புதன், 18 மார்ச், 2009

கத்திய விஜய்யும் கலக்கும் ரீமிக்ஸூம்

நாமெல்லாம் ஹாலிவுட் படம் பாத்திருப்போம்.அதில தான் ஒரு படம் முடிஞ்சவுடன் அதோட தொடர்சியா இரண்டாம் பாகம் வெளிவரும்.அந்த மாதிரி ஒரு பதிவின் இரண்டாம் பாகம் வெளிவருகிற அள‌விற்கு நடந்து முடிந்த ஒரு நிகழ்சி மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று கலக்கிக் கொண்டுள்ளது என்றால் அது விஜய் கொடுத்த சவுண்டு தான். வழக்கமாக அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நடக்கும் போஸ்டர் மோதல்கள்,சுவர் விளம்பர மோதல்களின் வாசகங்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.பதிலுக்கு பதில் சூடாக சுவையாக விறுவிறுப்பாக வாசக யுத்தங்கள் நடைபெறும்.ஆனால் இந்த சவுண்டு மேட்டரில் விஜய் ரசிகர்களிடமிருந்து எந்த விதமான ரியாக்சனும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. 

//விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க.. "ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன் பீமா பீமா பீமன்கிட்ட கத‌ய கேட்டேன் முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்.. ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்" 

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியாடா? படுவா...கரிச்சட்டித் தலையா... குன்ன வாயா... 

விஜய்:??!//

 இந்த டயலாக்கை எழுதிய மாண்புமிகு கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு நன்றி

இந்த வீடியோ (டேய்...,பேசிக்கிட்டுருக்கோம்ல.,,சைலண்ஸ்) அஜீத் ரசிகர்களின் கைவண்ணம்,உங்களுக்கு விஜய் மீது காண்டு இருந்தால் ஒரு பதிவு போட்டுத்தீர்த்துக் கொள்ளுங்கள் என சில விஜய் ஆதரவு ரசிக வலைத்தளங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டன. ஆனால் அது ரீமிக்ஸ் இல்ல ஒரிஜினல்,இப்ப போடுறோம் பாரு ரீமிக்ஸூ என சில மென் உள்ளங்கள் ஒரு அருமையான ரீமிக்ஸை உலவ விட்டு விஜய்யின் பேட்டிக்கு அழகுக்கு அழகு சேர்த்துள்ளனர்.ஏற்கனவே "திருட்டுப் பயலே திருட்டுப் பயலே" என்றொரு ரீமிக்ஸை விட்டு பரவசப் படுத்தியுள்ள அஜீத் ரசிக கண்மணிகள் அதை விட அழகாக இதை வடிவமைத்துள்ளனர்.

இதிலேர்ந்து என்ன தெரியுதுன்னா இணைய மென்பொருள் வடிவமைப்புகளில் அதிகம் அஜீத் ரசிகர்களே நிறைந்துள்ளனர்.அதாவது மெட்ராஸ் பாஸைல சொல்ல சொல்லோ "அஜீத் ஆளுங்க அல்லாரும் பட்சதுங்க,விஜய் ஆளுங்க கல்லீஜி பார்ட்டிங்க" அப்டின்னு நான் சொல்லலங்க. விமர்சகர்கள் கூறுகிறார்கள். அந்த ரீமிக்ஸ் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு..,

கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் "விஜய்யின் ரீமிக்ஸ் பார்க்க இங்கே கிளிக்கவும்"

 

5 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

அடப்பாவி மக்கா.... இவ்ளோ நாளும் வடிவேலு அண்ணன் தான் எல்லா அடியையும் வாங்கிகிட்டு இருந்தாரு. வலிக்காத மாதிரி நடிச்சுகிட்டு இருந்தாரு இப்ப விஜய்யா???

ஜுர்கேன் க்ருகேர் சொன்னது…

சிரிப்பு காட்டியதற்கு நன்றி

பனங்காட்டான் சொன்னது…

என்ன தலைவரே..பழி வாங்கும் நடவடிக்கைல இறங்கீட்டீங்க போல...அந்த ராஜேந்தர் அறிவிப்பு உண்மையிலேயே எனக்கு ஈமெயிலில் வந்ததுதான். உங்கள் பின்னூட்டத்துக்கு பின்னாடி உங்க பதிவுகளை போட்டு ராப்பகலா தேடி ஒருவழியா கண்டுபிடிச்சுட்டேன்...ஆனா அந்த டி.ராஜேந்தர் அறிவிப்பு நீங்களே உருவாக்கியதுன்னு சொல்லுங்க நான் என்னோட பதிவ எடுத்துடறேன்...(உங்களோட பழி சுமத்தும் பின்னூட்டத்த நான் டெலீட் எல்லாம் பண்ணலை)

பனங்காட்டான் சொன்னது…

தலைவரே திருடுறவங்க யாரும் இந்த மாதிரி பண்ணமாட்டாங்க...உங்க பதிவுல இருந்து எடுத்திருந்தா அத பதிவா போட்டு உங்களையே வந்து பாக்க சொல்வேனா. புரிஞ்சுக்குங்க பாஸ்...நிஜமாகவே அந்த டி.ராஜேந்தர் மேட்டர் நீங்களே உருவாக்கியதுதான் சொன்னா (நிரூபிக்கவெல்லாம் சொல்ல மாட்டேன்) என்னுடைய அந்த பதிவையே எடுத்துடறேன்..

பனங்காட்டான் சொன்னது…

தாங்கள் டி. ராஜேந்தர் மேட்டரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மௌனம் சாதித்து வருவதால், சந்தேகத்தின் பலனை தங்களுக்கே கொடுத்து, அந்த மேட்டர் உங்களுடைய படைப்பே என்று முடிவு செய்து அது சம்பந்தமான எனது பதிவை நீக்கி விடுகிறேன். மேலும் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும், நேர விரயத்திற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!