வியாழன், 5 மார்ச், 2009

கும்பகோணம் வெத்தலயும், ARR சீவலும்

கும்பகோணம் வெத்தலயும், ARR சீவலும்,பன்னீர் புகையிலையும் ஒன்னு சேர்ந்த மணத்தோடந்நேரமும் சிவந்த வாயோடுயும் சிவப்புத்துண்டோடும் தீயணைப்பு வண்டி மாதிரி வலம் வந்து வந்தாரை “வாங்கப்பு என வாயார அழைக்கும் இந்த தஞ்சாவூர்க்காரர் நம்ம எல்.கணேசன். “எல்.ஜி என வைகோவால் செல்லமாக அழைக்கப்பட்டவர் இன்று ஒய்.ஜி (மகேந்திரன்) யை விட மோசமாகித் தெருவில் நிற்கிறார். தாயகமே தன் இல்லம் என இருந்தவர்,வைகோ நடைபயணமாக செல்லும் வேலையில்,அவர் அப்படியே நடந்து உலகம் சுற்றப்போகிறார்,திரும்பி வரமாட்டார் என நினைத்து வைகோவின் நாற்காலியை வஞ்சிக்க நினைத்தவர் இந்த எல்.ஜி. இந்த ஐடியாவ குடுத்ததே செஞ்சி தான்.ஆனா இந்த நாடகத்துக்கு கதவசணம் எழுதிக்கொடுத்தது கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் .

தாயகத்த விட்டும் மதிமுகவை விட்டும் வைகோ இரண்டு பேரயும் கழுத்தப் புடிச்சி வெளிய தள்ள, வெறும் இரண்டு பேர் தங்களிடம் 2000 பேர் இருப்பதாக கலைஞரிடம் புரூடா விட, மதிமுகவை மட்டம் பண்ணிவிடலாமென கலைஞருக்கு மட்டற்ற மகிழ்சி.இதைக் கேள்விப் பட்டு கொதித்த வைகோ “வட்டமிடும் கழுகு வாய்பிழக்கும் ஓநாய் என கலைஞரின் டைலாக்கை கலைஞருக்கே திருப்பி விட தாயகம் தவித்துத் தான் போனது

இப்ப என்ன மேட்டருன்னா இரண்டு பேர் மட்டுமே உள்ள போட்டி மதிமுகவை திமுகவுடன் இனைக்க பிரம்மாண்டமான கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர் எல்ஜியும் செஞ்சியும். தீவுத்திடல் கொள்ளாது, தமுக்கம் மைதானத்த புடிப்போம் என சொல்லிவந்த இருவரும் கடைசியில் கமுக்கமாக கலைவாணர் அரங்கத்தில் வரும் 17ம் தேதி இணைகிறார்கள் என்பது தான் செய்தி. எத்தனையோ தடவை பிரம்மாண்ட இணைப்பு விழாக்கெல்லாம் ஏற்பாடு செய்ய நினைத்து மைக்செட் கூட வாடகைக்கு எடுக்கமுடியாத நிலையில் தற்போது கலைஞரின் தயவால் கலைவாணர் அரங்கம் கதவு திறந்திருக்கிறது (கலைஞருக்கு இன்னொரு பாராட்டு விழா லாபம்) என்பது ஆறுதல் தரும் செய்தி.

விழாவில் எத்தனி பேர் இணைகிறார்கள் என்ற பத்திரிக்கையாளர்களின்  கேள்விக்கு தன் சிவந்தவாயைத் திறந்து ஹா.,,,என சிரித்திருக்கிறார் எல்ஜி. அதக் கண்டு மிரண்ட பத்திரிக்கையாளர்கள் அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டுவிட்டனர்.

உன்குத்தமா என்குத்தமா யாரநானும் குத்தம் சொல்ல..,,

ஞாயிறு அதிரடி: "கலைஞர் தொலைக்காட்சிகள் பங்கிடப் பட்டால்" 

அதிரடி சிறப்பு பதிவு. வரும் ஞாயிறு படிக்கத் தவறாதீர்கள்.