தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டாலே நகைச்சுவைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிரிப்புத்திருவிழா என்று கூடச் சொல்லலாம்.தினம் ஒரு காமெடிகள் அரங்கேறும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் கைகளை துண்டால் போர்த்திக்கொண்டு பேரம் பேசுவதை கிராமத்திலே காணலாம்.ஆனால் நகர்புறங்களில் மாட்டுச்சந்தைகள் இல்லாத காரணத்தால் அந்த வேலையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருமையாக செய்கின்றனர். ஒரு பிரிண்டிங் பிரஸூக்குப் போய் 150 ரூபாய்க்கு ஒரு லட்டர்பேட் 40 ரூபாய்க்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப், தினக்கூலி ஒரு கட்டிங்,முட்டை பிரியாணிக்கு 2 அல்லது 3 எடுபிடிகள் என ஆரம்பிக்கிறது கட்சிகளின் துவக்கம்.கொஞ்சம் காசு இருந்தா போதும் நம்ம வாழும் பாரி கடையெட்டாவது வள்ளல் வீரத்தளபதி ரித்தீஸ் அவர்களின் பாணியைப் பின்பற்றி வெகுவிரைவில் பிரபலமாகிவிடலாம்.
பிளக்ஸ் பிரிண்டர்ஸ் நிறைந்திருக்கும் திருவல்லிக்கேணி பக்கம் பிளக்ஸ் கடை விளம்பரங்கள் சந்துக்கு சந்து ஒட்டப்பட்டுள்ளன.அந்த கடை விளம்பரங்களில் வீரத்தளபதி ரித்தீஸ் துப்பாக்கியுடன் காட்சியளிக்கிறார்.என்னடான்னு விசாரிச்சா ரித்தீஸ் படம் போட்டு அவர்கள் கடை விளம்பத்துடன் வெளியிட வீரத்தளபதி ரித்தீஸே காசு கொடுத்திருக்கிறார் என்றார்கள்.அதுமட்டுமில்லாமல் ஆட்டோக்களின் பின்புறம் மாதம் 150 ரூபாய் பேசி விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
என்னடா இது தலைவர் ஏசி.சண்முகக்கும் வீரத்தளபதி ரித்தீஸுக்கும் என்ன சம்பந்தம்னு குழப்பமா இருக்குதா?குழப்பமே வேண்டாம்.இரண்டு பேருக்கும் ஒரு தொடர்பு இருக்கு.அட சொந்தமெல்லாம் இல்லீங்க.இருவரும் பிரபலமாக இது போன்ற ஒரே ரூட்டைத்தான் கையாண்டார்கள்.
இப்ப இன்னா மேட்டருன்னா,நம்ம பழைய நீதிக்கட்சி (ஆரம்பிச்சி ரொம்ப நாள் ஆச்சில்ல)எதாவது ஒரு கட்சியில ஒரு சீட்டாவது கறந்துறலாம் என கணக்குப் போட்டு பேரணி ஆர்ப்பாட்டம் மாநாடு பல விளம்பரங்களை கொடுத்துப்பார்த்தார்.யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நைசாக திமுகவிற்குத் தூது விட்டாராம்.ஏற்கனவே 6 சீட்டுக்கொடுத்தும் ஏசிஎஸ் வீட்டுல வேலைசெய்யிற ஆயாக் கூட அவர் கட்சிக்கு ஓட்டுப் போடாத காயத்தை ஏசிஎஸ் மறந்தாலும் கலைஞர் மறப்பதாய் இல்லை.எம்ஜியார் "பல்"கலைக்கழக கூவ ஆத்துக் கட்டிடப் பிரச்சணையில் அம்மாவிடம் ஏற்பட்ட லடாயின் காரணமாக அந்தப் பக்கமும் போகமுடியாது. இதனால் நொந்துபோன ஏசிஎஸ் "வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு அதிக வாக்காளர்கள் உள்ளனர்.எனவே இவற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்" என ஒரு அறிக்கை (சும்மா உள்ளுலாய்க்கி தான்) விட்டுள்ளார்.பாக்கலாம் எந்த இளிச்சவாயன் மாட்டுறான்னு.
ஞாயிறு அதிரடி: "அதிமுக வேட்பாளர்களுக்கு சில டிப்ஸ்" நாளை படிக்கத்தவறாதீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக