திங்கள், 9 மார்ச், 2009

"உன்னாலே நான் கெட்டேன்,என்னால‌ நீ கெட்ட"

உன்னாலே நான் கெட்டேன்,என்னால‌ நீ கெட்ட என மாற்றி மாற்றி நொந்துகொண்டிருக்கும் நவீன "ரைட்" சகோதரர்கள் எல்ஜிக்கும் செஞ்சிக்கும் ஆதரவாக நம்ம கண்ணப்பன் மதிமுகவிலிருந்து தாவி ஆளே இல்லாத கட்சிக்கு ஆதரவாக வந்துள்ளது எல்ஜிக்கும் செஞ்சிக்கும் மிக மகிழ்சியாக உள்ளது.இரண்டு பேர் மட்டும் எப்படி திமுகவில் இணைவது என் யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடித்தது லக்கிபிரைஸ் கண்ணப்பன் வடிவில்.ஆக மூவரும் வரும் 17ம் தேதி கலைவணார் அரங்கில் மீண்டும் தாய்கழகத்தில் இணைகிறார்கள்.வைகோ அண்ணே! இப்படி ஒவ்வொரு ஆளா வெளிய அனுப்பிகிட்டு இருந்தீங்கன்னா கடைசியில தாயகத்துல நீங்க மட்டும் தனிச்சிருக்க வேண்டிய நிலை வரும். கவணம்னே! எல்லாரும் என்னய மாதிரி நல்லவனா இருக்க மாட்டாங்கே! படத்த பெரிசு பண்ணிப் பாருங்க பங்காளியலா.

1 கருத்து:

நையாண்டி நைனா சொன்னது…

இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆனா, கழுதைக்கு நல்ல தீனி தான்.