வியாழன், 26 மார்ச், 2009

சென்னை:கேபிள்கள் அறுக்கப்படும் மர்மங்கள் - C.I.D சிங்காரம்

சென்னை மாநகரில் திடீர்திடீரென ஏதாவது பிரச்சனைகள் முளைத்துக் கொண்டே இருக்கும்.அதனால் யாருக்கு லாபம்,அவன் என்ன சைக்கோவா என ஒரு பக்கம் காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு வழக்கம்போல எவனாவது இளிச்சவாயன புடிச்சிகிட்டு வந்து கேஸ முடித்து விடும்.அவனும் அடிக்கிற அடி தாங்கமுடியாம குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடுவான்.  திருட்டுப்பிரச்சனைகள்,சைக்கோ கொலைகாரன் என கொஞ்ச நாள் பரபரத்து பிறகு அடங்கிவிடும். இதெல்லாம் பொதுப் பிரச்சினைகள் என்பதால் வெளியே தெரியும்.ஆனால் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பிரச்சனை வெளியே தெரியாமல் இருந்தாலும் அது  பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சி என்பது 4 வது வேளை சாப்பாடு என்ற நிலையாகி குடும்பம் மொத்தமும் அந்த அதிசயப் பெட்டியைக் கட்டிக்கொண்டு தான் காலம் தள்ளுகின்ற சூழ்நிலைகளைக் காணமுடிகிறது.

 இன்றும் கூட சாலைகளை, இரவு மட்டும் ப‌டுக்கையறைகளாக,சமையலறைகளாக மாற்றி காலம்தள்ளும் பிளாட்பாரவாசிகளின் ஸ்பெசல் குவாட்டர்ஸ்களில் இரவு நேரங்களில் தொலைக்காட்சி இயங்குவதை பல இடங்களில் காணலாம்.அந்த அளவிற்கு அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை தொலைக்காட்சி குடும்ப ரேசன் கார்டில் சேர்க்கும் அளவிற்கு ஒரு உறுப்பிணராக ஆகிவிட்டது.

இப்ப என்ன மேட்டர்னா சமீப நாட்களாக சோதனை மேல் சோதனையாக ஹேத்வே நிறுவணம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள ஹேத்வே கேபிள்ஸ் நிறுவனத்தின் வயர்கள் திட்டமிட்டு அறுக்கப்பட்டு வருகின்றன.அது எப்படி ஹேத்வே நிறுவண வயர்கள் மட்டும் அறுக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே இருக்கிறது. கேபிள்கள் அறுக்கப்படுவதால் செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் கஸ்டமர்கள், அந்த ஹேத்வே நிறுவணத்தின் கீழ் இயங்கக்கூடிய லோக்கல் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் இணைப்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. முன்பெல்லாம் சாதாரண கோஆக்ஸியல் கேபிள்கள் பயன்படுத்தப் பட்டு வந்ததால் அது அறுக்கப்பட்டாலும் அதை மிக எளிமையாக கண்டறிந்து வெட்டிவிட்டு முறுக்கினாலே போதும்,அல்லது BNC எனப்படும் கனெக்டர்களை போட்டு கணெக்ட் செய்து வேலையை மிக எளிதாக முடித்துவிடலாம்.ஆனால் தற்போது OFC (ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்) பயன்படுத்தப்படுவதால் அவை ஒரு முறை அறுந்து போனால் அதைச் சரி செய்வது மிகமிக கடிணம்.

அதற்கென தனி மெஷினரிகள் இருக்கின்றன.அதற்குப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு வயர்களை இணைக்க 2500 ரூபாய்க்கு மேல் செலவு ஆகும். கடந்த வாரங்களில் மட்டும் ஹேத்வே நிறுவண வயர்கள் பல இடங்களில் அறுக்கப்பட்டன.இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஹேத்வேயின் சேவை அடியோடு துண்டிக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு முழுமையாக சரிசெய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் இந்த நாச வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறாதாம். நள்ளிரவு  நேரங்களில் இந்த வேலையைச் செய்வது யார்? என்ற குழப்பம் மட்டுமின்றி தற்சமயம் தொழில்சரிவு காரணமாக கஸ்டர்களை இழந்துவிடுவோமோ என்ற பயத்தோடு சிறப்பு பிரைவேட் ஃபோர்ஸ் ஒன்றை காண்டிராக்ட் முறையில் அமைத்து வயர்களை அறுக்கும் வரிப்புலிகளை கண்காணிக்கும் பொருப்பில் அமர்த்தியுள்ளதாம் ஹேத்வே. 

