செவ்வாய், 9 ஜூன், 2009

குத்தால‌ அருவியிலே குளிச்சது போல் இருக்குதா

சுட்டெரிக்கும் சூரியன். 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக்கட்டிக் விட்டு இப்போது தான் சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் முடிந்து இப்போது மீண்டும் திறக்கப்பட்டு விட்டன. கோடை சுற்றுலாவுக்கு நம்ம சென்னையைப் பொருத்தவரை யாருமே அதிகமாக வெளியூர்களுக்கு செல்வது கிடையாது. அதிகபட்சம் கிஷ்கிந்தா, எம்ஜிஎம், விஜிபி போன்ற தீம்பார்க்குகளில் காசை கொண்டு போய் கொட்டுகின்றனர். அல்லது நமக்கெல்லாம் இருக்கவே இருக்கு மெரினா கடற்கரை என தினமும் அங்கே வந்து கூடுபவர்களும் உண்டு.

நகரவாசிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு இயந்திர வாழ்க்கைதான்.காலையில் எழுவது முதல் இரவு காமெடி டைம் பார்த்துவிட்டு படுக்கச்செல்வது வரை தினமும் ஒரே நிலைதான். ஞாயிற்றுக்கிழமை வந்தால் பெரும்பாலும் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டுக்குள்ளே டிவியோடு கிடப்பவர்கள் தான் அதிகம். சென்னை நகரில் நாம் சாதாரணமாக சாலையின் இந்தப்பகுதியில் இருந்து அந்தப்பகுதிக்கு செல்லவேண்டுமானால் கிட்டத்தட்ட 400 அல்லது 500 மீட்டர் சுற்றிவந்து ஏதாவது பாலத்தின் வழியாக அல்லது சுரங்க நடைபாதை வழியாகத்தான் கடப்போம்.அது நமக்கு பழகிவிட்டது. இன்னும் சிலர் நள்ளிரவு நேரங்களில் கூட அந்த வழியாகத்தான் சாலையை கட‌ப்பதை நாம் பார்த்திருப்போம்.

சென்னை நகரவாசிகள் இது போன்ற இரைச்சல், புகை,தூசு, சாக்கடை நாற்றம், பிளாட்பார பிரியாணி என பழகிவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் சில நாட்களுக்காவ‌து இதிலிருந்து விடுபட்டு இயற்கை பரந்துவிரிந்த இடங்களுக்குச் சென்று வரலாம். நமக்கென்று இயற்கை சில அதிசய படைப்புகளை செய்திருப்பதை நம்மால் ரசிக்கமுடிவதில்லை. அல்லது காலம் பொருளாதாரம் ஒத்துழைப்பது இல்லை.

அந்த வகையில் முழுக்க முழுக்க இயற்கையாக அமைந்த ஒரு சிறந்த சீசன் தளம் தான் குற்றாலம். இந்தக் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்திலே அமைந்துள்ளது.இந்தப் பக்கம் தென்காசியும் மறுபுறம் செங்கோட்டையுமாக நடுவிலே கொலுவீற்றிருக்கிறது இந்த மலை மாநகரம். இந்த ஊரின் சிறப்பு இந்த ஊர் முழுக்க முழுக்க பசுமையால் சூழப்பட்டுள்ளது தான். சுற்றிலும் பச்சைபசேல் என மரங்களும் மலைகளும் கண்கொள்ளாக் காட்சி. சென்னையிலே சாதாரணமாக மே ஜூன் மாதங்களில் வெயிலும் அனலும் கொளுத்தும். ஆனால் இங்கே சாரல் அடித்துக் கொண்டிருக்கும். மே மாதம் தொடங்கும் சீசன் ஜூன் மாதத்தில் உட்சமடையும். இந்த ஜூன் மாததில் தான் சாரல் திருவிழா இருக்கும். அதாவது அருவிகளில் தண்ணீரின் வரத்து நன்றாக இருக்கும். ஜூலை மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டைகட்டிவிடும் சீசன் ஆகஸ்ட்டில் மொத்தமாக கிளம்பிவிடும்.

