திங்கள், 23 மார்ச், 2009

விஜய்க்கு சில வில்லங்க யோசனைகள்

தற்சமயம் துவண்டு கிடக்கும்  விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.

யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம்பார்க்க வருபவர்களுக்கு விணியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார் பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும்  யாராலும் கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு  விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசணங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்

யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்ச‌ல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்.

யோசனை 12: 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதெல்லாம் பழைய ஃபேஸன். பேசாமல் நீங்கள் 10 ஜோடிக்கு இலவச விவாகரத்து என அறிவித்து அதைத் தலைவர்  கலைஞ‌ர் தலைமையில் ஒரு விழாவாக எடுத்தால் பிரபலம் ஆகிவிடலாம். பாராட்டுவிழா என்றாலே எப்போ,எப்போ என துடியாய் துடிக்கும் தலைவர் கலைஞர் இந்த வித்தியாச விழாவிற்கு உடணடியாக ஒப்புக்கொள்வார்.அது மட்டுமின்றி "விவாகரத்தான் விஜய்யே " என்ற தலைப்பில் ஒரு கடிதம் ஒன்றும் எழுதி அதை வழக்கம் போல அப்பாவித் தொண்டர்களைப் படிக்க வைத்து தண்டித்து விடுவார்.

பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:

மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.

*  மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படஙகளை ரீமேக் செய்து நடிக்கலாம்

* எம்ஜியார் நடித்த ரிக் ஷாக்காரன் படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக் செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்

* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில் நடிக்கலாம்.

"விஜய் குடுத்த‌ சவுண்ட பாக்கனுமா? இங்கின அமுக்குங்க."

அறிவிப்பு: அன்பு நெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..

35 கருத்துகள்:

லோகு சொன்னது…

//* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படஙகளை ரீமேக் செய்து நடிக்கலாம்//

வன்மையாக கண்டிக்கிறேன்.. விஜய் ஏற்கனவே சங்கவி உடன் நடித்த அற்புத சித்திரங்கள் தான் இப்பொழுது சகீலாவால் ரீ-மேக் செய்யப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும்..

ஊர் சுற்றி சொன்னது…

ராமராஜனையும் விஜயையும் சேர்த்து வைச்ச உங்க கற்பனையை என்னென்பது!!! :))))))))

எல்லா pointக்கும் சிரிப்போ சிரிப்புத்தான்.

சம்பத் சொன்னது…

///யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது///

பிரபு தேவாவால் கூட வில்லு பட கதையை கண்டு பிடிக்க முடியாது :-)

இராகவன் நைஜிரியா சொன்னது…

//ஒரு “காண்டாசா கார்” //

இரண்டாவது பரிசாக பியட் கார் கூட கொடுக்கலாம்.

SUREஷ் சொன்னது…

//திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.//


எங்கியோஓஓஓஓஓஒ போய்ட்டீங்கண்ணா

டக்ளஸ்....... சொன்னது…

எங்கள் தலிவர்.திரு.ராமராஜன் அவர்களின் புகைப்படத்தோடு டாக்டர்
படத்தை இணைத்து தலிவர் பேருக்கு களங்கம் விளைவித்த டாஸ்மாக் கபாலியை எதிர்த்து
திருச்சி (?) யில் ஆர்ப்பாட்ட்ம்.

அலைகடலென திரள்வீர்! ஆதரவு த்ருவீர்!

நான் ஆதவன் சொன்னது…

// டக்ளஸ்....... கூறியது...

எங்கள் தலிவர்.திரு.ராமராஜன் அவர்களின் புகைப்படத்தோடு டாக்டர்
படத்தை இணைத்து தலிவர் பேருக்கு களங்கம் விளைவித்த டாஸ்மாக் கபாலியை எதிர்த்து
திருச்சி (?) யில் ஆர்ப்பாட்ட்ம்.

