செவ்வாய், 10 மார்ச், 2009

ஆட்டய போட்ட அமெரிக்கா காசு

உலக சினிமா ரசிகர்களை ஒப்பிடும் போது தமிழ்ரசிகன் கொஞ்சம் வித்தியாசமான‌வன். “தலைவா! என தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுவான். மொத நாள் படப்பொட்டி வரும் போது தலைவர் படம் போட்ட டீ சர்ட்ட போட்டுகிட்டு காலைலயே கடயாண்ட போயி ஏத்திகிட்டு சட்டய சுருட்டி இடுப்புல கட்டிகிட்டு தலையில கர்சீப்ப கட்டிகிட்டு பேண்டு வாத்தியம் முழங்க காலத்தூக்கி ஆடுவான் பாரு.,,ஆஹா கண்கொள்ளாக் காட்சி. ஆனா அதே தலைவன் தமிழர்கள் பத்தியோ,தமிழ்நாடு பத்தியோ ஒரு வார்த்தை வாய்தவறி சொல்லிட்டார்னா முடிஞ்சது கத.அவன் படத்துக்கு செருப்புமால போட்டு கழுத ஊர்வலம் வச்சி அவனமாரி ஒரு பொம்மசெஞ்சி அது தலையில செருப்பாலயே அடிச்சி அடிச்சி அந்த பொம்மயக் கொழுத்தி தலைவனுக்கு பொங்கவச்சி போகி கொண்டாடுவான் பாரு, அதுவும் கண்கொள்ளாக் காட்சிதான். ஒரு காலத்துல பறந்து பறந்து அடிச்சவுக ஒரு காலத்தூக்கி செவத்துல வச்சி மறுகாலால ஒதச்சவக எல்லாம் இப்ப எந்த மூலையில் மொடங்கிகெடக்காகன்னு தெரியல.இப்பவும் சிலபல பெருசுக மட்டும் தலையில டோப்பாவ கவுத்திகினு பொங்கலுக்கு வெள்ளயடிச்சமாரி மூஞ்சில பவுடர அப்பிகினு கொள்ளுப்பேத்தி வயசுப் பொண்டுக கூட குத்தாட்டம் போடுதுக.

அந்த வகையில ஒரு கெழம் நடிச்சி வேகமா (தியேட்டரவிட்டு) ஓடுற படந்தேன் 1977. "என் மக்கா,நான் அமெரிக்காவுல இருந்து ஆட்டயபோட்டுகினு வந்த காசெல்லாம் இப்புடியா அநியாயமா போவனும் யாத்தே" என்று அரசியார் அழுதுபுலம்பும் அளவுக்கு அருமையாக வந்திருக்கிறது படம். என்ன கத என்ன கத...,ஜேம்ஸ்பாண்டு படங்களை மிஞ்சிற திரைக்கதை,,அடடடடா இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு புது கதய சொல்லி தமிழ்சினிமா தரத்த மேலோங்கச்செய்ய வந்துள்ள படம்.

என்ன சிந்தனை என்ன சிந்தனை.கதய பத்தி என்கிட்ட கேட்காதிய ராசாக்களா. உங்க கையில நெறய காசு இருந்தா போய் படத்த பாருங்க. ஏற்கனவே வாழ்க்கையில் விரக்தியடைஞ்சி போயிருக்குற நண்பர்கள் இந்த படத்த பாத்தீகண்ணா, அத்தோடு முடிஞ்சது உங்க கத.அப்பறம் அடுத்த நாளு உங்க படத்தோட செய்திய பேப்பர்ல தான் பாக்கனும்.

நமீதாவுக்காகவும் பர்ஸானாவுக்காகவும் இவ்வளவு மெனக்கட்டு செலவு செஞ்சி காச வேஸ்ட் பண்ணியிக்க வேனாம். போட்ட காசுல ஜஸ்ட் 10 % மட்டும் செலவு பண்ணி பார்க் செரடன்ல 2 நாள் ரூம்புக் பண்ணியிருந்தா அவ்வள‌வு காசும் மிச்சம். ஊரான் ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு அள்ளிவிட்டிருக்கிய. உங்களுக்கு “அது வேனும்னா காதும்காதும் வச்ச மாதிரி ராவோட ராவா முடிச்சிட்டு போங்களேம்பா. இதுக்கு ஏன் ஒரு படம் எடுக்கனும்? எங்க நேரத்துக்கும் காசுக்கும் வேட்டு வெக்கெவா. எங்களுக்கு மட்டுமா வேட்டு, தமிழ்சினிமா,அரசியாரின் காசு எல்லாத்துக்கும் தான் வேட்டு. பாவம் திருட்டு டிவிடி விற்பவர்கள்,இந்த படத்த நம்பி எவ்ளோ முதலீடு செய்தார்களோ? ஒரு வேளை தியேட்டர்காரங்க நஷ்ட ஈடு கேட்கும் போது இவங்களும் கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நாட்டாம கடைசியா ஒரு அட்வைஸ். நீங்க இந்த மாதிரி படம் எடுத்துகினு திரிஞ்சா எலக்சன் நேரத்துல தவறுதலா விரல் மாறி உங்களுக்கு விழுகுற ஓட்டுக்கும் ஆப்பு ஆயிரும். பாத்துக்கங்க சொல்லிப்புட்டேன் ஆமா.

