புதன், 4 மார்ச், 2009

அம்மா..,தாயே.,, கைவுட்டுறாதிய மகராசி-கதறும் கலைஞர்

``யார் இந்த சோனியாகாந்தி? வெளிநாட்டுக்காரிக்கு இந்தியாவிலே அரசியல் தலைமையா?'' என்று கேட்டவர் யார்? ஜெயலலிதா அல்லவா? அதைவிட, அந்த சொக்கத்தங்கம் சோனியாகாந்தியைப்  பார்த்து, ``பதி பக்தி இல்லாதவர்'' என்று அழைத்த குரூர புத்திக்கு சொந்தக்காரர் யார்?இந்த வாசகங்களையெல்லாம் கருத்து சொன்ன காங்கிரஸ் நிர்வாகிகள் மறந்தாவிட்டார்கள்? என்பன போன்ற நிறையக் கேள்விகள், "சொக்கத்தங்கம்" போன்ற கூடைகூடையாய் ஐஸ் மழைகளால் நிறைந்திருக்கிறது இன்றைய கலைஞரின் அறிக்கை. ஜெயா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்தும் அதற்கு சோனியாவிடமிருந்து எந்த வித மறுப்பும் வராததைக் கண்டும் "பர்கோலக்ஸ்", பூவன் வாழைப்பழம் சாப்பிடாமலேயே இன்று கலைஞருக்கு கலக்கி விட்டது. கதி கலங்கிப்போன கலைஞர் காலைல பல்லுகூட வெளக்காம இப்படியொரு அவசர அறிக்கையை விட்டுள்ளார். ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று நான் அன்றே சொன்னேனே! அதனால் தானே வென்றது காங்கிரஸ் அதையெல்லாம் மறந்து விட்டீர்களா! அம்மா..,தாயே.., என் ராசாத்தி கொஞ்சம் யோசித்துப் பாரும்மா என புலம்பியிருக்கிறார். கொஞ்சம் விட்டா மூன்றாம் பிறை கமல் போல "விஜி பாரு விஜி" என்ற ஸ்டைலில் கரணம் போடவும் தயார். ஆனால் உண்மையிலேயே சோனியாவின் மௌனம் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியைப் போலத்தான் கலைஞருக்குத் தோன்றுகிறது. என்ன தான் வீரப்பமொய்லி விசிட் அடிச்சாலும் அது ஒரு சாதாரண சந்திப்பாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் “அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் மட்டும் தான் குறிப்பிட்டிருக்கிறார். காங் தரப்பில் இப்போதும்  மஞ்சல் சிக்னல் தான், இன்னும் கிரீன் கிடைக்கவில்லை என்கிறார் ஒரு அரசியல் இடைத்தரகர்.. "கை", கலைஞருக்கு கைகொடுக்குமா அல்லது கைவிடுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனா தலைவரே! நீங்க இப்படி கெஞ்சி கூத்தாடுனா முன்னா மாதிரி டெல்லியில் ரூம் போட்டு உக்காந்துகிட்டு கப்பல், நிதி, ராஜாங்கம், நிலக்கரி, தொலைதொடர்புத்துறையை எங்களுக்கு குடுத்தாத் தான் நான் ஆதரவு கடிதம் தருவேன்., இல்லாகாட்டி நாற்பதும் நழுவிடும் என்று மிரட்டல் விடுத்து துண்டு போட்டு பேசி முடிச்சமாதிரி இனிமே முடியுமா?., அல்லது கவிஞராகிக் காத்திருக்கும் கயல்விழியை ராஜ்யசபையேற்றி ரசிக்க முடியுமா? கணிமொழியை சுற்றுச்சூழல் மந்திரியாக ஆக்க எடுத்த முயற்சி தான் சுலபமாகுமா????

நாங்க ஆடுறதும் பாடுறதும் காசுக்கு, சிலர் ஆளைக்குல்லா போடுறதும் காசுக்கு, பலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு., காசுக்கு காசுக்கு..,

மலரும் பதிவுகள் :"ஏன் சிரிப்பொலி ? கலைஞர் காமெடி கடிதம்"

அறிவிப்பு: முந்தய செய்திகளை படிக்க மேலே உள்ள கழுதையின் வாயில ஒரு குத்து குத்துங்க

3 கருத்துகள்:

Pot"tea" kadai சொன்னது…

எல்லா சரக்கும் ஓல்டு மங்க்கைவிட கலாசலா இருக்கு மாமே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கபாலி கலக்கிட்டீங்க...
ஒரு பிரதி கலைஞருக்கும் அனுப்பிவிடுங்கோ...
கலைஞரை நினைக்கப் பரிதாபமாக உள்ளது.
சீ இப்படியுமா?? ஒரு போக்கற்ற பிழைப்பு.
இப்போ ரெயின் வரும்போது தண்டவாளத்தில் படுக்கக் கூடாது.
குதிக்கலாம்.

ரமேஷ் வைத்யா சொன்னது…

thalaivaa,
entha kadaiyila santhikalaam..?