ஞாயிறு, 15 மார்ச், 2009

க‌லைஞர் கடிதமும்,கபாலி விளக்கமும்

கலைஞர்: தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், ஜெயலலிதாவுக்கு முதல் வேலை, ஏதோ தானே தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த மேல் அமைப்பின் தலைவர் பதவியில் இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு உத்தரவிட ஆரம்பித்து விடுவார்.
கபாலி: ஆனால் அவர் உங்களைப் போல, அப்பாவி அன்பழகனார்,ஆற்காட்டார் ஆகியோரை அறிக்கை விடவைத்து விட்டு பின்னால் ஒழிந்து நின்று பார்க்கமாட்டார்.
கலைஞர்: கடந்த காலத்தில் தேர்தல் ஆணையங்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆணையத்தின் பரிந்துரைகளை அல்லது உத்தரவுகளை நிறைவேற்றாமல், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்றார்.
கபாலி: உச்ச நீதிமன்றமே உங்கள் ஆட்சியைக் கலைத்தால் என்ன? என்று நோட்டீஸ் விட்டதே! மறந்து விட்டீரோ?
கலைஞர்: திருமங்கலம் இடைத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற பிறகும், தேர்தல் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, மற்றவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எல்லாம் உதய சூரியன் சின்னத்தில் பதிவாகி விட்டது என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டார்.
கபாலி : அதெப்டி தலைவரே திருமங்கலத்துல அண்ணன் அஞ்சா நெஞ்சர் அழகிரி சொன்னது போலவே 40,000 வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சாங்க?. அண்ணே எப்போ ஜோசியம் படிச்சார்?
கலைஞர்:ஒரு தேர்தலில் வாக்குப் பதிவு செய்யும் மின் இயந்திரம் கோளாறு என்பார்; இன்னொரு தேர்தலில் அந்த மின் இயந்திரத்தையே மாற்ற வேண்டும், பழையபடி வாக்குச் சீட்டுகளை பதிவு செய்யும் முறையைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறுவார்.
கபாலி : ஆனா தலைவரே நம்ம கட்சிக்கு மிசின் தான் லாயக்கு. ரீசெட் பண்ணி பண்ணி 10 நிமிஷ‌த்தில 10,000 ஓட்டு போட்டுறலாம். ஆனா சீட்டு ரொம்ப கஷ்டம். அதக் கிழிச்சி, மடிச்சி அதுக்கு ரொம்ப லேட்டாகும். 
கலைஞர்: ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளை பெரிய அளவில் வெளியிடுவதற்கென்றே இருக்கின்ற சில பத்திரிகைகள், இதை வெளியிட்டு கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன?
கபாலி: தினகரனும்,தமிழ்முரசும் கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் அந்த லிஸ்டில‌ இருந்திச்சே தலைவரே! 
கலைஞர்: மதுரையை பொறுத்தவரை, யாரோ சிலர் மாற்றப்பட்டதற்குப் பிறகும், அங்கேயே பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். மதுரையில் 4 உதவி ஆணையர்களும் தேர்தல் நெறிமுறைப்படி மாற்றப்பட்டார்கள். 
கபாலி: ஆகாகாகா.., ஒன்னுமே தெரியாத பாப்பா பகல் ஒரு மணிக்கே போட்டாலாம் தாப்பா...,,,
அடுத்து வருவது  
ஞாயிறு அதிரடி"அதிமுக வேட்பாளர்களுக்கு சில டிப்ஸ்" படிக்கத்தவறாதீர்கள்

3 கருத்துகள்:

இராகவன் நைஜிரியா சொன்னது…

தினமலரில் வரும் டவுட் தனபாலு நீங்கதான தம்பி கபாலி..

கமெண்ட் எல்லாம் அது மாதிரியே இருக்கு?

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//இராகவன் நைஜிரியா கூறியது...
தினமலரில் வரும் டவுட் தனபாலு நீங்கதான தம்பி கபாலி..//

அண்ணே! என்ன இது சின்னப்புள்ளத்தனமா? அந்த அளவுக்கெல்லாம் என்ன ஒப்பிடாதிய.,

நல்லதந்தி சொன்னது…

பட்டைய கிளப்புறீங்க கபாலி!