சனி, 7 மார்ச், 2009

பத்து சீட்டுக்கு பல்லைக் காட்டும் பாமக‌

என்னவோ தெரியல நம்ம மருத்துவர் அய்யா இதுவரைக்கும் எதிர்க்கட்சியா இருந்ததே இல்ல.அதாவது எந்த கட்சி ஜெயிக்கும்னு சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பாத்து அங்க போயி செட்டில் ஆயிடுவாரு.எலக்சன் நேரத்துல மட்டும் கொள்கை பற்றியோ மக்கள் பற்றியோ துளியும் கவலைப்படமாட்டார் மருத்துவர் அய்யா. லண்டன் கலாச்சாரம் மாதிரி யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.கலைஞர் எவ்வளவோ மாய வேலைகள் பார்த்தும் அவர் விரித்த வலையில் சிக்காமல் கல்தா கொடுத்துக் கொண்டிருக்கிறார் மருத்துவர். அதேநேரம் பலமான பேச்சி வார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறதாம். இந்த முறை கம்னியூஸ்ட்டுகள் கலைஞ‌ரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டதால் காங்கிரஸ் கலைஞரிடம் அதிக சீட்டுகளை எதிர்பார்க்கிறதாம்.அநேகமாக 50/50 என்ற ரேஞ்சில்தான் பேச்சிவார்த்தை நடக்கிறதாம்.ஆனால் காத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர் நிச்சயமாக குறைந்தபட்சம் கடைசிவரைக்கும் 10 பேசிப்பாருங்க. போங்கய்யா நீங்களும் உங்க கூட்டனியும்னு கெளம்புறமாதிரி தெரிஞ்சா 15 க்கு ஒத்துக்குங்க. 15க்கு மேல ஒரு சல்லிக்கூட கெடயாதுன்னு கன்பாம்மா சொல்லிடுங்க என பேரக்குழு விடம் கலைஞர் ஆலோசனை வழங்கியிருக்கிறாராம்.

இந்த நிலையில் மருத்துவர் அய்யாவின் பேரக்குழு 10 கேட்கும் நிலையில் உள்ளதாம்.10 ன்னா ஓகே, தமிழினத்துக்கே தலைவர் நீங்கதான்,சிறந்த தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சிதான்னு அறிக்கை விடத் தயாராக இருப்பதாக மருத்துவர் அய்யா தனது பேரக்குழுவை கலைஞரை சந்திக்க அனுப்பியுள்ளதாகவும் தகவல்.அதே நேரம் ஜெயாவிடமும் ஒரு பேரக்குளு இதே தகவலுடன் சென்றிருப்பதாகவும் அப்படி ஜெவிடம் பேரம் படியும் நிலையில், என் அன்பு சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டேன் எனவும் இருவேறு அறிக்கைகள் டைப்செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாம். கடைசியாக ஜெவிடம் இருந்து 6+1 என்ற விகித்தத்தில்(6 லோக்,1 ராஜ்ய) ரிசல்ட் கிடைத்துவிட்டதாகவும், கடைசியாக கலைஞர் டென்டர் ஓப்பன் பண்ணும் வரைக் காத்திருக்கிறோம் எனவும் பாமகாவின் கடைநிலைத்தொண்டர் ஒருவர் ரகசியத்தை கசியவிட்டார்.குறைந்து கலைஞரிடம் 7+1 என்பது அய்யாவின் எதிர்பார்ப்பு.பாமக வின் கூட்டனிச் சாவி கலைஞரிடம் தான் உள்ளது என்பது தெளிவான செய்தி.,,

ஆரியக்கூத்தாடினாலும் தான்டவக்கோணே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோணே., உள்ளே பகைவையட தாண்டவக்கோணே காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோணே..,

ஞாயிறு அதிரடி: "கலைஞர் தொலைக்காட்சிகள் பங்கிடப் பட்டால்" 
அதிரடி சிறப்பு பதிவு. நாளை படிக்கத் தவறாதீர்கள்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எல்லாரும் பச்சை துண்டு போட்டிருக்காய்ங்களே? ;)

உடன்பிறப்பு சொன்னது…

//பெயரில்லா சொன்னது…

எல்லாரும் பச்சை துண்டு போட்டிருக்காய்ங்களே? ;)
//

அ.தி.மு.க. கூட்டணி உறுதி ஆன மாதிரி தான்