வியாழன், 26 மார்ச், 2009

எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டிதாயிருக்கு‍ - வைகைப் புயல் வைகோ

நேற்று தலைவ‌ர் கலைஞர் ஒரு அறிக்கைவிட்டாலும் விட்டார் அதக்கேட்டு சம்மந்தப் பட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு பதில் கொடுத்துக் கொண்டிருக்க அந்த அறிக்கையின் கதாநாயகன் மருத்துவரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூலாக கூட்டணி  பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.  மற்ற நேரங்களில் வீரத்தமிழ் பேசிக்கொண்டிருக்கும் மருத்துவர் தேர்தல் நேரம் வந்துவிட்டாலே அவரது குணம் கரைக்கு வந்த முதலை போல ஆகிவிடும். எதைப் பற்றியும் கவலைப் படமாட்டார், எதையும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் வரை மக்கள் தொலைக்காட்சியில் மசாலா படங்கள் ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

வேண்டுமானால்  இப்போதிருந் து மருத்துவரைக் கண்காணிக்க ஆரம்பியுங்கள். தேர்தல் முடியும் வரை என் அன்பு சகோதரி “மலர்ந்தும்  மலராத பாதிமலர் போல வளரும் விழிவண்ணமே,வந்து விடிந்தும் விடுயாத காலைப் பொழுதாக மலந்த தமிழ் அண்ணமே என்றெல்லாம் தாலாட்டுப் பாடுவார். தேர்தல் முடிந்து ஒரு நாலு MP சீட்டு கிடைத்தவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ஜெயா என்பவர் தமிழர்களுக்கு எதிரானவர் அவருடன் இனிமேல் கூட்டணி என்பதை நான் கண‌விலும் நினைக்க மாட்டேன் அவர் பெண்ணே அல்ல,கல்கத்தா காளி சிரிலங்கா சூலி என்று கலைஞர் பாணியில் ஒரு அறிக்கையை விட்டு விட்டு, என் ராசாவின் மனசில வடிவேலு பாணியில் அண்ணே! சௌக்கியமாண்ணே! உங்களப் பாத்து எத்தன நாளாச்சிண்ணே! நீங்கதாண்ணே தமிழினத்தின் தலைவர் என்று சொல்வார். உடனே அதைக்கேட்டு மயங்கும் கலைஞர் "காது வலித்தது கைகள் துடித்தது" என்ற பாணியில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மீண்டும் அவரை சேர்த்துக் கொள்வார்..  

ஆனால் நம்ம அண்ணன்  வைகோ கொஞ்சம் டிஃப்ரன்ஸ். நேற்று வந்த அறிக்கையில் வைகோவை நேரடியாகத் தாக்காத‌ நிலையில் கள்ளத்தோணி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒரு பதிலறிக்கையைக் கொடுத்துவிட்டார். அதில் இதுவரை ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியதே இல்லை.ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வீரமானவர்கள் என்றால் கள்ளத் தோணியில் செல்லுங்கள் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத் தமிழர்களை காக்க கள்ளத்தோணி என்ன? பிளாஸ்டிக் கேண், சைக்கிள் டியூப், தெர்மாக்கோல் என எது கிடைத்தாலும் போவோம் என்று சொல்வோம், ஆனா போக மாட்டோம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா?. வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம். அது தான் இன்றைக்கு நல்ல ரேட்டிங்கில் போய் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போது, அதை காலம் கடந்த முயற்சி என்றாலும், பாராட்டத்தக்கது என்று முன்பு சொன்ன திருமாவளவன் தற்போது அதை நாடகம் என்று சொல்லியிருக்கிறார். காரணம் திருமா இருந்தது சாகும் வரை 4 நாட்கள் உண்ணாவிரதம். அம்மா இருந்தது அஜீரணக் கோளாரு உண்ணாவிரதம். கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக்கொள்ள இலங்கை தமிழர்களை முதல்வர் கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் கூறியிருக்கிறார் வைகோ.எலக்சன் வந்துட்டா எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.,

ஆனால் அதே காங்கிரஸ் கூட்டணியினில் 9+1 சீட்டு கேட்டு கையில துண்டு போட்டு பேரம் பேசிப்பார்த்த மருத்துவர் , பேரம் படியாத பிறகு தான் இந்த தமிழருக்கு விரோதி காங்கிரஸ் அரசு என இரு கதையை விட்டிருக்கிறார்.ஒருவேளை பேரம் படிந்திருந்தால் தமிழர்களைக் “காக்க காக்க காங்கிரஸ் தான் சிறந்தது என்றும் ஒரு அறிக்கையை விட்டிருப்பார்.

