ஞாயிறு, 1 மார்ச், 2009

பாளையங்கோட்டைச் சிறையினிலே

மலேசிய சிறைச்சாலைகளில் காலை 7 மணிக்கு சூடு,சீனி இல்லாத ஒரு கருங்காப்பி, 10 மணிக்கு காய்ந்து போன 2 பிரட் துண்டுகள் மதியம் 2 மணிக்கு கல் நிறைந்த ஒரு 75கிராம் மதிப்புள்ள வேகாத அரிசி சோருடன் வெண்ணீரில் மஞ்சல் பொடி சேர்த்து அவித்த சுத்தம் செய்யப்படாத மீன், இரவு 7 மணிக்கு 2 காய்ந்த பிரட். ஒரு செட் டிரஸ், துவைத்து 10 வருடங்களே ஆகிய  அரசு வழங்கும் ஒரு போர்வை. இந்த மாதிரி ஒரு கைதி வாழ்ந்தால் அவன் இத விரும்புவானா?

ஆனால் நம்ம ஊருல அருமையான கேள்வரகு,கோதுமை ரொட்டி, வாரம் ஒரு முறை ஆச்சி கோழிக்கறி வாசனை ஆளத்தூக்குதோ என்று கேட்டு வழங்கப்படும் சிக்கன்,சுவையான சக்திமசாலா சாம்பார்,பிரஸ் காய்கறி கூட்டுகள்,மிளகு ரசம் ,அருமையான தேனீர் வகைகள், கடலை மிட்டாய்கள், கொண்டைக் கடலை,நிலக்கடலை வறுவல்கள், வாரம் ஒரு சினிமா,பீடிக்கட்டு செல்போன், சரோஜாதேவி மார்க் புத்தகங்கள் என வெளியே இருப்பதை விட உள்ளே மிக அதிக சுகம்.

மேட்டரு என்னன்னா “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என அந்தக் கால கலைஞரின் சிறை வாழ்க்கையைப் பற்றி நாகூர் அனீபா பாடிய அந்த பாட்டு பேமஸ். இப்ப அதே சிறையில அண்ணன் வைக்கோவும் இருக்காருங்குறது இன்றைய செய்தி.

நேத்து கருப்பு கொடி புடிச்சாருங்கிறதுக்காக இன்னிக்கு அவருக்கு பருப்பு சாம்பாரு போடச்சொல்லி நீதிமண்றம் உத்தரவு போட்டுள்ளது. முன்னர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட வைக்கோ மிக நீண்ட நடைபயணம் மேற்கொண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. வீட்டுல ஏதாவது பிரச்சணை வந்தா உடனே ஒரு மறியல் அல்லது போராட்டம் என ஏதாவது செய்து உள்ளே போய் சப்பாத்தி சாப்பிட்டு கூடைப்பந்து ஆடுவாருங்கிறது தெரியாத செய்தி. “நம்ம ஊரு ஜெயிலு தரமாட்டான் பெயிலு, வெளியே கொல்லுது வெயிலு, ஆனா கூவுதிங்க குயிலு.,

அடுத்து வருவது: ஞாயிறு அதிரடி"கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்கள்".

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi Tasmak kabali, what you trying to say?

Do you like as vaiko should be in jail for ever, means for what reason.?

Is pranab mukherji's activities are all good? Do you comfortable with pranab and his eelam against activities?

Vaiko is not diabetic . he is good and fit for ever to fight people like you.

Regards
SANGOLI ONLINE TEAM