வியாழன், 26 மார்ச், 2009

நினைவுகள்: சம்சாரம் அது மின்சாரம்

நம் வாழ்க்கையில் எத்தனோ நினைவுகள் தொலந்து போயிருக்கும்.தேடித் தேடி ஓடினாலும் கிடைக்காது.எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது.அந்தக் கால வாழ்க்கையை அனுபவிக்காத இன்றைய நகரவாசிகள் அதிர்ஷ்டமில்லாதவர்கள். இளவயது வாழ்க்கைநண்பர்கள்விவரம் தெரியாதக் காதல்செல்போன் நச்சரிப்பு இல்லாத அந்த நாள்..,,,திரும்பிவராது.,வரவே வராது.அது போன்ற பழைய நினைவுகளை அசைபோடுவது தான் இந்த நினைவுகள்.

18 ஜூலை  1986-சினிமா உலகம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது இப்படி ஒரு வாழ்க்கை, படமாக பாடமாக வருமென்று. A.V.M தயாரிப்பில் விசுவின் கதை வசண இயக்கத்தில் வளிவந்த குடும்பக் காவியம் சம்சாரம் அது மின்சாரம்.

அம்மையப்ப முதலியார் கோதாவரி என்ற அழகு குடும்பத்தில் இருந்து துவங்குகிறது காவியம்.விசு,கமலா காமேஷ். அவர்களுக்கு பிள்ளைகளாக ரகுவரன்,சந்திரசேகர்,காஜாசெரீப், இளவரசி.

ரகுவரனின் மனைவியாக லட்சுமி. மகிழ்சியாக போய்க்கொண்டிருக்கும் குடும்படுத்தில் விசுவின் மகள் ரூபத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது.விசுவின் மகள் ஒரு கிருத்தவ பையனை (திலீப்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.இதனால் சோர்ந்து போகும் விசு, டெல்லிகணேசின் மகள் மாதுரியைத் தன் மகன் சந்திரசேகருக்கு  திருமணம் செய்து வைக்கிறார்.அந்த நேரத்தில் லட்சுமி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல பிரச்சிணை வெடிக்கிறது. ரகுவரனோடு ஏற்படும் மோதலில் வீடு இரண்டாகப் பிரிக்கப் பட்டு நடுவே கோடு போ டப்படுகிறது. இந்த நிலையில் வாழப்போன மகள் வாழா வெட்டியாக வீட்டிற்குத் திரும்பிவருகிறார்.அதே நேரம் பிரசவத்துக்குப் போன லெட்சுமியும் குழந்தையோடு திரும்பிவந்து தன் கணவனால் சிதறிய குடும்பத்தை ஒன்றினைக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று சுபமாகிறது.

இயக்குணர் விசு எங்கிருந்து சிந்தித்தாரோ இப்படி ஒரு குடும்பத்தை. தொழில் நுட்பங்களே தேவையில்லாத அழகு படம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. கண்ணம்மா என்ற பாத்திரத்தில் வீட்டு வேலைக்காரியாக நடித்த மனோரமா கணகச்சிதம். அவர் வரும் கண்ணம்மா- கம்முன்னு கெட காட்சி அந்த காலத்தில் மிகமிக‌ ரசிக்கப்பட்டது. அவரோடு போட்டி போட்டி மோதும் ஆல்பர்ட் பெர்னான்டஸ் ஆக கிஷ்மு. தன் மருமகளிடம் ஓரள‌விற்காவது கண்ணியத்தை எதிர்பார்க்கும் மாமனாராக நடித்திருந்தார். சிவா என்ற கேரக்டரில் அடக்கமான நடிப்பில் சந்திரசேகரும் அசத்தியிருந்தார். குடும்ப மருமகளாக வாழ்ந்தேயிருந்தார் லெட்சுமி. பிரிந்து போன குடும்பத்தை ஒன்றினைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் அருமை.மக்களால் மிகமிக ரசிக்கப்பட்டன. படத்தின் மிக முக்கியமான உயிரோட்டமே ரகுவரன் தான்.

