திங்கள், 9 மார்ச், 2009

உண்ணாவிரதம் என்றால் என்ன?

உண்ணாவிரதம் என்றால் என்ன? சிறு குறிப்பு வரைக 1 X10 =10

உண்ணாவிரதம் 3 வகைப்படும்.அவையாவன‌

1)கட்சித்தலைவர்கள்: காலைல 7 மணிக்கு எழுந்திருச்சி பல்லே வெளக்காம பெட்காபி ஒன்னு குடிச்சிட்டு அப்பறம் லைட்டா ஒரு கோழித்தூக்கம். 7.25 க்கு வேண்டாவெறுப்பா எழுந்து போய் 100% முழுமையான குளியல் போட்டுட்டு டைனிங் டேபிளுக்கு வந்தோம்னா மணக்க மணக்க வறுத்த சில்லி சிக்கனுடன் சூப்பர் சாண்ட்விச், அருமையான சீஸூடன் கூடிய பிரட் ஸ்லைஸ் வித் பாயில் எக். அப்புறம் ஒரு பிரஸ் ஆரஞ்ச் ஜூஸ்..., எல்லாம் முடிச்சிட்டு ஒரு பிபி டேபிளட்.பிறகு டிரஸ் சேஞ்ச். அதோட உண்ணாவிரதத்திற்கு கிளம்ப வேண்டியது தான். இன்னிக்கு உண்ணாவிரதம் இருக்கப் போறதாலே கிளம்பும் போது ஸ்பெசலா ஒரு ஜூஸ். அப்புறம் ஜால்ராக்கள் வாழ்த்துக் கோசங்கள்,அவைப்புலவர்களின் வாழ்த்துதிகள்,கால்கடுக்க காத்திருக்கும் கட்சித்தொண்டர்கள் என அனைவரையும் பார்த்துக் கையை அசைத்தபடி கீழேயிறங்கி வந்து கார்ல ஏறினோம்னா 100 டிகிரி சூரியனும் போர்வை கேட்கும் குளுகுளு ஏசி,உண்ணாவிரதத்துக்கு போரதால கையில் ஜூஸ் பிளாஸ்கோடு காத்திருக்கும் உதவியாளருடன் கார் பவணி. 9.30 க்கு பந்தல் அருகே வந்தவுடன் மீண்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் அல்லது மோர். பின்னர் காவல்துறை படைசூழ மேடைக்கு போனோம்னா உறுமும் ஸ்பிலிட் ஏசி அருகே பிரம்மாண்ட சிம்மாசனம், பேச ஆரம்பிக்கும் ஜால்ராக்கள். தெய்வமே, உயிரே, தமிழகமே, தமிழே, அமுதே என்பது போன்ற ஜால்ரா கோசங்கள் தயாராக நிற்கும் கேரவேண் என சகல வசதிகளுடன் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும். காலைல வரிந்து கட்டியதால் தூக்கம் லேசா கண்ணக்கட்டும் அத வெளிய காட்டிக்காம வண்டிய ஓட்டிடோம்னா ஒரு 2 மணிவாக்குல லேசா பசி எட்டிப்பாக்கும். சாப்பிடாமக் கூட இருந்துறலாம் ஆனா பாத்ரூம் போகாம இருக்க முடியாது என்ற விதிகளுக்கு ஏற்ப தயாராக நிற்கும் கேரவேனுக்குள் பிரவேசித்தால் அங்கே கமக்க கமக்க‌ ஹைதராபாத் பிரியாணி தயாரா இருக்கும். வேகவேகமா அத ஒரு வெட்டு வெட்டிட்டு வாசணை தெரியாம இருக்க ஸாண்டல் பவுடர் போட்டுகிட்டு வந்தோம்னா அந்த நேரம் கட்சியின் சிறப்பு  மற்றும் காமெடி பேச்சாளர் பேச்சி மற்றும் பசி மயக்கத்தில் அசந்திருக்கும் தொண்டர்கள் அறியா வண்ணம் அமர்ந்து விடலாம்.  5 மணி ஆயிரும். தயாரா இருக்கிற ஜூஸை குடிச்சம்னா உண்ணாவிரதம் பினிஸ்.

2)கட்சி ஜால்ராக்கள்: தலைவர்கள் போலவே காலைல நல்லா கட்டிட்டு அடிக்கடி செல்போனை காதுல வச்சவாறு உண்ணாவிரதப் பந்தலை விட்டு நைசா வெளியே வந்து ஒரு பொடி நடை, அருகே உள்ள‌ டீக்கடை,பான்சாப்புக்குள் நுழைந்து கண்ணில படுறத அள்ளி வாயில அமிக்கிக் கொள்ளலாம். தலைவர்களைப் பாக்கும் ஆர்வத்தில் முண்டியடிக்கும் கூட்டத்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.அப்பறம் நல்ல நிழல் பார்த்து லைட்டா சாஞ்சிகிட்டா 5 மணி வந்துடும் அருமையான ஜூஸ்... இப்படி அடிக்கடி மணிக்கொரு முறை கடைகளுக்குள் புகுந்து விடலாம்.