குற்றாலத்திற்குள்ளே நுழைந்ததும் அதிகபட்டமாக எல்லாரும் முதலில் செல்வது மெயின் அருவி தான். மிகப்பிரம்மாண்டமான டைனோசரஸ் இரைச்சலுடன் கொட்டிக்குமுறிக் கொண்டிருக்கும் இந்த அருவியில் குளிப்பது மிகமிக ஆனந்தம். இந்த அருவியில் பல நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். அந்த நேரங்களில் இதன் கீழ்பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய நீர் தடாகத்தில் குளித்து விளையாடலாம். ஆனால் சில நேரங்களில் அங்கே நெருங்கக்கூட வாய்ப்பு கிடைக்காது. மெயின் அருவியிலே குளித்தாலே போதும் நம் மக்கள் பலருக்கு தொந்தரவு தரும் கழுத்து வலி, மூட்டு வலி, உடல்வலி, முதுகு வலி என எல்லா வலிகளும் பறந்தோடிவிடும். அது மட்டுமில்லாமல் எல்லா அருவிகளின் முன்னாலும் மசாஜ் நிலையங்கள் இருக்கின்றன. எண்ணெயை உங்கள் உடலில் ஊற்றி அப்படியே கொத்து பரோட்டா போடுற மாதிரி கொத்திவிட்டு நரம்புகளை நீவிவிட்டு, தசைகளை கைகளால் செத்தி கடைசியாக தலையைப் பிடித்து இந்தப் பக்கம் அந்தப்பக்கம் சுடக்கெடுத்து விடுவார்கள்.

அந்த எண்ணெயோடு சென்று அருவியிலே தலைகொடுப்பது மிக மிக சுகமானது. ஆயில் மசாஜ்க்கென்றே குற்றாலம் செல்வதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அடுத்து குளியல் முடிந்தவுடன் நேரே வெளியே வந்தால் அருவிகளின் ஓரங்களை ஆக்கிரமித்திருக்கும் பஜ்ஜி கடைகள். அதுவும் அங்கே மிளகாய் பஜ்ஜி தான் மிகப்பிரபலம். அருகிலேயே நம் மெரீனா பீச்சில் இருப்பது போன்ற மீன் வருவல் கடைகள். அதிலே சென்று ஏதாவது ஒன்றை வாயிலே போட்டுவிட்டு மறுபடியும் குளியலுக்குச் சென்றுவிடலாம். காரணம் அருவியில் குளித்த சில மணித்துளிகளில் பசியெடுக்கத் துவங்கிவிடும். அருவியிலே குளிப்பதில் என்ன ஒரு விசேசம் என்றால் நாம் நம்ம வீட்டு பாத்ரூமில் குளித்துவிட்டு இரண்டு நிமிடம் தலை துவட்டாமல் இருந்தால் ஜல்ப்பு புடிச்சிக்கும். ஆனால் குற்றால அருவியிலே 24 X 7 ஆக குளித்துக்கொண்டே இருக்கலாம். தலை துவட்டவேண்டிய அவசியம் இல்லை.

காரணம் மலையின் மேலே இருக்கும் லட்சக்கணக்கான மூலிகைகள் வழி ஓடிவரும் இந்த நீர் நம் உடலுக்கு எந்த வகையிலும் கேடு இல்லை. ஆனால் சிலர் மூலிகை நீர் எனக் கருதி அருவியிலேயே தண்ணீர் குடிப்பார்கள். அங்க‌ தான் கவனிக்கனும். என்ன காரணம்னு கேட்டா நீங்க குளிக்கிற அருவியின் மேல் பகுதியில் சில மன்மத ராசாக்கள் கையில் பீர் பாட்டிலுடன் குளித்துக்கொண்டு இருப்பார்கள். குளியலோடு மட்டுமல்லாமல் எல்லாமே அங்க தான். அதனால் குடிப்பதற்கென்றே அந்தப் பகுதிகளில் குழாய் மூலம் நீர் வந்துகொண்டிருக்கும். அதைக்குடிக்கலாம்.

மெயின் அருவியின் மேலே மிகக் கரடுமுரடான பாறைகள் வழி ஏறிச்சென்றால் அங்கே இருப்பது தான் தேனருவி. ஆனால் அது மிகவும் ஆபத்தானது. நாம் செய்தித் தாள்களில் பார்க்கும் மரணச்செய்திகள் நிகழுமிடம் அதுதான். அங்கே தண்ணீரின் வரத்து மிக அதிகம். அதுமட்டுமின்றி இடுக்குப்பாறைகளும் அதிகம். அதுபோல பாசிப்பாறைகளும் அதிகம்.தப்பித்தவறி பாசிப்பாறையில் கால் வைத்து வழுக்கிவிழுந்தால் அது நேரே இழுத்துச்சென்று இடுக்குப்பாறையில் வைத்து அமுக்கிவிடும். அங்கிருந்து நேரே சொர்க்கம் தான். அதனால் தான் அந்த தேனருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேனருவியில் இருந்து விழும் தண்ணீர் தான் மெயினருவிக்கு வந்து சேர்கிறது. சென்பகாதேவி அருவியும் மிகப்பிரபலம். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று எனக்கு நினைவில்லை.

