திங்கள், 8 ஜூன், 2009

சரவெடி "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

இளைய தளபதி விஜய் தற்சமயம் எல்லாப் படங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பாலோ பண்ணுகிறார். சமீபத்தில் இமாலய வெற்றியடைந்த வில்லு படத்திலும் அதே பார்முலா தான். தற்போது உருவாகிவரும் அடுத்த பிரம்மாண்ட வெற்றிப் படமான வேட்டைக்காரன் படத்தின் தலைப்பிலிருந்தே தலைவரின் பாலோ அப்தான்.  சினிமாவில் கொடுக்கிற‌ இம்சை போதாதென்று இப்போது ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் கசிந்து  கொண்டிருக்கிறது. எப்படியும் முதல்வராகிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும் ஆசையுடனுமே கட்சி துவங்க இருக்கிறார். அது மட்டுமின்றி அந்தக் கட்சியின் பெயரிலும் கொடியிலும் எம்ஜியார் இடம்பெறுவார் என அவரது அல்லக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால அவங்க 2 பேருக்கும் இருக்குற வித்தியாசங்கள எடுத்துக்காட்டும் முயற்சி தான் இந்தப் பதிவு.

வித்தியாசம் 1:

எம்ஜிஆர்:  இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில்  நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம் செய்தார்.   

விஜய் : தமிழகத்திலே பிறந்தார். இலங்கையிலே பெண் எடுத்தார். தமிழக மக்களின் பொருமையைச்  சோதிக்க வேண்டி சினிமா பீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.

வித்தியாசம் 2:

எம்ஜிஆர்:  சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் சின்ன சின்ன அதாவது பிட்டு பிட்டான வேடங்களில் நடித்து சினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.

விஜய் : ஆரம்பம் முதலே பிட்டு படங்களில் தான் அறிமுகமானார். கேரளத்திலே ஷகிலா படம் எந்த அளவிற்கு போனதோ அந்த அளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது  இவரது படங்கள். அதன் முழு வேலையையும் அவரது தந்தைதான் கவனித்துக்கொண்டார் என்பது தான் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

வித்தியாசம் 3:

எம்ஜிஆர்:  படங்களில் விதவிதமான வேடங்கள் போட்டு நடித்தார். நிறைய படங்களில் மாறுவேசம் போட்டுக்கொண்டு முகத்தில் மரு வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வந்து உளவு பார்ப்பார். அந்த திரிலிங்கை ரசிக்காதவர்களே இருக்க முடியாது .

விஜய் :  மாறுவேசம் தேவையில்லை. சொந்த வேசத்தில்  நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு “போக்கிரி படத்துல போட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு,  சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌  நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு  போன ரசிக கண்மனிகள்  இன்னும் திரும்பவேயில்லை.

வித்தியாசம் 4:

எம்ஜிஆர்:  இவர் படங்களில் அதிகபட்சம் ஒரு வில்லன் தான் இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலே துரத்திக்கொண்டு ஓடுவார். அது மட்டுமின்றி அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையில் ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.  

விஜய் :  இவர் படம் முழுவதும் வில்லன்கள் தான் உலா வருவார்கள். ஆனால் எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவது எதிரியை முட்டாளாக்கிவிட்டு (நம்மையும் தான்) சமாளித்து தப்பிவிடுவார். கதா நாயகியை மீட்க மோட்டார் படகு,ஹெலிகாப்டரில் துரத்திச்சென்று மீட்டுவருவார். மேலிருந்து தாவி வந்து ஓடும் ரயிலில் சர்வசாதாரணமாக ஏறுவார். உஷ்..,இப்பவே கண்ணக் கட்டுதே!

வித்தியாசம் 5:  

எம்ஜிஆர்:  தன் அண்ணன் சக்ரபாணியை எப்படியாவது முன்னனி நடிகராக்க வேண்டும் என தன் படங்களில் அவருக்காக சிபாரிசு செய்தார்.அதன் மூலம் அவரும் நிறைய படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக உருவெடுத்தார். அண்ணன் மீது அவ்வளவு பாசம் கொண்டவர் புரட்சித்தலைவர்.