மருத்துவர் அய்யாவை மண‌மார நம்புபவர்களுக்கு கடைசியாக ஒன்று. மருத்துவர் அய்யாவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது குற்றால  சீசனுக்கு வர்ர விசிட்டர்கிட்ட பண்ணுற யாவரம் மாதிரி.  வெறும் 3 மாசம் தான். சீசன் முடிஞ்சிட்டா அவரு வேற எடத்துக்கு எஸ்கேப் ஆயிடுவார்.. எப்போதுமே யாவரம் நல்லா இருக்கும்னு நம்பி காலம்பூரா கடையப் போட்டா தலையில துண்ட போட்டுக்கிட்டு போகவேண்டியது தான்.

அடுத்து வருவது:ராயப்பேட்டை ராமுவின் நினைவுகள் "சம்சாரம் அது மின்சாரம்"

19 கருத்துகள்:

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

கலக்குறீங்க கபாலி !

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

எல்லா அரசியல் அயோக்கியர்களும் இப்படித் தானே கூட்டணி மாறுகிறார்கள்.இதில் பாமக என்ன,காங்கிரஸ் என்ன,திமுக என்ன,
கூட்டணி மாறி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் சாணக்கியன்.தோற்றால் சுயநலம் பிடித்த பேய்.

ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…

டாக்டருக்கே ஊசியா?

Bleachingpowder சொன்னது…

சற்றுமுன் கிடைத்த தகவல்.பாமக கட்சி தலைவர் இன்று தேர்தல் ஆனையரை சந்தித்து தங்கள் கட்சிக்கு குரங்கு சின்னத்தை அளிக்க வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பிற்க்கு முன் நடந்த பொதுக்குழுவில் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பச்சோந்தி சின்னத்தை நாலு பேரும் குரங்கு சின்னத்தை ஏழு பேரும் தேர்வு செய்தனர்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

அண்ணாத்தே, உன் கடையிலே யாவாரம் நல்லா நடக்குதே... படா குஷாலா கீதுப்பா.

உனக்கு பதிலு போன பதிவுலே சொல்லி இருக்கேன்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

அண்ணே தலைப்பிலே இருக்குறதை "வைக்கோல் புலி வைகோ" அப்படின்னு மாத்து.

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே,
உங்களோட இந்த பதிவுல இருக்கிற படத்தை நான் என்னோட பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//அருப்புக்கோட்டை பாஸ்கர் கூறியது...
கலக்குறீங்க கபாலி !//
தேங்ஸ்க்ங்னா..,

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// மாண்புமிகு பொதுஜனம் கூறியது...
எல்லா அரசியல் அயோக்கியர்களும் இப்படித் தானே கூட்டணி மாறுகிறார்கள்.இதில் பாமக என்ன,காங்கிரஸ் என்ன,திமுக என்ன,
கூட்டணி மாறி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் சாணக்கியன்.தோற்றால் சுயநலம் பிடித்த பேய்.//

இப்படில்லாம் திட்டக்கூடாது சார்.யாரு கண்டா நாளைக்கி நாமலே அரசியல்ல் குதிச்சாலும் இப்படித்தான் பொதுசணம் சார்.மொதல்ல நாம காசு வாங்காம ஓட்டு போட பயிற்சி எடுப்போம்/குடுப்போம்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
டாக்டருக்கே ஊசியா?//
சாரு இது என்ன சின்ன ஊசி ,வர்ற எலக்சனுல மருத்துவருக்கு வெக்கப்போறாஙக் ஆப்பு