அடுத்து பிரபலம் பழைய குற்றாலம். இங்கும் தண்ணீர்வரத்து ஓரளவிற்கு அதிகமாக இருக்கும். ஆனால் மெயினருவியை ஒப்பிடும் போது இங்கே கம்மிதான். பஸ்ஸில் செல்பவர்களுக்கு குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து பழையகுற்றாலத்திற்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அடுத்து ஐந்தருவி. இதுவும் மிகப்பிரபலம். இங்கே தண்ணீர் 5 பிரிவுகளாகப் பிரிந்து கொட்டுவதால் இதற்கு ஐந்தருவி என பெயர் வந்தது. ஐந்தருவிக்கு மேலே இருப்பது பழத்தோட்ட அருவி. இங்கிருந்து விழும் நீர் தான் ஐந்தருவிக்குச் செல்கிறது.இதைப் பணக்கார அருவி என்றும் சொல்வார்கள். காரணம் இங்கு செல்ல விஐபிகளுக்கு மட்டும் தான் அனுமதி.

முன்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு நம் உடன்பிறப்புகள் செய்த அட்டகாசத்தால் இப்போது அனுமதியில்லை. ஆனால் அங்கே நிற்கும் செக்யூரிட்டிக்கு 50 ரூபாயை தள்ளினால் அவர் கதவை உள்பக்கமாகத் தள்ளுவார். அங்கே குளிப்பது மிக ஆனந்தம். அதை ஒட்டி உள்ளது தான் மூலிகைப் பண்ணை. அங்கு முன்னர் அனுமதியிருந்தது, இப்போது எப்படியெனத் தெரியவில்லை. குற்றாலம் முழுக்க நிறைய சின்னச்சின்ன அருவிகள் இருந்தாலும் அதெல்லாம் கழிவுகள் தான். புலியருவி என்று ஒரு அருவி இருக்கிறது. அதற்கு புளியருவி என்று பெயர்வைத்தால் சரியாக இருக்கும். காரணம் அங்கு வரும் தண்ணீர் வழியெல்லாம் பலான பலான கழிவுகள் அனைத்தையும் கரைத்துக்கொண்டு தான் வருகிறது.

குற்றால சீசன் வந்துவிட்டாலே அங்கு விதவிதமான பழவகைகள் வந்து குவிந்துவிடும். பெயர் தெரியாத எக்கச்சக்க பழவகைகள் அங்கே கிடைக்கின்றன,. கஷ்பான், சொரியா, டாம்டாம், துரியன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதிலே துரியன் பழத்தின் மகிமையை யாருமே அறிவதில்லை. அது ஆண்மைக்குறைவுக்கு ஏற்ற ஒரு மருத்துவப் புதையல். துரியன் பழத்தின் அருமை மலேசியர்களுக்குத் தான் தெரியும்.

குற்றாலத்தில் சீசனுக்கென்றே முளைக்கும் கடைகளில் விதவிதமான வித்தியாசமான பொருட்களெல்லாம் கிடைக்கும்.பலவிதமான குழந்தை விளையாட்டுப் பொருட்கள், சிப்பி அலங்கார மாலைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துமே கிடைக்கும்.நேந்திர சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மரவள்ளி சிப்ஸ் மற்றும் சோளப்போரி என விதவிதமான அயிட்டங்களும் அங்கு பேமஸ்.

குற்றாலத்திலே காலையில் கிடைக்கும் குழாய் புட்டு ருசியோ ருசி. நீங்கள் எங்கு புட்டு சாப்பிட்டிருந்தாலும் அது குற்றாலக் குழாய்ப் புட்டுக்கு ஈடாகாது. மிக முக்கியமாக குற்றால சீசன் காலத்தில் விதவிதமான அயிட்டங்களும் குற்றாலத்திற்கு வந்து குவிந்து விடுகிறார்கள். அவர்களும் அங்கே சீசன் பிஸினஸ் தான் செய்கிறார்கள். ரூபாய் 500 முதல் 5000 வரை தமிழக,கேரள மங்கைகள் அணிவகுக்கிறார்கள்.சில முக்கிய லாட்ஜ்களில் அவர்களே சொந்தமாகவும் சப்ளை செய்கிறார்கள். ஆனால் அங்கு சென்று அயிட்டங்களைத் தேடுவதை விட புறப்படும் போதே ஏதாவது ஒன்றை ஓட்டிச்செல்வது தான் சிறந்தது.

