செவ்வாய், 2 ஜூன், 2009

வெள்ளைக்கொடி பிடிக்க வெட்கமில்லையா?

தாயகமே மரணம் பெறுக என மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த புலித்தலைமை கடைசியாக எடுத்த வெள்ளைக்கொடி முடிவு தான் இன்றைய நிலையில் மிகக்கேவலமாக ஆராயக்கூடிய விடயமாக இருக்கிறது. தங்கள் உயிர்களை துச்சமென மதிக்காமல் தங்கள் போராட்டத்திற்காக தங்களின் தாயகத்திற்காக இறுதிவரைப் போராடி மடிந்த அந்த மேதகு புலிகளின் உறுப்பினர்கள் எங்கே, சிங்களவன் கையில் சிக்கினால் கொடூரமரணம் தான் என சிறுபிள்ளைகளுக்கு கூடத் தெரிந்திருந்தும் கடைசியாக ஒரு சான்ஸ் இருக்குதான்னு பார்ப்பமே என்று முயற்சிசெய்து குண்டடிபட்டு இறந்த தலைமையினர் எங்கே. சீ வெட்கக்கேடு. 

போர்முனையில் புறமுதுகுகாட்டி ஓடும் கோழைகளைப் போல ஆகிவிட்டதே புலிகளின் தலைமை. சிறு பிள்ளைகளுக்கும் கூட தற்கொலைக்குப் பயிற்சி கொடுத்து அது தான் நாம் நம் தேசத்திற்கு கொடுக்கும் பரிசு என மூலைச்சலவை செய்யப்பட்டு பள்ளிகளுக்கு சென்று விளையாட வேண்டியவர்களை படையிலே சேர்த்து தற்கொலைப் புலிகளாக மாற்றியவர்கள் இறுதியிலே சமாதானம் பேச வந்தார்களாம், வெள்ளைக்கொடியை உயர்த்தியும் அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுவிட்டதாம். போர் நடைமுறையை அது மதிக்கவில்லை என சிங்கள ராணுவச் சோற்றுக்குள் சரணடைவு பூசனிக்காயை மறைக்க முடியாமல் திக்கித்து நிற்கிறது ஒரு கூட்டம். 

இந்த விடயம் குறித்து தமிழ்சர்க்கிளில்  திரு.பி.இரயாகரன் அவர்கள் எழுதியுள்ள விளக்கக் கட்டுரை இதோ.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று  இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும் அந்த மக்களை காட்டி, அதே மக்கள் விரோத அரசியல். 

இதற்கு பொய், புரட்டு, பித்தாலாட்டம், நடிப்பு, வேஷம் என்று எத்தனையோ கூத்துக்கள். இந்த நெருக்கடியில் இருந்து, அந்த மக்கள் சுயமாக சொந்தப் போராட்டவழிகளில் போராட உதவுவதற்கு பதில், தமது புலத்து பிழைப்புக்கேற்ற அரசியல் மூலம் அவர்களை பயன்படுத்துகின்றனர். 

இவர்கள் யுத்தத்தின் போது தமிழ் மக்களை பணயம் வைத்தவர்கள். அவர்களை பேரினவாதத்தின் துணையுடன் கொன்றவர்கள். இதில் இருந்த தப்ப முனைந்தவர்களையும் ஈவிரக்கமின்றி கொன்றவர்கள்.

 இப்படி இவர்களின் சொந்த அரசியல் தேவைக்காக கொல்லப்பட்டவர்களைக் காட்டி, புலத்து புலிகள் ஏகாதிபத்திய தயவுக்கான ஒரு போராட்டத்தை நடத்தினர். இன்றும் அதே பாணியில், அதே போராட்டம். புரட்டு அரசியல் மூலம், அரசியல் பித்தலாட்டம். அன்று மக்களை பலியிட்டு நடத்திய போராட்டம், தம் தலைமையையே காட்டிக் கொடுக்கும் சரணடைவாக மாறியது. 

எஞ்சிய புலித்தலைமை வீரமரணத்தையோ, தற்கொலையோ தேர்ந்தெடுக்கவில்லை. அது சரணடைவை தேர்ந்தெடுத்தது. அந்தச் சரணடைவு யாரிடம் என்பதில் தான், புலத்து புலியின் காட்டிக்கொடுப்பு, ஒரு திட்டமிட்ட சதியாக இருந்தது. 

ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தம் தலைமையை நம்பி போராடி மடிந்தபோதும், அவர்களின் தியாக உணர்வு எல்லயைற்ற ஒன்றாக இருந்தது. இதற்கு மாறாகவே, எஞ்சிய தலைமையின் சரணடைவு நடந்தேறியது. இவர்களை நம்பி இறுதிவரை போராடி மடிந்த தியாகங்களை எல்லாம் காட்டிக்கொடுத்த, ஒரு துரோகமாக இது அமைந்திருந்தது. இவர்கள் தாம் எதை இலட்சியமாக கூறினரோஅதற்கு மறுதலையாக மரணத்தை தழுவினர். அதாவது இவர்கள் தாம் இறுதிவரை போராடி மடியமுவில்லை. தற்கொலை செய்து கொள்ளவுமில்லை. 

தம்மை பாதுகாத்துக்கொள்ள, இலட்சகணக்கான மக்களை பணயம் வைத்து பல ஆயிரம் மக்களை கொல்ல உதவியவர்கள் இவர்கள். இறுதியாக அவர்கள் தாம் சுகபோகமாக வாழ்வதற்காக, அவர்கள் தேர்ந்தெடுத்த வழி துரோகச் சரணடைவு. அந்தத் துரோகம் அவர்களுக்கு துரோக அரசியல் வாழ்வை அழிக்கவில்லை, ஈனத்தனமான இழிவான மரணத்தையே இறுதியில் பரிசாக வழங்கியது. 

இந்தச் சரணடைவு மூலமான துரோகமும், மரணமும் புலிச் சமூகத்தின் முன் ஒரு அதிர்வுதான்.  அவர்களை நம்பி தாம் கட்டியிருந்த பிரமையையும், உளவியலையும் இலகுவாக அவர்களால் கைவிட முடியவில்லை. இதைத்தான் புலத்துப் புலிகள் தமது பிழைப்புக்கு ஏற்ப, இன்று  பயன்படுத்துகின்றனர்.          

தலைவர் இறக்கவில்லை, இன்னமும் உயிருடன் உள்ளார் என்ற பொய் புரட்டுகள் மூலம், அதை மானசீகமான உளவியல் அதிர்ச்சி மூலம், நம்பிக்கை மூலம், நம்பவைக்க முனைகின்றனர். புலியின் மற்றத்தரப்பு தலைவரின் வீரமரணம் பற்றி கூறுகின்றது. இதற்குள் துரோகம் தியாகம் என்று ஆளுக்காள் முத்திரை குத்தி, இதைச் சரிசெய்ய முனைகின்றனர். இப்படி பொய் புரட்டு மூலம் கட்டும் நேர்மையற்ற அரசியல் தான், இன்று மண்ணில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் கதைக்கின்றது. அடிப்படையில் நேர்மையற்ற, உண்மையற்ற தலைமை, புலத்து மக்களை ஏமாற்றிப் பிழைக்க முனைகின்றது.  

இதன் மூலம் 

1. புலித் தலைமையை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்த தமது சொந்த அரசியல் சதியை மூடிமறைகின்றது. அதை ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டி தப்பிக்க எத்தனிக்கின்றது. 

2. இந்த மூன்றாம் தரப்பின் சதியையும், அதன் உண்மையான பக்கத்தையும் இனம் காட்டாது, அவர்கள் பின் மக்களை மீளவும் அழைத்து சென்று காட்டிக்கொடுக்க முனைகின்றது. 

3. தலைமை போராடி மடிந்ததாக காட்டும் வீரமரணம், தலைமை செய்த துரோகத்தை மூடிமறைப்பதாகும். இதன் மூலம் தமது சொந்த துரோக அரசியலை பாதுகாக்க முனைவதாகும்;. தலைமை பற்றிய விம்பங்களை, புலத்து பிழைப்புக்கு ஏற்ப பூட்டிப் பாதுகாக்க முனைகின்றனர். 

4. தமிழ்மக்களை தவறான தமது துரோக அரசியலுக்கு ஏற்ப, மீளவும் வழிகாட்ட முனைகின்றது. 