 விஜய் :  தன் தம்பி நடிக்க வருகிறார் என தெரிந்ததும் எங்கே தனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என பயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்க முடியோமோ அதையெல்லாம் பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றிய வள்ளல். அந்த அளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி.

வித்தியாசம் 6:

எம்ஜிஆர்: இவர் படங்களில் இவருக்கு நண்பர்களாக யாராவது ஒருவர் தான் (சந்திரபாபு, நாகேஷ், தங்கவேல்) வருவார்கள். தலைவர் போடும்  சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவர்களும் சேர்ந்து சண்டை போடுவார்கள்.

விஜய் :  இவர் படங்களில் குறைந்தது 4 முதல் 6 நண்பர்கள் கூடவே வருவார்கள். ஆனால் சண்டைக் காட்சிகளில் காணாமல் போய் விடுவார்கள். காதலுக்கு உதவிசெய்யும் கருவேப்பிலை வேலை மட்டும் தான் அவர்களுக்கு.

வித்தியாசம் 7:

எம்ஜிஆர்:  தன் ரசிகர்கள் கூட்டத்தில் அல்லது அரசியல் பொதுக்கூட்டங்களில் தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களைப் பார்த்து "என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" என பேச்சைத் துவக்குவார்.

விஜய் :  தன் ரசிகர்களை என்றைக்குமே  மதிக்காத, கண்டுகொள்ளாத இவர் ரசிக கண்மனிகளைப் பார்த்து "டேய்...., பேசிக்கிட்டிருக்கோம்ல....,சைலன்ஸ்" அப்டின்னு கத்துவார்.

வித்தியாசம் 8:

எம்ஜிஆர்:  இவர் படங்களில் எதிரிகளிடம் மாட்டி கொண்டு  சிறையிலே அடைக்கப்படுவார்.எதிரிகளின் அகழிகளில் அடைக்கப்பட்டுள்ள‌ சிங்கம்,புலி ஆகியவற்றோடு சண்டையிட்டு அவைகளை அடக்கிவிட்டு தப்பிச்சென்று விடுவார்.

விஜய் :  விலங்குகளோடு சண்டையிடுவது மிக சாதாரண விசயம்  எனக்  கருதியதால் இவர் மிசின்களோடு சண்டையிடுவார். நம்ம அலுவலகங்களில் சாதாரணமாகவே லிப்ட் எங்கயாவது மாட்டிக்கிட்டா கம்பிகளை வெல்டிங் வச்சித்தான் உடைத்து எடுப்பார்கள். ஆனால் தளபதியை லிப்ட்டுக்குள் வைத்து அடைத்து  தண்ணீருக்குள் முக்கிவிட்டுச் செல்வார்கள். அந்த சமயத்தில் கூட அதை மிகச் சாதாரணமாக உடைத்துக்கொண்டு வெளியே  வந்து பாய்ந்து செல்வார். இன்னும் கொஞ்ச நாளில் ஓடும் டிரைனை ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல அதோடு சண்டையிட்டு நிறுத்துவது மாதிரி  சீன் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாய்ங்களோ!

வித்தியாசம் 9:

எம்ஜிஆர்: கத்திச் சண்டை, சிலம்பச் சண்டையில் மாவீரன். இவர் படங்களில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். பாடல் காட்சிகளை இரண்டு கைகளை ஆட்டியே ஓட்டிவிடுவார்.  