சிதம்பரம் என்ற பாத்திரத்தில் அலப்பறை கொடுத்திருந்தார். ஒரு காட்சியில்

விசு: " நம்ம குடும்பம் என்ற கப்பல் மூழ்கிகிட்டு இருக்குப்பா"

ரகு : "அப்டின்னா கடல்ல குதிச்சி தப்பிக்க வேண்டியது தானே"

விசு: "எப்டிப்பா முடியும் நான் இந்த கப்பலோட கேப்டன்"

ரகு : "ஆனா நான் சாதரண பயணி,எனக்கு நீச்சலும் தெரியும்" என்பார்.

இது போன்ற வசனங்கள் இன்றெல்லாம் எங்குமே காணமுடியாது. சங்கர் கனேஷ் இசையில் அனைத்துப் பாடல்களுமே பிரபலம்.குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம்,ஜானகிதேவி,ஊரத்தெரிஞ்சிகிட்டேன் பாடல்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லையெனலாம். அன்றைக்கு திரைவிமர்சனங்கள்,தனியார் தொலைக்காட்சி டிரைலர்கள் போன்ற எந்த விளம்பரங்களும் இல்லாமலேயே இந்தப் படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் கதை வசண ஆடியோ கேசட்கள் 2 லட்சம் விற்றுத்தீர்ந்தாக‌ சொல்லி நினைவிருக்கிறது. சென்னையில் தேவி தியேட்டரில் ஓடியதாக நினைக்கிறேன்.தயவு செய்து சென்னைவாசிகள் யாராவது இதை உறுதிப் படுத்தவும்.

 

 

பயோ-டேட்டா

விசு: ஒரு சிறந்த இயக்குணர்,சிறந்த நடிகர் கம் வசணகர்த்தா.இவர் எடுத்த அனைத்து படங்களிலும் துளியும் விரசம்,ஆபாசம் இருக்காது.குடும்பப் படங்கள் எடுத்து ஓய்ந்து போய் சன்டிவியில் அரட்டை அரங்கத்தை ஆரம்பித்தார்.பிறகு சன்னுடன் ஏற்பட்ட மோதலில் மதருடன் ஐக்கியமாகி மக்கள் அரங்கம் நடத்திக்கொண்டிக்கொண்டிருக்கிறார்.தற்போது அரட்டை அரங்கத்தில் கரடி ஒன்று கதறிக்கொண்டிப்பதாகச் சொல்கிறார்கள்.

கிஷ்மூ : விசுவின் தம்பி இவர். எந்தப் படத்திலும் தனக்குக் கொடுத்த கேரக்டரை விட்டு வெளியே ஒரு இன்ச் கூட நகரமாட்டார்.தன்னுடைய இளமைக் காலத்திலேயே மறைந்துவிட்ட ஒரு நகைச்சுவை மந்திரம்.

ரகுவரன்: மிகச் சிறந்த நடிகர். அனைவராலும் ரசிக்கப்பட்டவர்.தன்னுடைய நடத்தியால் சீரழிந்து பின் மறுவாழ்வு பெற்று மறைந்து விட்ட ஒரு சரித்திரம்.

சந்திரசேகர்: மிகச் சிறந்த நடிகர்.சரியான வாய்ப்பில்லாமல் திமுக என்னும் பஸ்ஸில் ஏறி இடம் கிடைக்காமல் இன்னும் ஃபுட்போர்டிலேயே தொங்கிக்கொண்டிருக்கிறார்.

லட்சுமி: புரட்சி நடிகையாக பார்க்கப் பட்ட இவர் நடிகை ஐஸ்வர்யாவின் அம்மா.கதையல்ல நிஜம் நிகழ்சியில் அடுத்தவர் வாழ்க்கையை நோண்டும் இவரது வாழ்க்கையும் ஒரு கதயல்ல நிஜம்.

மாதுரி : விபசார வழக்கில் போலீஸில் முதல்முதலாக மாட்டி தொழிலைத் துவக்கிவைத்தவர். இப்போ எந்த லாட்ஜில இருக்காரோ இல்ல ஓட்டல்ல இருக்காரோ தெரியல.

காஜாசெரீப்: இப்ப என்ன செய்கிறார் எனத்தெரியவில்லை.கடைசியாக சிட்டிசன் படத்தில் ஒரு சின்னக் காட்சியில் தோன்றினார்.