இப்படி துரோக அரசியல் முன்னிலைக்கு வருகின்றது. மறுபக்கத்தில் இந்த துரோகத்தின் பின் பேரினவாத பாசிச அரசியல் பூத்துக் குலுங்குகின்றது. இந்தத் துரோகத்தை, அந்த பேரினவாதப் பாசிசம் கையாண்ட விதம்

1. மூன்றாம் தரப்பின் சதியுடன் தான், ஏமாற்றியே இந்த சதியிலான சரணடைவை அரங்கேறியது. 

2. சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதன் மூலம், பேரினவாத பாசிச அரச பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டதே இந்த அரசு என்பதை, உலகறிய மறுபடியம் நிறுவியுள்ளது. 

3. சரணடைந்தவர்களை சட்ட விசாரணைக்கு உள்ளாக்காமல் கொன்றதன் மூலம், தமது கடந்தகால நிகழ்கால குற்றங்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதை இல்லாததாக்கியுள்ளது. 

4. அவர்களை சதி மூலம் கொன்று உடலை அலங்கோலப்படுத்திக் காட்டியதன் மூலம், தமிழினத்தை அலங்கோலப்படுத்தி அவமானப்படுத்தினர். இதன் மூலம் தமிழன் ஒவ்வொருவனுக்னும் இதுதான் கதி என்ற மிரட்டுகின்றனர். 

இப்படி புலித் துரோக அரசியலும், பேரினவாத அரச பாசிசமும் சமாந்திரமாக மக்களுக்கு எதிராக செல்லுகின்றது. தமிழினம் இன்று எந்த மீட்சியுமற்ற புதிய சூழலில் சிக்கி தவிக்கின்றது.

ஆக தங்கள் தலைமை அமைதி பெற்றுத்தரும் என்று முன்னர் நம்பிய அதே மக்கள் தான் இறுதிப்போரில் தலைமை போராடி மடியும் எனவும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் வெள்ளைக்கொடி ஏந்திய வேந்தர்களாக வேசமிடுவார்கள் என யாருக்குமே தெரிந்திருக்காது. அவர்களின் சரித்திரத்தை நாளைய வரலாறு கூறட்டும்.

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீ உண்மையில் ஒரு அறிவு கெட்ட கழுதை என்று மீண்டும் நிரூபித்து உள்ளாய். சிங்களவன் மலத்தை திண்ணும் கழுதையே வா ஆற்றங்கரைக்கு உன்னையில் கட்டையால் அடிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

நீ உண்மையில் ஒரு அறிவு கெட்ட கழுதை என்று மீண்டும் நிரூபித்து உள்ளாய். சிங்களவன் மலத்தை திண்ணும் கழுதையே வா ஆற்றங்கரைக்கு உன்னையில் கட்டையால் அடிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

சிங்களவன் மலம் திண்ணும் கழுதையே. நீ ஒரு பார்ப்பனன் என்று தெளிவாக தெரிகிறது.

திலீபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
திலீபன் சொன்னது…

பெயர் போடாமல் எழுதியிருக்கும் என்ட தம்பிக்கு ஒரு விடயம் கதைக்கிறேன். உன்ட தலைவன் என்டு சொல்லினாயே அந்தத் தலைவன் ஏன் குப்பிகடிக்காமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாமல் படையின்ட மண்டியிட்ட கதைய கதைக்கவா, இல்லை தன்னட மகன் சார்லஸ் அன்ரனி, நடேசன் ரெண்டு பேரும் போர் செய்யயில்லாம படையிண்ட வந்து சரணடஞ்ச விடயத்த கதைக்கவா? உன்ட தலைவன் மத்த புலிங்களுக்கு குடுத்த பயிற்சியை தான் மறந்தானோ? நீயெல்லாம் ஜீரிவி பாத்து கெட்டுப்போற கேசு. உன் தலைவன் என்ட மக்கள அழிச்சான், நீங்க இன்னமும் காசுக்காக கூவிக்கொண்டு இருக்கினம். உனக்கு தைரியம் இருந்தால் உன் பேர் கொண்டு எழுதடா

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

பெயரில்லா சொன்னது…

திலீபா நீங்கதான் சன்ரீவி காட் விக்குற ஆளா? எனக்கு ஒரு காட் வேணும் கிடைக்குமா????