விஜய் :  இவர் படங்களில் வாய்ச்சண்டை அதிகமாக இருக்கும். கார்களில் குண்டு வைத்து கும்பலாக வெடிக்கும் போது இவர் மட்டும் அங்கிருந்து கூலாக நடந்து வருவார். கப்பலில் இருந்து கயிறு இல்லாமல் குதிப்பார், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே சண்டையிடுவார். இன்னும் கொஞ்சம் நாட்களில் தன்னை தாக்கவரும் ஹெலிகாப்டரின் வாலைப்பிடித்து மலையில் அடிப்பது போன்ற காட்சிகள் வரலாம். பாடல் காட்சிகளில் இரண்டு கையை ஒரு மாதிரி மேலும் கீழும் ஆட்டிக்காட்டுவார். இப்போது ஒரு கையை உதறிக்காட்டுகிறார்.

வித்தியாசம் 10:

எம்ஜிஆர்: இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு எவ்வளவோ மருத்துவ உதவிகள், திருமண உதவிகள் போன்றவற்றை செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்யும் உதவிகள் எதுவுமே வெளியே வராது.

விஜய் : இவர் 10 ஜோடிகளுக்கு மிக ரகசியமாக இலவசத் திருமணம் செய்து வைப்பார். ஏழைகளுக்கு இலவச தையல் மிசின், இஸ்திரி பொட்டி வழங்கும் நிகழ்சிகளும் மிக ரகசியமாகத் தான் நடக்கும். காரணம் இவருக்கு விளம்பரமே பிடிக்காது என அவர் தந்தை சொல்லுவார். ஆனால் அடுத்த நாள் இந்த செய்தி, படங்கள் மற்றும் “நான் செய்யும் உதவியை வெளியே சொல்லிக்கொள்வதே இல்லை என்ற இவரது பேட்டியும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துவிடும்.

வேண்டா வெறுப்புக்கு  புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்.

16 கருத்துகள்:

வினோத்குமார் சொன்னது…

விஜய் பார்த்தா தூக்குதான்...

போட்டு பொளந்துட்டிங்கண்ணே...

Suresh சொன்னது…

சூப்பர் தலைவா

Suresh சொன்னது…

அவரு அடுத்த படத்துக்கு கூட உரிமைக்குரல் தான் பெயர்

கும்மாச்சி சொன்னது…

அண்ணே முக்கியமா ஒன்றை எழுத மறந்துட்டிங்க. இரட்டை வேஷத்திலே எம்.ஜி. ஆரு கொஞ்சம் வித்யாசம் காட்டுவார். இளைய தொளபதிக்கு அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. உதாரணம் "அழகியதமிழ் மகனும், வில்லும்" .

பெயரில்லா சொன்னது…

nesaththa putu putu vachitinga ponga...

//வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்// SUPER THALIVA..

இராகவன் நைஜிரியா சொன்னது…

// உலவு.காமிலும் என் தமிழ் போல் வைரஸ் உங்க பிளாக்கை காப்பாத்திக்கோங்க //

http://www.sakkarai.com/2009/06/blog-post_08.html

கபாலி... உடனே இந்த பதிவைப் படித்துப் பாருங்க...

என் பக்கம் சொன்னது…

//வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்.//

எப்படிங்க இப்படியெல்லாம் chanceஏ இல்ல

Kannan சொன்னது…

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்." - Superb!!!

Vishalivinh சொன்னது…

சரியான செருப்படி,
இந்த ரசிகனுங்க தொல்ல தாங்க முடியலப்பா. பத்து பைசாக்கு வக்கு இல்லன்னாலும் அப்பன் அம்மா காசை திருடி படம் பாக்குறவங்க தான் அதிகமா இவனுக்கு இருக்காங்க.

சித்து சொன்னது…

வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்.