அலைகடலென திரள்வீர்! ஆதரவு த்ருவீர்!//

என்ன இது??? தலிவரின் ரசிகர்மன்ற ஒரே தலைவரும் ஒரே உறுப்பினரும் ஆன எனக்கு தெரியாமல் ஆர்பாட்டமா??

வால்பையன் சொன்னது…

நல்ல காமெடி!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// லோகு கூறியது...
//* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படஙகளை ரீமேக் செய்து நடிக்கலாம்//

வன்மையாக கண்டிக்கிறேன்.. விஜய் ஏற்கனவே சங்கவி உடன் நடித்த அற்புத சித்திரங்கள் தான் இப்பொழுது சகீலாவால் ரீ-மேக் செய்யப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும்..//

ஆமாண்ணே!ஆமாண்ணே! அந்தப் பாயின்ட மறந்துட்டேன்.இப்ப சங்கவி விஜய்க்கு பாட்டியாக நடிக்கத் தயாரா இருக்காங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//
ஊர் சுற்றி கூறியது...
ராமராஜனையும் விஜயையும் சேர்த்து வைச்ச உங்க கற்பனையை என்னென்பது!!! :))))))))

எல்லா pointக்கும் சிரிப்போ சிரிப்புத்தான்.//

எல்லா சிரிப்புக்கும் நன்றியோ நன்றின்னே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//சம்பத் கூறியது...
///யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது///

பிரபு தேவாவால் கூட வில்லு பட கதையை கண்டு பிடிக்க முடியாது :-)//

ஆனா அவரு அந்த வில்லு மேட்டர எங்கிருந்து சுட்டாருன்னு தெரியல. ஒரு வேள அந்த ஒரிஜினல் வில்லு ஸ்கிரிப்ட எழுதுன ஆளு (அனேகமாக உதவி இயக்குனர் வாய்ப்பு தேடும் ஆளா இருக்கலாம்) இன்னேரம் அந்த படத்தோட வெற்றியால சொந்த ஊருக்கே போயி வெவெசாயம் பாக்க போயிட்டாருன்னு நெனக்கிறேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// இராகவன் நைஜிரியா கூறியது...
//ஒரு “காண்டாசா கார்” //

இரண்டாவது பரிசாக பியட் கார் கூட கொடுக்கலாம்.//

ஓக்கேண்ணே! முடிஞ்சா அந்த கதயச் சொல்லி 2 பரிசையும் நீங்களே வாங்கிக்கிங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//SUREஷ் கூறியது...
//திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.//


எங்கியோஓஓஓஓஓஒ போய்ட்டீங்கண்ணா //

எங்கயும் போகலண்ணே வில்லு படம் "ஓடும்" தியேட்டர்களை லவ்வர்ஸ் ஆக்கிரமிச்சிருக்கிறதா தகவல்(அட படம் பாக்க இல்லீங்க,தியேட்டர்ல‌ கூட்டம் இல்லாததால‌ மெரினா பீச்....) அதப் பாக்கத்தான் போனேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// டக்ளஸ்....... கூறியது...
எங்கள் தலிவர்.திரு.ராமராஜன் அவர்களின் புகைப்படத்தோடு டாக்டர்
படத்தை இணைத்து தலிவர் பேருக்கு களங்கம் விளைவித்த டாஸ்மாக் கபாலியை எதிர்த்து
திருச்சி (?) யில் ஆர்ப்பாட்ட்ம்.

அலைகடலென திரள்வீர்! ஆதரவு த்ருவீர்!//

அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு விஜய்க்கு எதிராக கோசம் போடத் தயார்.,
கண்டிக்கின்றோம்,கண்டிக்கின்றோம்...

டாஸ்மாக் கபாலி சொன்னது…

நான் ஆதவன் கூறியது...
// டக்ளஸ்....... கூறியது...

எங்கள் தலிவர்.திரு.ராமராஜன் அவர்களின் புகைப்படத்தோடு டாக்டர்
படத்தை இணைத்து தலிவர் பேருக்கு களங்கம் விளைவித்த டாஸ்மாக் கபாலியை எதிர்த்து
திருச்சி (?) யில் ஆர்ப்பாட்ட்ம்.

