ஞாயிறு, 21 ஜூன், 2009

கமலின் குறும்படத்தில் முத்தக்காட்சி இருக்குமா?

கலைஞானி என்றும் உலக நாயகன் என்றும் இந்தியத்திரையுலகினரால் பாராட்டப்படும் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பிலே குறும்படங்களை இயக்கப் போகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் 250 திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சி சமீபத்தில் கொடுக்கப்பட்டது. அதிலே கலந்து கொண்ட மாணவர்களில் முதல்கட்டமாக 30 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு குறும்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் கமல்.

அது மட்டுமின்றி அந்த குறும்படங்கள் முழுவதும் ஆகக்கூடிய செலவை ராஜ்கமல் பிலிம்ஸ் ஏற்றுக்கொள்ளும் என ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்திருக்கிறார். அத்தோடு அந்த படங்கள் இயக்கும் வரிசையில் தானும் இணைந்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் சகலகலா வல்லவன். ஆக ஒரு பலபரிமாண நடிகரிடம் பயிற்சி பெற்று அவருடைய நிறுவனத்திற்கு அவர்கள் செலவிலேயே குறுபடம் இயக்கிக்கொடுக்க அந்த இளம் வல்லுனர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.

பெரிய இயக்குனர்கள்,சிறிய இயக்குனர்கள் உட்பட முப்பது பேர் இந்த படங்களை இயக்குவார்கள்.அத்தோடு நானும் கூட ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சிக்கு அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், போன்ற பிரபல இயக்குனர்களும் வந்திருந்தார்கள்.

இந்த குறும்படங்கள் முழுக்க முழுக்க சென்னையைப் பற்றியதாக இருக்குமாம். சென்னை நகர மக்களின் பலபரிணாம வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்ட இது ஒரு வாய்ப்பு எனவும் தெரிவித்திருக்கிறார்.

சென்னை நகரில் பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று பிட்ஸா சாப்பிடுபவர்கள் ஒரு புறம், மறுபுறம் கூவம் நதிக்கரையோரம் தங்கியிருந்து அந்த நாற்றத்துடன் கலந்து சாப்பிடுபவர்கள் என அனைத்து வகையான மக்களின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இந்த குறும்படங்கள் என நாமும் எதிர்பார்ப்போம்.

ராயப்பேட்ட ராமு கேள்வி: உங்கள் படங்களில் வழக்கமாக இருப்பது போல இந்தக் குறும்படங்களிலும் முத்தக் காட்சி இருக்குமா? கமல்ஜி.

கொஞ்சம் பழைய செய்தி:

சில நாட்களுக்கு முன்பு பசங்க ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் இன்றைய நிலையில் நாட்டுக்கு மிக அவசியமான ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதாவது வரக்கூடிய படங்களில் ஆபாசம் அதிகமாக இருக்கிற படங்களை தனியா மார்க்கெட் பண்ணுங்க. அதை குடும்ப படங்களோடு 'மிக்ஸ்' பண்ண வேண்டாம் எனவும் இங்கே எல்லா படங்களையும் எல்லாருடனும் பார்க்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

ராயப்பேட்ட ராமு கேள்வி: அப்படின்னா டிவியில படம் போடும் போது எப்படி போடுவது சார்?

அபூர்வ சகோதரர்கள் வெளியான சமயம். அந்தப் படத்திற்கு நான் என் குழந்தைகளோட போயிருந்தேன். வாழ வைக்கும் காதலுக்கு ஜே ன்னு நான் அதில ஒரு பாட்டு வரும். அது அந்த குழந்தைக்கு அவசியம் இல்லாதது. ஆனால் குழந்தைகளையும் கூட்டிட்டு வந்துதான் படத்தை பார்க்க வேண்டியிருக்கு. குழந்தைகளுக்கு தனியாக, குடும்ப படங்கள் தனியாக, ஆபாசபேஸ்டு படங்கள் தனியாக என்று தனித்தனியாக ரிலீஸ் செய்தால்தான் சரியாக இருக்கும் என்று தனது அருமையான அனுபவத்துடன் தனது நியாயமான கருத்தைச் சொல்லியிருந்தார் கலைஞானி கமலஹாசன்.

ராயப்பேட்ட ராமு கமெண்ட்: நல்ல வேள சார், உங்க குழந்தைகள நீங்க கூட்டிக்கிட்டு ஹேராம் படத்துக்கு போகல.

3 கருத்துகள்:

தமிழ்நெஞ்சம் சொன்னது…

கமல்ஹாசனும் முத்தமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்க - இப்படி வாழ்த்தினால் எப்படி இருக்கும்?

Ravindar சொன்னது…

Google Adsense For Bloggers Visit Here

http://www.ennainambalam.blogspot.com

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//தமிழ்நெஞ்சம் கூறியது...
கமல்ஹாசனும் முத்தமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்க - இப்படி வாழ்த்தினால் எப்படி இருக்கும்?//


தமிழ் நெஞ்சம் அண்ணாச்சி! மொதல்ல இந்த மேட்டர நீங்க ஏதாவது ஒரு கல்யாணத்துல பயன்படுத்திப் பாத்துட்டு ஒத கித வாங்காம வந்தியன்னா இத நாம அமுல்படுத்துவோம்