வியாழன், 4 ஜூன், 2009

அதிர்ந்து போன அண்ணா அறிவாலயம்

தனது 86 வது வயதில் காலெடித்து வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டி நேற்று  காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை அங்கு கூடியிருந்த தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றார். மதியம் 12.30 க்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

இன்று இந்த நாளை தி.மு.கவினர் எழுச்சியோடு கொண்டாடுகின்றனர்.(ஆமாம் இன்று டாஸ்மாக்கிலே பயங்கரக்கூட்டம், தலைவர் பொறந்த நாளுன்னு ரகள பண்ணிட்டாங்கல்ல) 

நாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக “மக்கள் நலன் கருதி தொடர்ந்து பாடுபடுவோம்.(அதாவது கணிமொழியம்மாவின் மகன் ஆதித்யாவுக்கும் மத்திய மந்திரி பதவி வாங்காமல் ஓயமாட்டோம். அதானே அர்த்தம் தலைவரே!) 

இந்திய ஒருமைப்பாடு, தமிழ் இன உணர்வு (?), மத நல்லிணக்கம், மதசார்பற்ற ஆட்சி முறை இவற்றோடு மாநில சுயாட்சி என்னும் உரிமை முழக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.(தமிழ் இன உணர்வு தலைவருக்கு ரொம்ப சாஸ்திங்கோ. ஆனா எலக்சன் நேரத்தில மட்டும்தான் அது வெளியே தெரியும்.) 

மேலும் அண்ணா மற்றும் இந்தியாவின் சிறந்த தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க நானும் எனது தலைமையில் இயங்கும் தி.மு.கழகமும் சூளரைஏற்கிறோம்.(ஆனால் அண்ணா பிறந்த நாளுக்கு கலைஞர் டிவியில் 3 புதுப்படங்கள் போடுறதோட நிறுத்திக்கிருவோம். தலைவர் பொறந்த நாளுக்கு ஆஸூபத்திரியில தங்கமோதரம் வழங்குவோம், என்ன கொடும சார் இது) 

தி.மு.கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான மாநில சுயாட்சி முழக்கம் இந்திய நாட்டுக்கு மிகுந்த வலு சேர்க்க பயன்படும் என்றால் இன்றைய பிறந்த நாளில் அந்த சூளுரையை நிறைவேற்றுகின்ற பணியை பல்வேறு வகையில் தொடருவோம்.(தலைவரே முதலில் உங்க குடும்பத்திலே உங்களுக்கு சுயாட்சி பெற முயற்சி செய்யுங்கள், கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?) 

பேட்டி முடிந்த கையோடு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கலைஞர் பதில் நிருபர்களுக்கு திருப்தியா இருக்குறமாதிரி தெரியல. அதனால நம்ம பதிலையும் கூடவே அட்டாச்சிமென்டா போட்டுருக்கோம்ல. 

கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுமா

கலைஞர் பதில் : இதுவரை நிறை வேற்றப்படவில்லை. நிறை வேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். 

கபாலி பதில்: உடனே நிறைவேத்துறத்துக்கு நாங்க என்ன வெவரம் தெரியாதா ஆளுங்களா? இத வச்சித்தானய்யா பல எலக்சன ஓட்டனும். அது மட்டுமில்லாம் சும்மா எந்நேரமும் சேதுசமுத்தர திட்டம் சேதுசமுத்தர திட்டம்னு சொல்லிகிட்டே இருந்ததால தானய்யா டிஆர் பாலுவுக்கே ஆப்புஅடிச்சி உக்காரவச்சிட்டோம். இப்ப வந்திருக்கிற வாசன் அந்த திட்டம் பத்தி புரிஞ்சிக்கிறதுக்குள்ள அடுத்த எலக்சனே வந்திடும். 

கேள்வி: வேறு அணியில் இருந்தாலும் உங்கள் பிறந்த நாளுக்கு கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனரே

கலைஞர் பதில் : தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளிடம் நீண்ட நாட்களாக இந்த பண்பாடு இருந்து வருகிறது. பல்வேறு தலைவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கட்சி வேறு பாடுகளை மறந்து தோழமை உணர்வுடன் வாழ்த்துவது வரவேற்கத்தக்கது, போற்றத்தக்கது. 

கபாலி பதில்: சும்மாவா சொன்னாய்ங்கே அரசியல்ல நிரந்தர நண்பனும் இல்ல நிரந்த எதிரியும் இல்லைன்னும். எல்லா ஒரு எலக்சன் டிரண்டு தான். இதுக்கு கம்னியூஸ்டுகள் மட்டும் விதிவிலக்கா? தீவுத்திடல்ல கிழிச்ச கிழிக்கு பதிலாத்தான் இந்த வாழ்த்து. 

கேள்வி:  உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க.வினர் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார்கள். அவர்கள் மாற்றப்படுவார்களா

கலைஞர் பதில் : இப்போது அதுபற்றி சொல்ல எதுவும் இல்லை. 

கபாலி பதில்: ஏனென்றால் இப்ப வாங்குன அடியப் பாத்துட்டு மருத்துவர் அய்யா பேசாம அரசியலுக்கு முழுக்கு போட்டுட்டு பழய மாதிரி பூச்சிக்கடி, விசக்கடி வைத்திய சாலை ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காராம். 

கேள்வி:  சோனியாகாந்தி உங்களை போனில் வாழ்த்தி இருக்கிறாரே, என்ன சொன்னார்? 

கலைஞர் பதில் : நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

கபாலி பதில்: எலக்சனும் முடிஞ்சாச்சி, ஏதோ நீங்க கேட்ட அள‌வுக்கு இல்லாட்டியும் ஒரு அளவுக்கு மீட்டரு விழுகுற  டிப்பார்டுமெண்டுகளையும் உங்களுக்கு குடுத்தாச்சி. அத்தோட இருந்தமா நாலு காச பாத்தமான்னு இல்லாம சும்மா உண்ணாவிரதம் இருக்கேன் பந்த் நடத்துறேன்னு சொல்லி மறுபடியும் மக்கள டயர்டு ஆக்கவேண்டாம். அடுத்த சட்டமன்ற எலக்சன் வரும்போது அதெல்லாம் பாத்துக்குறலாம் அப்டின்னு வாழ்த்தினாங்க. ஆனா இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்மந்தமா பேசலாம்னு இந்த போன எடுத்தா அந்த நேரத்துல மட்டும் இந்த வெளங்காத போனு அவுட் ஆப் ஆர்டர் ஆயிடுது. 

என பதிலளித்து விட்டு நைசாக அடுத்து ஏதாவது யாராவது பாராட்டு விழா நடத்துவார்களா என சிந்தித்தபடியே வீட்டுக்குத் திரும்பினார் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர். 

கல்லக்குடி கொண்ட கருணா'நிதி வாழ்கவே

மக்கள் உள்ளம் குடிகொண்ட உண்மைக் கலைஞர் வாழ்கவே!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Some of your posts support Rajapakshe, i have no issues with that, at the same time read this article as well.
http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Ramanathapuram#182005

பெயரில்லா சொன்னது…

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்