சீசனுக்காக மக்கள் குவியும் குற்றாலத்தின் வாழ்க்கை வெறும் 4 மாதங்கள் தான் அதற்குப் பிறகு சாதரன கிராம பஞ்சாயத்து போல யாருமே இல்லாத ஊராக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் குற்றாலத்தில் ஒரு டீ குடிக்க வேண்டுமானால் ஊரையே சுற்றிவந்து தான் கடைகளைத் தேடவேண்டும்.

ஆனால் குற்றாலம் அருகே இருக்கும் பாப நாசம் அருவிக்கு சீசனெல்லாம் கிடையாது. 24 X 7 போல அங்கே களை கட்டிக்கொண்டிருக்கும் அருவி.

ஆக குற்றாலத்தில் தண்ணி இல்லன்னா வெறும் பாற மட்டும் தான் பாட்டுப் படிக்கும்.

போனஸ் மேட்டர்: குற்றாலச் செய்தி உங்கள் ரொம்பவே கூல் ஆக்கிட்டதால ஸ்பெசலா ஒரு செம ஹாட் பிக்சர். பெண்களின் கலாச்சார விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கும் சவூதிஅரேபியாவில் சமீபத்தில் மிக மிக ரகசியமாக‌ மிஸ் சவூதி செக்ஸி 2009 என்ற ஒரு நிர்வாண அழகிப்போட்டி நடந்தது. அதிலே கிட்டத்தட்ட 50 மாடல் அழகிகள் கலந்துகொண்டார்கள். அவர்களில் செம ஹாட் மச்சி ஒருவருக்கு "மிஸ்.சவூதி செக்ஸி 2009" மகுடம் அணிவிக்கப்பட்டது. அந்த அரபு பேரழகியைக் காண இங்கே கிளிக்கவும்.

6 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

அண்ணே குற்றாலம் பற்றிய தகவல்கள் சூப்பரு, பலான தகவல்கள், கில்மா மட்டேறேல்லாம் விரல் நுனியில்தான் வச்சிருக்கிங்க, வெவரமான ஆள்தான்.

ஷாகுல் சொன்னது…

//சென்பகாதேவி அருவியும் மிகப்பிரபலம். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று எனக்கு நினைவில்லை//

நீங்கள் குற்றாலம் மெயின் அருவியின் நுழைவு வாயிலை அடைந்த்தும் உள்ளே நுழையாமல் ஐந்தருவி செல்லும் சாலையில் ஒரு பத்தடி சென்றால் சித்தருவி என்று ஒரு மற்றோரு நுழைவுவாயில் இருக்கும் முதலில் சிறிய அருவி இருக்கும் அதுதான் சித்தருவி அதை தாண்டி மலை மேல் ஏறினால் நீங்கள் ஒரு மணி நேரத்தில் நீங்கள் சென்பகாதேவி அருவியை அடையலாம்.
ஒத்தையடி பாதைதான் உண்டு. வாகனங்கள் செல்ல முடியாது. அங்கு யாரை கேட்டாலும் சொல்வார்கள் குற்றாலம் சென்றால் இங்கு செல்லவும். தேனருவி செல்லலாம் ஆணால் குழுவாக செல்லவும். தனியாக செல்லவ்Dஏண்டாம். மேலும் குடுப்பத்துடன் தேனருவி செல்வதையும் தவிர்க்கவும்.

உங்கள் நன்பன் சொன்னது…

நன்ப்ர்கள் அனைவரும் அடுத்த வாரம் போகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம் ஆகயால் குற்றாலம் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி...........


தமிழ் மக்களே இனிமேல் 24/7 நேரமும் புதிய பாடல்களை கேட்டு ரசியுங்கள். நம் இணையதலத்தை திறந்து வைத்தால் மட்டும் போதும் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் (விளம்பரம் ஏதும் வராது). நன்றி

www.latesttamilmusiq.blogspot.com

கழுதயின் காதலன் சொன்னது…

சிங்கார சென்னை 1890-ல் எப்படி இருந்துச்சி தெரியுமா?????

இங்க போய் பாருங்க

http://www.funycollections.blogspot.com/2009/06/pictures-of-old-chennai1890.html

Bleachingpowder சொன்னது…

ஐட்டியுடன் கண்டிப்பாக குளிக்க கூடாதுன்ற அறிவிப்பு இன்னும் இருக்குதாங்க. போன தடவ அத பாத்துட்டு தான் குளிக்காமலே திரும்பி வந்துட்டேன் :)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்