செவ்வாய், 3 மார்ச், 2009

என் சினிமாவை ஓடவிடுங்கள்-ரஜினி

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா.,, அதை அப்படியே கொண்டு போயி கர்நாடக வங்கியில கட்டுவது என்வழியல்லவா என பாடி தமிழர்களின் தலைவனாக விளங்கும் ரஜினிக்கு ராஹவேந்திரா மண்டபமும், ஆஸ்ரம் பள்ளியும்லதாஐஸ்சௌந்தர்யா தவிர தமிழகத்தில் வேறு எந்த சொத்தும் கிடையாது. அப்படின்னா காசெல்லாம், எங்கே? என சந்தேகம் வரலாம். அப்படி வரலைன்னா நீங்க தான் உண்மையான ரசிகர். தமிழக சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினி ஒரு கன்னடர் என்ற வேற்றுமை நம் தமிழகத்தில் யாருக்குமே கிடையாது. காரணம் வந்தாரை (ஓவராக) வாழவைக்கும் தமிழகம். ஆனால் இந்த ரஜினி தமிழகத்தில் சம்பாதித்த காசுகளை 75%  கர்நாடகத்தில் முதலீடு செய்திருக்கிறார் என்ற உண்மை எத்தனை பேருக்குக் தெரியும் ?  சினிமாவில் ஏழைகளுக்காக வாழும் ரஜினி ஆஸ்ரம் பள்ளியில் எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு சீட் கொடுத்தார்? அட்மிசன் கேட்டால் சம்பளச் சான்றிதழைச் சமர்ப்பியுங்கள் என தாளார் லதா எத்தனை நடுத்தர வர்க்கங்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் ?

முன்னர் நடந்த உண்ணாவிரதத்துல கன்னடர்களை உதைக்கனும் என்று பேசி விட்டு பின் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டி குடுக்கும் போது நான் அப்படி பேசவேயில்லை,தயவுசெய்து என் குசேலன் படத்தை குப்புறக் கவுத்தி விடாதீர்கள் என்று கன்னட மக்களிடம் கெஞ்சியதெல்லாம் நம் மக்கள் மறந்து விட்டிருப்பார்கள். தமிழக மக்களின் இந்த "ஸார்ட் டைம் மெமரி லாஸ்"(Short Time Memory Loss) ஐ எல்லாரும் நல்லா பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்ப என்ன மேட்டருன்னா நேற்று கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி “அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதை சாக்கா வெச்சிக்கிட்டு ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம் என்று பட்டும் படாமலும் பேசியுள்ளார். சினிமாவை மட்டுமே குறிவைக்கும் ரஜினி அங்கு எந்த பாதுகாப்புமில்லாமல் இருக்கும் தமிழ்மக்களின் நலன் குறித்தும் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்  என்பது ஏகோபித்தவர்களின் எதிர்பார்ப்பு. ரஜினியின் மீது கன்னட மக்களுக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.ஆனால் ரஜினி தமிழக மக்களிடம் நடிப்பை மட்டும் தான் காட்டுகிறார்.ரஜினியைச் சொல்லிக் குற்றமில்லை. லதா போன்ற பெண் மனைவியாகக் கிடைத்தால் காந்தியா இருந்தாக் கூட கைலாயந்தான் போகனும்.

மலரும் பதிவுகள் :"விஜய்க்கு சங்கு ஊதிய ரசிகர்கள்"

அறிவிப்பு: முந்தய செய்திகளை படிக்க மேலே உள்ள கழுதையின் வாயில ஒரு குத்து குத்துங்க

11 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்தேன்

♠புதுவை சிவா♠ சொன்னது…

"படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்தேன்"

கோவி நானும் கபாலி
மப்பூல படம் மாத்தி போட்டார்னு பார்த்தேன்.
;-))))))))))))))))))))))))

கிரி ஓடியாங்க தலையை தப்பா எழுதி இருக்கார்.