3)அப்பாவித் தொண்டர்கள்: காலைல பொஞ்சாதி கொடுத்த பழைய சோத்தை தூக்கி வீசி, அடியேய்! நக்கலா? இன்னிக்கி என் தலைவன் உண்ணாவிரதம் இருக்க கூப்பிட்டு இருக்காரு நீ எனக்கு சோறு தர்ர நாயே! என விளாசிவிட்டு தினம் கிடைக்கும் 50 ரூவா கூலிய மறந்துபுட்டு காலைல 6 மணிக்கே தலைவர் வீட்டு வாசலில், தலமையின் அறிவிப்பால் காலையிலிருந்து பச்சத்தண்ணி பல்லுல படாம கால்கடுக்க காத்திருந்து காலை 8.30 மணிக்கு தலைவர் வெளியே வந்து கை அசைக்கும் போது, ஒன்னுமே சாப்பிடாத போதும் "தலைவா வாழ்க" என வற்றிய அடித்தொண்டையில் இருந்து முழங்கிவிட்டு நடந்தே உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து பார்த்தால் அங்கே ஏற்கணவே இடம் பிடித்திருக்கும் ஜால்ராக்கள். வேறு இடமின்றி கொதிக்கும் வெயிலில் தார்ச்சாலையில் அமர்ந்து உண்ணாவிரதம் ஆரம்பமாகும்.ஜால்ராக்கள் பேச்சில் வரும் "தலைவர்" பேரக்கேட்டவுடன் கலோரிகள் இன்றி சோர்ந்த கைகளை பலமாக தட்டியும்,"தலைவர் வாழ்க" என கத்தியும், கையில் ஒரு ரூவா இருந்தும் கூட தலைவன் மேல் கொண்ட பாசத்தால் வைராக்கியத்தால் ஒரு வாட்டர் பாக்கெட் கூட வாங்காமல் 5 மணியை எதிர்பார்த்துக் காத்திருந்து, தலைவர் உண்ணாவிரதம் முடிக்க ஜூஸை எடுத்ததும் தொண்டர்களுக்காக கீழே கலக்கி வைத்திருக்கும் கண்றாவி சர்பத் அண்டாவை நோக்கி ஓடினால் அதற்கும் முட்டி மோதும் கூட்டம், சைடுல கையவிட்டு அள்ளும் ஜால்ராக்கள் என கடைசியில் எதுவுமே கிடைக்காமல் தலைவனுக்காக திருப்தியோடு கால் நடையாய் வீடு திரும்பி, இன்று பொழப்பு இல்லாதால் அடுப்பை பூனைக்கு பெட்ரூமாக்கி பசியால் துவண்டு படுத்திருக்கும் பொஞ்சாதியைப் எழுப்பி கார்ப்பரேசன் வாட்டர் ஒரு சிப் குடித்து விட்டு திருப்தியோடு தூங்கும் ஏழை.

7 கருத்துகள்:

Kajan சொன்னது…

இவங்கள் (அதிமுக) என்ன எமக்காக (ஈழ தமிழன்) வா? உண்ணா விரதம் இருக்கிறாங்கள்?
என்னவோ ஜோக் அடித்து கைதட்டி விசிலடித்து கூத்தடித்து கொண்டு இருக்கிறாங்கள்.
பார்க்கவே நெஞ்சு வலிக்குது . எம்மை வைத்து (ஈழ தமிழனை) தேர்தலுக்கு ஓட்டு சேர்க்கிறார்கள்.
தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக.
எமக்க உங்களுக்காக உண்மையாக செயற்படும் தலைமையை தெரிவு செய்து , அவர்களை பலப்படுத்தி , அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தி , எம்மை காப்பாற்றுங்கள்.

இப்படிக்கு
உங்களின் இளைய சகோதரன்
ஈழ தமிழன்

நையாண்டி நைனா சொன்னது…

ன்னானும் உன்னோட ஒவ்வொரு பதிவையும் படிசிகினே வரேன்... அடி பிகிலு கொடுக்கிற மாதிரி எழுவுரே அண்ணாதே

பெயரில்லா சொன்னது…

செம கிளாஸ் மச்சி...
பின்னிட்டீங்க

டாஸ்மாக் கபாலி சொன்னது…

தாங்ஸ் நைனா. அப்பால கட பக்கம் வந்தீன்னா கண்டுக்காலம்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

மாமே உன்னோட சரக்கு, "ஓல்டு மங்"கை ராவா உட்டுகினு, ஊறுகாய நக்குன மாறியே கீதுப்பா.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

இன்னாமா கோயிந்தா கண்ணு எப்டிக்கீற. தேங்ஸூபா. இன்னிக்கித்தான் நம்ம கடையான்ட பாக்குறேன். அடிக்கடி வந்துபோப்பா.இன்னாங்குற‌

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

/*இன்னாமா கோயிந்தா கண்ணு எப்டிக்கீற. தேங்ஸூபா. இன்னிக்கித்தான் நம்ம கடையான்ட பாக்குறேன். அடிக்கடி வந்துபோப்பா.இன்னாங்குற‌*/

உடு மாமே பேட்டையிலே உன்கு ஒரு செலை வச்சிருவோம்.ஹக்கா..ங்.