அலைகடலென திரள்வீர்! ஆதரவு த்ருவீர்!//

என்ன இது??? தலிவரின் ரசிகர்மன்ற ஒரே தலைவரும் ஒரே உறுப்பினரும் ஆன எனக்கு தெரியாமல் ஆர்பாட்டமா??//

தலைவரின் மேதை படம் எப்ப வருதாம்.உங்கள்ள உறுப்பினர் கார்டு இருந்தா என்னையும் எனச்சிக்கிங்க‌

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//வால்பையன் கூறியது...
நல்ல காமெடி!//

நன்றிண்ணே! இந்த மாதிரி எல்லாவிசயத்தையும் (காமெடியை காமெடியாய்,சீரியஸை சீரியஸாய்,அரசியலை அரசியலாய்) எல்லாமக்களும் எடுத்துக்கொண்டால் இந்தியா இதான்யான்னு வெளி நாட்டுக்காரனுக்கு காட்டிப்புடலாம்ணே!

Bleachingpowder சொன்னது…

//திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.//

ஆம்புலண்ஸ் எல்லாம் பத்தாது, ஒவ்வொரு தியேட்டர் எதிரிலும் ஆஸ்பத்திரியே கட்டனும்.

Bhuvanesh சொன்னது…

காமெடி யோசனைகள் எல்லாம் சூப்பர் அண்ணே..
//ஆம்புலண்ஸ் எல்லாம் பத்தாது, ஒவ்வொரு தியேட்டர் எதிரிலும் ஆஸ்பத்திரியே கட்டனும்.//

ஆனா இந்த கமெண்ட் அதா விட அட்டகாசம்..

அப்புறம் வில்லு படம் பாத்தவங்களை தியேட்டர் க்கு போய் கவுரவிச்ச மாதிரி,. யோசனை சொல்லறவங்க வீட்டுக்கே வராராம.. பாத்து பத்தரமா இருந்துகோங்க!!

Karthikeyan G சொன்னது…

Kabaali na..

Supernaa!!!!!!

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

தோஸ்து.... உள்ளம் இனிக்குது, கண்கள் பனிக்குது.... இப்படியே போநின்னாக்க உன்னோட பிளாக்கு தானடி சூப்பர் பிளாக்கு. அன்னிக்கு நீ எண்ணிய நினிச்சு குமுறி குமுறி "எல்லா குவாட்டரும் கோயிந்தனுக்கே" என்று சொல்லிக்குனு இருப்பே....

நையாண்டி நைனா சொன்னது…

ஆத்தா.... கபாலி பாசாயிட்டான்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Bleachingpowder கூறியது...
//திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.//

ஆம்புலண்ஸ் எல்லாம் பத்தாது, ஒவ்வொரு தியேட்டர் எதிரிலும் ஆஸ்பத்திரியே கட்டனும்.//

அருமண்ணே! நல்ல சிந்தனை.அந்த ஆஸ்பத்திரிக்குள்ள அஜீத் ரசிகர்களத்தான் வேலைக்கு வைக்கனும்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// Bhuvanesh கூறியது...
காமெடி யோசனைகள் எல்லாம் சூப்பர் அண்ணே..
//ஆம்புலண்ஸ் எல்லாம் பத்தாது, ஒவ்வொரு தியேட்டர் எதிரிலும் ஆஸ்பத்திரியே கட்டனும்.//

ஆனா இந்த கமெண்ட் அதா விட அட்டகாசம்..

அப்புறம் வில்லு படம் பாத்தவங்களை தியேட்டர் க்கு போய் கவுரவிச்ச மாதிரி,. யோசனை சொல்லறவங்க வீட்டுக்கே வராராம.. பாத்து பத்தரமா இருந்துகோங்க!!//

அப்படி என்னத்தேடி வந்தார்னா இந்த ஐடியாவ குடுத்தது புவனேசன் தான்னு சொல்லி கால் டைவர்ட் பண்ற மாதிரி ஆள் டைவர்ட் பண்ணிவிட்டுறேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
Kabaali na..