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Bleachingpowder கூறியது...
சற்றுமுன் கிடைத்த தகவல்.பாமக கட்சி தலைவர் இன்று தேர்தல் ஆனையரை சந்தித்து தங்கள் கட்சிக்கு குரங்கு சின்னத்தை அளிக்க வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பிற்க்கு முன் நடந்த பொதுக்குழுவில் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பச்சோந்தி சின்னத்தை நாலு பேரும் குரங்கு சின்னத்தை ஏழு பேரும் தேர்வு செய்தனர்.//

அப்பு! அருமையான காமெடி எனக்கு என்னன்னா ரெண்டுமே ஒகே தான்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
அண்ணாத்தே, உன் கடையிலே யாவாரம் நல்லா நடக்குதே... படா குஷாலா கீதுப்பா.

உனக்கு பதிலு போன பதிவுலே சொல்லி இருக்கேன்//

கண்ணூ பொடாத நைனா. உன் பதிலுக்கு பதிலு அதே பதிவுல சொல்லிக்கீறேண் பாத்துக்கப்பா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
அண்ணே தலைப்பிலே இருக்குறதை "வைக்கோல் புலி வைகோ" அப்படின்னு மாத்து.//

மாமே ஒரு அளவுக்குத்தான் ஓட்டலாம் நைனா.அப்பறம் வெகுண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் பண்ண கெள்ம்பிடுவாய்ங்கே

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//நையாண்டி நைனா கூறியது...
அண்ணே,
உங்களோட இந்த பதிவுல இருக்கிற படத்தை நான் என்னோட பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.//

உடன் பிறப்பே! உணக்கு இல்லாத படமா? நானும் இந்த படத்த வேற ஒரு பதிவுல இருந்துதான் சுட்டேன்.உன் போல அனுமதி கேட்கவில்லை.அண்ணா நாமம் வாழ்க,கலைஞர் டிவி வாழ்க‌

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

9 மணிக்கு ஆரம்பிச்சி 5 மணிக்கு முடிச்சிக்கிறதெல்லாம் உண்ணா விரதம்னா, நான் வாரத்துல குறைந்தது 4 நாளாவது உண்ணாவிரதம் இருக்கேனே. :))

peyarundu சொன்னது…

Thiruma - Early Stunt
Amma - Late Stunt

Ella karumamum onnnuthaan.


But Congress+DMK kku marana adi intha election la irukku

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

Ramadoss is a monkey. Now the monkey is at Boes Garden.

