வியாழன், 18 ஜூன், 2009

Sv.சேகருக்கு பன்றிக் காய்ச்சல்?

"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்ற திருக்குறக்குறலுடன் நேற்றைய சட்டசபைக்கூட்டத்தை மாண்புமிகு பேரவைத்தலைவர் திரு.ஆவுடையப்பன் துவக்கிவைத்தார். தினம் ஒரு திருக்குறல் மற்றும் அதற்கான விளக்கத்துடன் தான் பேரவை நிகழ்சிகள் துவங்கும்.

அது என்ன நேற்று மட்டும் ஸ்பெசலாக இந்தக் குறல் என்றால் அண்ணன் ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவியைக் கொடுத்த கழகத்தலைவர் கலைஞருக்கு நன்றியும், தளப‌திக்கு வாழ்த்தும் சொல்லும் முகமாக இந்தக் குறலுடன் துவங்கியது சட்டசபை. ஆனால் என்னுடைய கருத்துப் படி இந்தக் குற‌லைவிட

"கலைஞர் தன் குடும்பத்திற்காற்றும் உதவி, இவர் குடும்பம் என்னோற்றது கொல் எனும் சொல்" என்று சபையை துவங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நேற்று சபை கூடியதுமே கூடயிருந்த கழகக் கண்மணிகள் மற்றும் காங்கிரஸ் கண்மணிகள், துணைமுதல்வருக்கு வாழ்த்துச் சொல்கிறேன் என‌ தங்கள் ஜால்ராவைத் துவக்க் ஆரம்பித்துவிட்டனர். அந்த கொடுமையையெல்லாம் விட பெருங்கொடுமை என்னவென்றால் அது Sv.சேகரின் காமெடி தான். மேடை நாடகங்களை நடத்தியும் சின்ன சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடித்தும் வந்த Sv.சேகரை புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் மயிலாப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகச் செய்தார்கள்.

முன்னர் எந்த அளவிற்கு திமுகவையும் கலைஞர் குடும்பத்தையும் தாக்குதாக்கு என் தாக்கினாரோ, இப்போது அதே கலைஞர் குடும்பத்தை அதாவது திமுகவை வாழ்த்து வாழ்த்து என வாழ்த்துகிறார். சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுகவின் பொதுக்குழு கூடிய போது, தான் திமுகவில் சேரப்போவதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தலமைச்செயலகத்துக்கு சென்றார். அங்கே அவரிடம் நிறுபர்கள் இதுகுறித்துக் கேட்டபோது என் புதுக்காருக்கு நம்பர் வாங்க வந்தேன் என பிளேட்டைத் திருப்பிப் போட்டார். அதன்பிறகு திமுகவுடன் ஐக்கியமாகி விட்டார் சேகர்.

இந்த நிலையில் நேற்று கூடிய சட்டமன்றக் துணைமுதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து சேகர் பேசுகையில்..,

ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணைமுதல்வருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நான் அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் இந்த சபைக்கு வந்ததில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. மாற்றுக் கட்சியினர் பேசக்கூடாது என்றால் அது மக்களுக்கு செய்யும் துரோக மாகத்தான் இருக்கும்.

துணைமுதல்வரை பாராட்டுவதால் துரோகிஎன்று சொல்வது சரியல்ல. ஆனால் என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை. நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணைமுதல்வர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”.

நேற்று வாழ்த்து தெரிவிக்க சேகர் எழுந்தபோது அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக அண்ணன் கலைராஜன் பேசிய பேச்சைக்கேட்டு பல ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களே உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர். எப்போதுமே காரசாரமாகப் பேசும் அண்ணன் கலைராஜன் நேற்று காராசாரத்தோடு கலந்து காமெடியாகவும் பேசியதைக்கேட்டு அனைவரும் கொஞ்சம் பயத்தோடு ரசித்தனர். அப்படி அவர் என்ன பேசினார் தெரியுமா?

இங்கு பேசிய எட்டப்பன் Sv.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் படார் என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை.

இதைக்கேட்டு நமக்கே சிரிப்பு வருதுல்ல. என்ன செய்யறது, எல்லாம் காலத்தின் கட்டாயம்.. முதலிலே மேயர் அப்பறம் துணைப் பொதுச்செயலாளர் இப்ப துணைமுதல்வர். நாளை? ஸ்டெப் பை ஸ்டெப் ஆக காய் நகர்த்துவதில் கலைஞருக்கு இணையாக யாருமே கிடையாது. பேசாமல் தேர்தல் முறையை ஒழித்துவிட்டு மீண்டும் மன்னராட்சியை மலரவிட்டு விடலாம். தமிழகத்தின் பெயரையும் கிங்டம் ஆப் தமிழ்நாடு மாற்றிவிடலாம். கலைஞரின் குடும்பத்தினரே காலங்காலமாக தமிழகத்தை ஆளட்டும்.

2 கருத்துகள்:

கழுதயின் காதலன் சொன்னது…

விடுங்க பாஸ் Sv.சேகரின் காமெடியில் இதுவும் ஒன்று என்பது எல்லாருக்கும் தெரியும்.

புதுக்காருக்கு நம்பர் வாங்கிடார??? இதுதான் இவரோட காமெடியில் Best காமெடி.

பெயரில்லா சொன்னது…

ஏய் கழுதை

முதல்ல உங்க அண்ணன் கலைராஜன் என்ன சொல்லி மிரட்டினாரு அதுக்கு s.v. sekar உடைய பதில்தான் இது என்பதை தெளிவா எழுது பேப்பர் ஒழுங்கா படிச்சு(தின்னு!!) உண்மைய எழுது. ரெண்டு பேர் நீ எழுதுறதா படிச்சு சிரிச்சா பொய் எழுதி சிரிக்க வைகல்லாம்ன்னு நினைக்காத கழுதை...