்தான் ரிலீஸ் ஆகும்னு பேசிக்கிறாங்களே உண்மையா!

// ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன். இதை ரசிகர்களிடம் கூறியதுமே அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர். //

அப்ப எல்லாச் செலவும் அந்த அப்பாவி ரசிகர்களோடது தானா? பத்து பைசா உங்கள்ட இருந்து பேராதுண்ணு சும்மாவ சொன்னாய்ங்கே!

// இந்த ஆண்டு எனக்கு மிகவும் விசேஷமான பிறந்தநாள்.//

ஆமா! ஆமா! இந்த ஆண்டு உங்க படமெல்லாம் சில்வர் ஜூப்லில. விசேசம் தான். //ரசிகர்கள் என் பொருட்டு கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். அரசியல் அமைப்பாக மாறினால் இதே நலத் திட்டங்களை பெரிய அளவில் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.//

கட்சி ஆரம்பிக்கிற எல்லாரும் இப்படித் தான் சொல்லுவாங்க. ரசிகர்கள தனியா கூப்புட்டு கேட்டமுன்னா "அவன் கெடக்குறான் வெளங்காத பய" அவன் தலைவராகுறதுக்கு நாங்க கெடந்து கஷ்டப்படனுமா? அப்டின்னு கேப்பாங்க..

// அரசியல் அமைப்பாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது உண்மைதான். நானே நேரடியாக ரசிகர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். அதன் பிறகு தற்போது என்னுடைய பணியான நடிப்பதை செய்து வருகிறேன்.//

உஷ்! இப்பவே கண்ணக் கட்டுதே. அண்ணாச்சி மொதல்ல சினிமாவுல ஒழுங்கா நடிக்க முயற்சி பண்ணுங்க. அப்பால அரசியலுக்கு வரலாம். உங்களச் சொல்லிக் குத்தமில்ல. ஒரு படம் ஓடின ஒடனே, வருங்கால முதல்வர் வாழ்கன்னு கும்பல்ல நின்னுகிட்டு கத்துறான் பாருங்க, அவன மாறி ஆளுகள கண்டுபுடிச்சி என்கவுண்டர்ல‌ போட்டுத்தள்ளுனா நாட்டில லட்டர்பேடுங்க எண்ணிக்கை கொஞ்சம் குறையும்.

// அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. //

எப்போதுமே நெனக்க வேணாமுன்னு தான் சொல்றேன். உங்க இம்ச தியேட்டரோட ஒழியட்டும்.

//ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது.//

இந்த மாதிரி ரொம்ப காலமா சொல்லிச் சொல்லியே ஒருத்தர் தலைல துண்ட போட்டுக்கிட்டு கைல துப்பாக்கியோட “ஜக்குன்னு மூலைல உக்காந்த கத ஞாபகம் இருக்கா?

//என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர். //

கட்சிய ஆரம்பிச்சி அவங்கள குண்டர்களா மாத்திருங்க‌! இப்பவே இந்த ரகள உடுதுங்க உங்க ஒடம்பொறப்புக, இதில கட்சி வேறஆரம்பிச்சிட்டா கிளிஞ்சிடும்.

// என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர்.//

உங்க படம் நல்லா இல்லைன்னு சொல்லி டிக்கெட்டுக்கு கொடுத்த காசை திருப்பிக்கேட்டு தியேட்டர்காரங்ககிட்ட பிரச்சினை பண்ணினா, அந்த போராட்டத்தில் உங்கள் ரசிகர்கள் பங்கேற்பார்களா?

//நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.//

சே! சே! அது எப்டிங்கண்ணா உங்க படத்த எதிர்த்து, நீங்களே????????.

// அரசியல் கட்சி துவங்குவது பற்றி மிரட்டல் வந்ததா? 'மிரட்டற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை...//

கவலையே படாதீங்க உங்கள யாரும் மிரட்ட மாட்டாங்க.(லட்டர் பேடுங்க) பத்தோட பதினொன்னு,அத்தோட இது ஒன்னுன்னு உங்க கட்சியை தலைவர்கள் நினைச்சிக்குவாங்க. // வேட்டைக்காரன் படத்தில் ரசிகர்களுக்கு பெரிய செய்தி இருக்கும், தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் //

இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே! இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது. போனஸ் காமெடி:

ராமு: அந்த தியேட்டர்ல என்ன இவ்வளவு கூட்டம்?

சோமு: யாரோ விஜய்யோட வில்லு படத்துக்கு டிக்கெட் முன்பதிவு பண்ண வந்திருக்காங்கலாம். அது யார்னு பாக்கத்தான் இவ்ளோ கூட்டம்.

என்ன தான் இருந்தாலும் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழகத்தின் ஒளிவிளக்கு,இளைய தளபதி அண்ணன் விஜய் நூறாண்டு வாழ்க என வாழ்த்துவோம்.

அறிவிப்பு:சரவெடி நாளை வெளிவரும்.