Supernaa!!!!!!//

Anna Thanks ganna.,

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
தோஸ்து.... உள்ளம் இனிக்குது, கண்கள் பனிக்குது....//

மாமு நீ தெனம் கலீஞரு கடிதம் பட்சி பட்சி இப்டி கல்லீஜா பேச ஆரம்பிச்சிட்டே

//இப்படியே போநின்னாக்க உன்னோட பிளாக்கு தானடி சூப்பர் பிளாக்கு. அன்னிக்கு நீ எண்ணிய நினிச்சு குமுறி குமுறி "எல்லா குவாட்டரும் கோயிந்தனுக்கே" என்று சொல்லிக்குனு இருப்பே....//

ஆக்ஹா.,கேக்கவே படா சோக்கா கீது மாமே! குவாட்டர் இன்னா நைனா புல்லே உணக்குத்தான்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// நையாண்டி நைனா கூறியது...
ஆத்தா.... கபாலி பாசாயிட்டான்.//

ஆக்ஹா., நல்லா கெளப்புறாருயா பீதிய‌

TBCD சொன்னது…

:))

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

கலக்கல்.

பெயரில்லா சொன்னது…

Enakennavo, vijayoda naina edutha sex padangalaye thirumbi vijaya nadikka solli remake pannalaam. Ramarajan is far better than this Idiot Vijay.

Vetrinery Doctor Vijay Vaalga!

Mrithulla சொன்னது…

Sema comedy padikum poothe cippu cippaaa varuthu !!!

Too good !!!!

Sen22 சொன்னது…

//
யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது //

Ithu Toppa irukku Boss.


Senthil,
Bangalore

உள்ளத்தில் இருந்து.. சொன்னது…

எதுக்கு காண்டாசா கார். ஒரு பென்ஸ் , BMW கூட குடுக்கலாம்.. சத்யமா யாரும் ஜெயிக்க போறதில்லை :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

லோகு கூறியது...
//* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படஙகளை ரீமேக் செய்து நடிக்கலாம்//

வன்மையாக கண்டிக்கிறேன்.. விஜய் ஏற்கனவே சங்கவி உடன் நடித்த அற்புத சித்திரங்கள் தான் இப்பொழுது சகீலாவால் ரீ-மேக் செய்யப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும்..//


நம்ம தங்க தலைவி சங்கவியோட அண்ணன் விஜய் நடிச்ச படங்கள மறுபடி ரிலீஸ் பண்ணாலே போதும்.... ஷகிலா படம் எல்லாம் எடுக்க தேவையில்லை.

கபாலி அண்ணா இதையும் சேத்துக்குங்க...

-விஜய் ரிமிக்சுக்கு இப்போ இருக்கிற மவுச பயன்படுத்தி தன்னுடைய பழைய பாடல்களையும் "டேய்..பேசிக்கிட்டிருகோம்ல..சைலன்ஸ்..." டயலாக்க சேர்த்து ரிமிக்ஸ் பண்ணி படமாவோ ஆல்பமாவோ ரிலீஸ் பண்ணி காசு பாத்துடலாம்

-அஜீத் போல இருக்கும் டூப்ளிகேட்டுகளை கண்டுபிடித்து, இதே போல ஒரு பேட்டி கொடுக்க வைக்கலாம், அதையும் ரிமிக்ஸ் செய்து வெளியிடலாம்.. இதனால் அனைவரும் விஜயின் பேட்டியை மறந்துவிட வாய்ப்புண்டு

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”
என்ற எங்கள் தளபதியின் வசனத்துடன் தொடங்குகிறோம்,. அவரின் புகழ் பரப்ப வந்திருக்கிற எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம். எங்களையும், தளபதியையும் சீண்டாத வரை நல்லது.

பெயரில்லா சொன்னது…

கழுதைக்கு தெரியுமா கற்ப்பூர வாசனை.........