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க, இது ஒன்னு போதும். இந்த கணம் முதல் நான் உங்களை பின் தொடருகிறேன்.

naanum kadavul சொன்னது…

நீங்க முதல்ல தலைவர் கூட இந்த விஜய கம்பர் பண்ணதே பெரிய தப்பு.எம் ஜி ஆர் பொலே வருமா. அவர் சிரிசிகுனே சண்டை போட்ற ஸ்டைல் எ போதும்.இருந்தாலும் உங்கள் பதிவு அருமை வாழ்த்துகள்

கணேஷ் சொன்னது…

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம்"

"டேய்...., சைலன்ஸ்.....கட்சி ஆரம்பிக்க போறோம்ல "

டாஸ்மாக் கபாலி சொன்னது…

இந்தப் பதிவில் பங்கேற்ற, இங்கே தங்களுடைய மிகச்சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட,தமிழிஷ், நெல்லைத் தமிழ் மற்றும் தமிழர்ஸில் ஓட்டளித்த என் அன்பு உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களுடைய இது போன்ற ஆதரவு என் வேகத்தை அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக வைரஸ் தகவல் கொடுத்த நைஜீரியா ராகவன் அண்ணனுக்கு என் ஸ்பெசல் தேங்க்ஸ். ஆனா ராகவன் அண்ணே! 10 கேள்வியை எனக்கு அனுப்பிவச்சிட்டு இது மேலும் தொடரும்னு வேற சொல்லியிருக்கிற உங்கள வண்மையா கண்டிக்கிறேன். விரைவில் உங்களின் கேள்விகள் மட்டுமின்றி மற்ற உடன்பிறப்புகள் கேள்விகளுக்கும் பதில் பறந்து வர இருக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றி

கழுதயின் காதலன் சொன்னது…

நம் தலைவர் எம் ஜி ஆர்-ன் நடிப்பு,வசனம்,முகம் (அவர் என்றாவது சோகத்துடன் இருந்து பார்த்திருக்க முடியுமா?) அவருடன் இவனை கம்பர் பண்ணிடிங்கலே தலைவா? சரி விடுங்கே,,இத எழுத மறந்துட்டிங்க இவன் எந்த நிகழ்ச்சிலாவது சிரித்து பார்து இருபீர்களா ?????


முன்னாடி ஒருத்தன் கருப்பு எம்ஜிஆர் - நு சொல்லிக்கிட்டு திரியறான் இப்ப இவன் வரானா???

நம்ம தலைவர் பெற சொல்லி ஒட்டு வாங்கிட முடியுமா??? (கருப்பு க்கு மக்கள் ஆப்பு வச்சிடாங்க) அடுத்தது இவன் மண்ணை கவ்வுவான் அதில் சந்தேகமே இல்ல.


நம்ம தலைவர் பெற சொல்ல அவர் கட்சிக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.நம்ம தலைவர் பெற சொல்லி ஒட்டு கேட்க இவன்களுக்கு என்ன தகுதி இருக்கு???


ரஜினி,கமல்,அஜித்,விக்ரம் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள். (இவன் பிட்டு experince வச்சி தான் சினிமா வுக்கு வந்தான்)


தயாநிதி மாறன் இவன் கையில் தபால் தலை வெளிவிடுகிறான்??? என்ன கேவலமான செயல் இது? எத்தனை பெரிய மனிதர்கள் இருக்கும் போது தபால் தலை வெளிவிட இவனக்கு அப்படி என்ன தகுதி இருந்துச்சிநு தெரியல போங்க.

ராமன் கிட்ட வில்ல கேடோன், விநாயகர் கிட்ட கேடோன், முருகு கிட்ட கேடோன் இது சரி ஆன (பிரபுதேவா கிட்ட ஒழுங்கா வில்லு கதைய கேட்டு இருந்தா தப்பிச்சி இருக்கலாம் இது தேவயா???)

அதனால பிட்டு ல நச்சாம நாலு துட்ட பத்தமா இருப்பா. சினிமா டு பழைய தொழில் (பிட்டு) க்கு மிக விரைவில் போய்தான் ஆகணும் மாற்றமே இல்ல .

பெயரில்லா சொன்னது…

Yoov!!!1 Inna thairiyathula thalivara(??!!) pathi unmaiya puttu puttu vaipe!!!..

ipaadiku vijay padam parhtu nontha sangam..hehehe

மோகன் சொன்னது…

பிரமாதம்... பிரமாதம்...