மனோரமா: தலைமுறை கண்டவர்.ஆச்சி என அன்போடு அழைக்கப்படுவர்.படத்தில் இவர் அழுதால் அனைவரும் சேர்ந்து அழுவார்கள்.

திலீப் : சிறந்த நடிகர்.இப்போது எங்கே எனத்தெரியவில்லை.

இவ்ளோ சீரியஸான படத்தை வைத்து காமெடி பண்ண முடியுமா? இங்க போயி பாருங்க. உங்களுக்கே புரியும்.

-ராயப்பேட்டை ராமு 

12 கருத்துகள்:

யாத்ரீகன் சொன்னது…

the ending of the movie does much justice to the real life and the story rather than trying to ending it with a cinematic approach. good movie.

shabi சொன்னது…

விசுவின் மகளாக நடித்தது இளவரசி/மனோரமா மகன் இந்த திலீப் இல்லை

enRenRum-anbudan.BALA சொன்னது…

மிக அருமையான திரைப்படம்.

உங்கள் விமர்சனமும் அசத்தல் !

ரமேஷ் வைத்யா சொன்னது…

இன்னா கபாலி,
எகிறிட்டு கிதா? திலீப் மனோரமா மகன் இல்லை. மனோரமா மகன் பூபதி. ஒரு ஐயப்பன் படத்தில் பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் என்கிற பாட்டைப் பாடிக்கொண்டு வருவாரே...

T.V.Radhakrishnan சொன்னது…

சென்னை மிட்லண்ட் திரை அரங்கில் (தற்போதைய ஜயப்ரதா) வெளியானது. முதல் தங்கபதக்கம் தேசிய விருது பெற்ற தமிழ் படம்.

பெயரில்லா சொன்னது…

இறுதி காட்சியும் அதில் இடம் பெற்ற லட்சுமியின் உரையாடலும் மொத்த படத்திற்கும் வலிமை சேர்த்தது.

ஒரு நல்ல திரைப்படத்தை நினைவு கூரந்தமைக்கு நன்றி.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// யாத்ரீகன் கூறியது...
the ending of the movie does much justice to the real life and the story rather than trying to ending it with a cinematic approach. good movie.//

Yes sir.It is True. Thanks for ur visiting

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// shabi கூறியது...
விசுவின் மகளாக நடித்தது இளவரசி/மனோரமா மகன் இந்த திலீப் இல்லை//

நன்றிண்ணே! மாத்திக்கிட்டேன்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// enRenRum-anbudan.BALA கூறியது...
மிக அருமையான திரைப்படம்.

உங்கள் விமர்சனமும் அசத்தல் !//

நன்றிண்ணே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// ரமேஷ் வைத்யா கூறியது...
இன்னா கபாலி,
எகிறிட்டு கிதா? திலீப் மனோரமா மகன் இல்லை. மனோரமா மகன் பூபதி. ஒரு ஐயப்பன் படத்தில் பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் என்கிற பாட்டைப் பாடிக்கொண்டு வருவாரே...//

ஓ! சாரி சாரே! அத நான் மாத்திட்டேன். நிங்கட இன்பர்மேசனுக்கு தேங்ஸ் சாரே!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// T.V.Radhakrishnan கூறியது...
சென்னை மிட்லண்ட் திரை அரங்கில் (தற்போதைய ஜயப்ரதா) வெளியானது. முதல் தங்கபதக்கம் தேசிய விருது பெற்ற தமிழ் படம்.//

நன்றிண்ணே! ஜெயப்பிரதா பத்தி அருமையான தகவல்.ஆனா தேவி தியேட்டர்ல அந்த படத்தோட ஸீல்ட பாத்ததா ஞாபகம்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// கங்கை கொண்டான் கூறியது...
இறுதி காட்சியும் அதில் இடம் பெற்ற லட்சுமியின் உரையாடலும் மொத்த படத்திற்கும் வலிமை சேர்த்தது.

ஒரு நல்ல திரைப்படத்தை நினைவு கூரந்தமைக்கு நன்றி.//

ஆமாண்ணே! கிளைமேக்ஸில் லட்சுமி இப்படி ஒரு முடிவு எடுப்பார்னு யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.ஆனால் அது தான் சரி