திங்கள், 23 மார்ச், 2009

கலைஞர் கண்ட கனவுகள்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர் நேற்று இரவு, தான் கண்ட கணவு பற்றி விளக்கியுள்ளார்.அதாவது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் திமுக கூட்டனி கைப்பற்றும் என்று நேற்று இரவு, தான் தூங்கும் போது கண்ட சொப்பண‌த்தைத் தெரிவித்தார். இதைக்கேட்டு பொங்கிவந்த சிரிப்பை அடக்கிகொண்டு நிருபர்கள் அடுத்த கேள்விக்குத் தாவினர்.

* ஈழத் தமிழர் பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? என்று கேட்டனர்.

ஈழத்தமிழர்கள் என்றால் யார் என்று கேட்டு விட்டு உடன் சுதாரித்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான எங்களால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறோம் என்றார். (அதாவது தேவையான உதவி என்பது சிங்கள ராணுவத்திற்கு ஆயுதம் அனுப்பிய உதவியா? என தொண்டைக் குழி வரைக்கும் வந்த கேள்வியை முழுங்கிவிட்டு)

* விலைவாசி உயர்வு இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? என்று கேட்டனர்.

விலைவாசி உயர்வு எங்கே இருக்கிறது.ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்.இதை விட குறைந்த விலைவாசிக்கு கொடுக்க வேணுமானால் பிரீயாத்தான் கொடுக்கனும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். (அரிசி ஒரு ரூவா தான்,ஆனா அதுல போடுற உப்பு 6 ரூவா என்று சொன்னால் தப்பாகிவிடுமோ என்று பயந்தவாறே அடுத்தக் கேள்விக்குச் சென்றனர்.)

* சேது சமுத்திரத் திட்டம் சும்மா வெறும் வெளம்பரம் தானா? என்ற கேள்விக்கு

"சேது சமுத்திர திட்டம் பிரமாண்டமான திட்டம் மாத்திரமல்ல; தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜரும் இந்த திட்டத்தை ஆதரித்து பிரசாரமே செய்திருக்கிறார்கள்" என்றார்.(அதேபோல நானும் வெறும் பிரசாரம் மட்டுமே செய்வேன் என்று சொல்லாமல் சொல்றாரோ என்னவோ,.ராமர் படித்த கல்லூரி அங்கீரகாரம் பெற்ற கல்லூரியா என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என்று வாயில வந்ததை பல்லில் வைத்துக் கடித்துவிட்டு)

* பிரசாரத்திற்குப் போவீர்களா? என்றதற்கு,

என்னுடைய கழக உடன் பிறப்புகள் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவர்கள். நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களையும் - என்னுடைய அறிக்கைகளையும் முழுமையாக படிப்பவர்கள்.(அதைப் படிக்க அவர்கள் படும் கஷ்டம் இந்த உலகத்தில் எதிரிகளுக்கு கூட வரக்கூடாது.ஒரு நா ரெண்டு நான்னா பரவாயில்ல,தெனேக்கிம் கடிதம் எழுதியா உடன்பிறப்புகளை சாகடிக்கிறது)அவர்களது சிந்தனைக்கும், உணர்வுக்கும் நான் மிகவும் நெருக்கமானவன். அவர்கள் தேர்தல் முறைகளில் நல்ல பயிற்சி பெற்றிருப்பவர்கள்.(எலக்சன் பூத்தக் கைப்பத்துறது, பத்தே நிமிஷத்துல பத்தாயிரம் ஓட்டுக்களை சும்மா சக்கு சக்குன்னு குத்துறதுல நல்ல பயிற்சி பெற்றவர்கள் என்பதைத் தான் தலைவர் இங்கே குறிப்பிடுகிறார்)மருத்துவர்கள் எனக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவார்கள். தேர்தல் பிரசாரத்தை நான் மேற்கொள்வேன், பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

* நீங்கள் குடும்ப அரசியல் பண்ணுவதாக செய்தி உலவுகிறதே?..,

இது கேட்டு கேட்டு புளித்துப்போன கேள்வி. பலமுறை இதற்கு நான் பதிலளித்து விட்டேன். குற்றச்சாட்டு குறுகிய மனப்பான்மை கொண்டது, தீய நோக்கம் கொண்டது, குறும்புத்தனமானது.இந்திய நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போல வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் என் குடும்பம் மாத்திரம் சில பேருக்கு துருவ நட்சத்திரமாக தெரிகிறது என்றார் அவர். (வானத்தில‌ நட்சத்திரமா இருந்தா பரவாயில்ல தலீவரே! மொத்த வானத்தையும்ல வளைச்சி போட்டுட்டிய)

கழகமே குடும்பம் என பேரறிஞர் அண்ணா சொன்னார் அன்று

குடும்பம் மட்டுமே கழகம்‍ என்கிறார் கலைஞர் இன்று

-ஜெ.ஜெயலலிதா

அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி "விஜய்க்கு சில வில்லங்க யோசனைகள்" படிக்கத்தவறாதீர்கள்

3 கருத்துகள்:

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

ஐயா கபாலி, வருகிற விருந்தினர்களை உபசரிக்காமல் நீறு சும்மா நிதம் ஆறுவகை சமையல் செஞ்சி போட்டாலும் ஒரு புண்ணியமும் இல்லைவோய்.

எத்துனை இடத்துலே போய் சரக்கு அடிச்சாலும், நல்லா கவனிச்சாதான் சரக்கடிக்கிற நாமே கடைக்கு அடிக்கடி போவோம், டிபுசும் கொடுப்போம். நான் சொல்லுறதை சொல்லிபுட்டேன், தோஸ்துன்ற முறையிலே, கண்டுகிறதும் கடாசிடுறதும் உன்னோட முடிவுதான் கபாலி.

இராகவன் நைஜிரியா சொன்னது…

அதானே கபாலி,

தோஸ்த்துன்னா அப்ப அப்ப கண்டுக்கிட்டாத்தான்,அடுத்த தபா பாக்குறப்ப, சந்தோஷமா இருக்கும்.

கோயிந்து சொல்ரது சரிதான்..

அப்ப அப்ப வர ஆளுங்கள நல்லா கண்டுக்க கபாலி..

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//குவாட்டர் கோயிந்தன்//
//இராகவன் நைஜிரியா //

அண்ணே! உங்க ரெண்டு பேரின் கருத்துகளிலும் உள்ள நியாயங்களை கருத்தில் கொண்டு 24 Hour Customer Care ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நன்றிண்ணே!