;-))))))))))))))))))))))

mayavi சொன்னது…

does sathyaraj invest everyhting in chennai or doeshe invest in coimbatore?? one can invest where ever he wants, how mnay indians who are abroad invest there... first of all... why are you bothered where he invests. did he say that he is the saviour of tamil people anyhwere... why dont u people ask sathyaraj who is a puratchi tamilan... what puratchi has he done to tamilnadu?? can anyone of u please say ?? and simbu.. tamilan enn peru..enn mayirunu paduranee.avanai kuttitu poi bangaloeil oru protest panna vendiyathu thaane.... ilalti vijayai kuttitu poi srilankavil sandai poda vendiyathu thaane... athai ellam kekka nathi illa.. vanthutanunga blog eluthurathukku...

Bleachingpowder சொன்னது…

தண்ணி வேணும்,பொழப்பு வேணும்,பாதுகாப்பு வேணும்னா யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அந்த நாயை போய் கேளுங்க. இல்லைன்னா அந்த கேனக்கூ புரட்சி தமிழன் கிட்ட போய் கேளுங்க. அத விட்டுட்டு தன்னோட பொழப்பை மட்டும் பார்த்திட்டு இருக்கிற நடிகனை இன்னும் எத்தணை நாளைக்கு குத்தம் சொல்லீட்டு இருக்க போறீங்க.

பெயரில்லா சொன்னது…

Andha 75 % Ennannu Sonna Romba Nalla Irukkum Innum Ethana Varushathukku Idhey Pattai Padaporenga ? Idhellam Oru Pozhappu ?

முத்து சொன்னது…

அவரு சம்பாதிச்ச பணத்த கர்நாடக ல போடுறாரு இல்ல கடல் மேல போடுறாரு உங்களுக்கு என்ன வந்தது இன்னும் எவளோ நாள் அவர வெச்சு பொலப ஓட்ட போறீங்க நீங்க எல்லாம் காமெடி பீசு நீங்க கர்நாடகாவுல சம்பாதிச்ச அங்கயே முதலீடு பன்னுவிங்கள

குறிப்பு : உங்க பிளாக் பேரு பொருத்தமா இருக்கு

என்.இனியவன் சொன்னது…

நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை எப்போது உரியவரிடம் கேட்கப்போகிறீர்கள்?
தமிழர் பிரச்சினை என்றால் அரசியல்வாதியிடம் கேளுங்கள்.
நீங்கள் தானே வோட் போட்டு முதல்வர் ஆக்கினீர்கள்.

ரஜினி அரசியலுக்கும் வரக்கூடாது. .... ஆனால் உங்களுக்கு பிரச்சினை என்றால் மட்டும்
அவர் தான் வந்து தீர்த்து வைக்க வேண்டுமோ?

அவரது சொத்துக் கணக்கு எல்லாம் நீங்கள் தான் பார்க்கிறீர்கள் போல.
அவர் எங்கு முதலீடு செய்வது என்பது அவரது விருப்பம்.
ஏன் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் உங்களது உறவினர்கள் இங்கு சொத்து வாங்குவதே இல்லையோ?

எவ்வளவு தான் பேப்பர்காரரும் TVகாரனும் தாறுமாறாக ரஜினி பற்றி பிரச்சாரம் செய்தாலும்
அவரது நல்ல குணத்திற்கு அவருக்கு ரசிகர்கள் அதிகமாவார்களே தவிர குறையமாட்டார்கள்.


ரஜினி என்ன செய்யவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசிக்கவும்.

பெயரில்லா சொன்னது…

//ரஜினி என்ன செய்யவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசிக்கவும்//

inniyavan is right ennaya kaludai enna panna pora.... eppidiyo hits ai ethirura

Bhupathi சொன்னது…

As long as Tamils are deep in Cinema Madness nothing good can happen to them.Why a non-tamil should have this much following in TN? Because the fans are real donkeys.

கிரி சொன்னது…

//புதுவை சிவா♠ சொன்னது…
கிரி ஓடியாங்க தலையை தப்பா எழுதி இருக்கார்.//

:-)))

ரொம்ம்ம்ப தாமதமா வந்தாலும் ஏற்கனவே பலர் பதில் கூறி இருக்காங்க..இனி என்னத்தை சொல்றது :-)

எல்லோருக்கும் பதில் கூறி ஓய்ந்து விட்டது..ஐ எம் எஸ்கேப் :-))

கிரி சொன்னது…

இது குறித்து பின்னூட்டம் எதற்கு.. ஒரு பதிவே எழுதி இருக்கேன்..நேரம் இருந்தா படிங்க

http://www.giriblog.com/2008/07/blog-post_01.html