அவர்கள் யூனிஃபாம்களில் இல்லாமல் சாதரண உடையில் முக்கியத் தெருக்களில் வலம் வருகிறார்களாம். (கேபிள் வயர்களில் துணி, கருவாடு  காயப் போடுபவர்கள் ஜாக்கிரதை) ஏற்கனவே DTH வரவினால் 20 சதவிகித கஸ்டமர்களை இழ்ந்து விட்டதாம் ஹேத்வே நிறுவனம். இப்போது இப்படியொரு பிரச்சனை.  இந்த வயர் அறுப்பின் பிண்ணனியில் ஏதேனும் தொழில்போட்டி இருக்கிறதா அல்லது சமூகவிரோதிகள்,சைக்கோக்கள் இருக்கிறார்களா, அல்லது இது விளையாட்டாய் செய்யப்படும் வேலைகளா என ஒவ்வொன்றாய் அலசி ஆராய்ந்து காவல்துறையில் புகாரும் அளித்து விட்டது ஹேத்வே.. எனக்கென்னமோ இது வெளயாட்ட செய்யிற வேலை மாதிரி தெரியல.,,,ஒரு வேள இப்புடி இருக்குமோ??

ஆமா..., இந்த வயர் அறுப்பு பிண்ணனியில் யார் இருப்பார்கள்? உங்களுக்கு ஏதாவது தோனுதா? கமெண்ட்ல போடுங்க பாக்கலாம்.

- C.I.D சிங்காரம்

அடுத்து வருவது:ராயப்பேட்டை ராமுவின் நினைவுகள் "சம்சாரம் அது மின்சாரம்"

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்க சொல்றத கேட்டா கண்கள் பணிக்குது, இதயம் நொறுங்குது, மூக்கு ஒழுகுது, காது அடைக்குது ஆனா யாரு கேபிள் கட்பண்ணுறாங்கன்னு மட்டும் தெரியமாட்டேங்குது. நீங்களே சொல்லிடுங்க.

பெயரில்லா சொன்னது…

ivlo simple matter kudava c.i.d. ku theriyale!!!

pala varudangalave cable war nadandhu vandhadhu. ilangai war madhiri. konja naal adangi irundhadhu. ippa dhan thaatha peran ellam aiyikiyamayitaga. meendum war.

நையாண்டி நைனா சொன்னது…

இம்மா வேகம் கூடாது கபாலி.

Karthikeyan G சொன்னது…

அது "ஆல் இந்திய ரேடியோ" நிறுவனத்தின் வேலையாக இருக்கலாம். ரேடியோவில் பேசும் எல்லோரும் "கேபிள் டிவி வந்த பிறகு மக்கள் ரேடியோ கேட்பதில்லை" என அடிக்கடி பேசி கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு C.I.Dல வேலை கிடைக்குமா?
:)

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

இது கூட தெரியாது கீறியே....
இது பாக்கிஸ்தானின் சதி. இதை பற்றி புலனாய்வு செய்து 85694 பக்க அறிக்கை தயார் செஞ்சாச்சு. ஆனா எந்த எளவு எடுத்தவனோ அதை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டான்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

***"கேபிள் டிவி வந்த பிறகு மக்கள் ரேடியோ கேட்பதில்லை" ***

இன்னா வரிக்கும், மக்கள் டீவி தான் இருந்துச்சீ.... மக்கள் ரேடியோ எப்பத்திலிருந்து வருது?????

டாஸ்மாக் கபாலி சொன்னது…

நன்றி அனானிகளா

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//நையாண்டி நைனா கூறியது...
இம்மா வேகம் கூடாது கபாலி.//

இது என்ன மாமு இன்னும் கீது

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//Karthikeyan G கூறியது...
அது "ஆல் இந்திய ரேடியோ" நிறுவனத்தின் வேலையாக இருக்கலாம். ரேடியோவில் பேசும் எல்லோரும் "கேபிள் டிவி வந்த பிறகு மக்கள் ரேடியோ கேட்பதில்லை" என அடிக்கடி பேசி கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு C.I.Dல வேலை கிடைக்குமா?
:)//

சூப்பர் கமெண்டு கார்த்தி.கீப் இட் அப்.இன்றைய சிறந்த கமேண்டுக்கான பரிசு உங்களுக்குத் தான்

டாஸ்மாக் கபாலி சொன்னது…

// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
***"கேபிள் டிவி வந்த பிறகு மக்கள் ரேடியோ கேட்பதில்லை" ***

இன்னா வரிக்கும், மக்கள் டீவி தான் இருந்துச்சீ.... மக்கள் ரேடியோ எப்பத்திலிருந்து வருது????//

மாமே மக்கள் தொலைக்காட்சியே போதும்,அதுல ரேடியோ வேறையா

பெயரில்லா சொன்னது…

//கமெண்ட்ல போடுங்க பாக்கலாம்//

எங்களை எல்லாம் மாட்டி விடுறதுல அப்படி என்னப்பா சந்தோசம்?

மோனி சொன்னது…

பெரும்பாலும் பதிவ விட நீங்க பேசிக்குறதுதான்ப்பா நல்லா கீது ...