nanbar சொன்னது…

சுரேஷ்,பக்ரைனிலிருந்து, இங்கே வை.கோ_வை குறை சொல்லும் சிலர் முதலில் அரசியலுக்கு தேவையான நேர்மை ஒழுக்கம் போன்றவை இல்லாத மற்ற தலைமைகளை காட்டிலும் வை.கோ மேலானவர் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்கு தமிழ்நாட்டில் ஐந்து வருடம் வார்டு கவுன்சிலராயிருக்கும் ஒரு நபர் கோடிக்கணக்கில் பணம் சேர்கிறார்.பின் தன்னிடமுள்ள பணம், செல்வாக்கால் இஞ்சினியரிங் கல்லூரி,முடிந்தால் மருத்துவ கல்லூரி,ரியல் எஸ்டேட், என்று எல்லாவழியிலும் ஊழல்/லஞ்சம் செய்கிறார்கள்.இன்றைய அரசியல் தலைவர்களை வரிசைபடுத்தி பாருங்கள், கருணாநிதி அரசியலுக்கு வரும் போது இருந்த நிலை என்ன இப்போதுள்ள நிலை என்ன? ஜெ_வின் வசிதிகள் என்ன? இருவருக்கும் தனி தனி சாம்ராஜ்யங்கள் தனி தொலைகாட்சி சேனல்கள், ராமதாஸ்_க்கு வந்த சொத்துக்கள் அரசியல் செல்வாக்கால் உருவாக்கியுள்ள இஞ்சினியரிங்/மருத்துவ கல்லூரி, பத்திரிக்கை தொலைகாட்சி சேனல், காங்கிரஸ்/தி.மு.க/அ.தி.மு.க/பா.ம.க என்று அந்த கட்சியில் மந்திரியாய் இருந்தவர்கள் இல்லாதவர்கள் எத்தனை பேர் கல்லூரி அனுமதி பெற்று வியாபாரமாக்கி கொண்டுள்ளனர்.ஆனால் 18 ஆண்டுகாலம் டெல்லி எம்.பி பதவியில் இருந்த போதும் வை.கோ_மீது ஒரு ஊழல் குற்றசாட்டு ஊண்டா? எங்காவது ஓரிடத்திலிருந்து அவர் தனக்காகவோ தன் குடும்பத்தினருக்காகவோ அல்லது தொழில் தொடங்கி வளம் கொழித்து கொள்ளவோ தன் பதவியை பயன்படுத்தி உள்ளதாக செய்தி உண்டா? தேர்தலில் பெறும் வெற்றி தான் இங்கு நல்லவன் யார் என்று தீர்மானிக்கிறதென்றால் அது சரியான பார்வையாய் இருக்க வாய்ப்பில்லை. தன் கட்சிகென 2 எம்.பி_க்கள் 6 எம்.எல்.ஏ_க்கள் வைத்துள்ள வை.கோ ஒரு போதும் தன் சுயலாபத்திற்காக மக்கள் பிரசினைகளை கையில் எடுத்ததில்லை. (ராமதாஸ்,கருணாநிதி,ஜெ போன்றோர் சில விஷயங்களில் போராடுவது போல் காண்பித்து சம்பந்தப்பட்டவர்களிடம் "கைமாற்றி" கொண்ட பின் அந்த போராட்டத்தை விட்டு விடுவார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தருபவர்கள் கூலிக்கு மாறடிப்பவர்கள்" என்று சொல்வது நா கூச செய்யும் விமர்சனமாகும். அதே போல் வை.கோ_ஒன்றும் "உலகை சுற்றி வர விரும்பும் வாலிபன்" இல்லை அரசாங்க/மக்கள் பணத்தில் தாய்லாந்து சென்று தைல மசாஜ் செய்து கொள்ள துணிந்தவரில்லை. பணத்திற்காக 'ஈழ ஆதரவு" என்பதில் துளியளவும் உண்மையில்லை. அவ்வாறு பணமே பிரதானமென்றால் தமிழ் நாட்டிற்குள்ளேயே மேலே சொல்லப்பட்டுள்ள பல வழிகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு வவுனியா காட்டிற்க்கு உயிரை பணயம் வைத்து சென்று தான் பணம் ஈட்டவோ, 19 மாதம் சிறையில் இருக்கவோ, கடல் கடந்து போய் அவர்களுக்காக பேசிவிட்டு இப்படி விமர்சிக்க படவோ தேவையில்லை. பணம் செய்ய நினைப்பவனுக்கு பல வழி. ஆனால் கொள்கை ரீதியாய் அணுக நினைப்பவனுக்கு தன் மக்களுக்கான சேவையாய் தான் அது தெரியுமே தவிர பணம் செய்யும் வழியாய் தெரியாது. வை.கோ-வும் கூட ஈழ தமிழருக்காக கொள்கை ரீதியான இன உணர்வுடன் களத்தில் நிற்பவரே.ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் வை.கோ-வின் கட்சியை மக்கள் ஏற்று கொள்ளாமல் போனாலும் கூட தேர்தலுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு இயக்கமாக வை.கோ_வின் பின் அணி வகுக்க லட்சகணக்கானோர் இங்குண்டு. தேர்தல் வெற்றி தோல்விகள் எங்களை பக்குவப்படுத்தி வைத்துள்ளன. இந்த வெற்றி தோல்விகளை விட மக்களுக்கான போரட்டங்களின் வெற்றியே வை.கோ_விற்கு முக்கியம். இங்கே வை.கோ-வை தவறாக சித்தரிக்க முயல்பவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டிய கடமையை கொண்டுள்ளோம். அதை தான் நான் செய்துள்ளேன்.நெறியாளர் பிரசுரிக்க வேண்டுகிறேன்.