அறிவிப்பு:நமது கழுதையில் நாளை முதல் அதிரடி காமெடி "கபாலி கார்ட்டூன்" ஆரம்பம். படிக்கத்தவறாதீர்கள்.(கார்ட்டூனை கிளிக் செய்து படிக்கவும்)

27 கருத்துகள்:

Dinesh Babu சொன்னது…

padam paarthu paadhikkap pattavanil, naanum oruvan. Idhai naan oppuk kolgiren.

ttpian சொன்னது…

Tasmac Hit!
For every viewver,
One bottle old arrack free

ttpian சொன்னது…

Tasmac Hit!
For every viewver,
One bottle old arrack free

நாமக்கல் சிபி சொன்னது…

இந்த படத்தை பத்தி ஏற்கனவே உண்மைத் தமிழன் தேவைக்கு அதிகமாவே சொல்லிட்டதாலே அடுத்த படியா கும்மிக்கு போவோம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//போட்ட காசுல ஜஸ்ட் 10 % மட்டும் செலவு பண்ணி பார்க் செரடன்ல 2 நாள் ரூம்புக் பண்ணியிருந்தா அவ்வள‌வு காசும் மிச்சம். ஊரான் ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு அள்ளிவிட்டிருக்கிய. உங்களுக்கு “அது” வேனும்னா காதும்காதும் வச்ச மாதிரி ராவோட ராவா முடிச்சிட்டு போங்களேம்பா. //

"அது"க்கா இதுகளை வைச்சு படமெடுக்கிறாங்க.... பொலிசு புடிக்காதுங்களா??

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

அப்படின்னா... இருக்குற டப்பை அண்டர்வேருக்குள்ள பத்திரமா வச்சி, டாஸ்மாக் குள்ளே பூந்துறது பெட்டருங்கிரியா கண்ணு...

வால்பையன் சொன்னது…

நல்லா எழுதுறிங்க!
உங்க ப்ளாக்க நல்ல டிசைன் பண்ணியிருக்கிங்க!
நிறையாவும் எழுதுறிங்க!

கண்டிப்பா வெகு குறுகிய காலத்தில் பிரபலமடையும் வாய்ப்புகள் உண்டு

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

என்னத் தல அவ்ளோ கொடுமையாவா இருக்கு...

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//நல்லா எழுதுறிங்க!
உங்க ப்ளாக்க நல்ல டிசைன் பண்ணியிருக்கிங்க!
நிறையாவும் எழுதுறிங்க!

கண்டிப்பா வெகு குறுகிய காலத்தில் பிரபலமடையும் வாய்ப்புகள் உண்டு//

வழி மொழிகிறேன் !

டாஸ்மாக் கபாலி சொன்னது…

வால் பையன் அண்ணாத்தே,பாஸ்கர் அண்ணாத்தே உங்களை நம்ம கடைக்கி வரவேற்கிறேன். நன்றி அண்ணே! ஆனா ஒன்னு நீங்களெல்லாம் போட்டுக்கொடுத்த சாலையில் தான் நான் பயணம் செய்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்கிறேன்.உங்கள் வரவுக்கு நன்றி.மீண்டும் வருக.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

அப்பறம் இன்னொரு மேட்டரு வால் அண்ணே!இந்தா மேல ஓடுது பாருங்க மீட்டரு( நியோ) அது உங்க தளம் வழியாகத்தான் நான் எடுத்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

Karthikeyan G சொன்னது…

//
"ஆட்டய போட்ட அமெரிக்கா காசு"
//
கபாலி,இப்படி கலாய்க்கிறீங்களே! எல்லா பணமும் உழைச்சு சம்பாதிச்சதுங்கோ..

பதி சொன்னது…

//பாவம் திருட்டு டிவிடி விற்பவர்கள்,இந்த படத்த நம்பி எவ்ளோ முதலீடு செய்தார்களோ? ஒரு வேளை தியேட்டர்காரங்க நஷ்ட ஈடு கேட்கும் போது இவங்களும் கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.//

:)

RAMYA சொன்னது…

நான் படத்துக்கு போகலை, அதான் நீங்க சொல்லிட்டீங்களே அது போதும்.

ம்ம்ம் கலக்குங்க ரொம்ப நல்ல எழுதரீங்க screen ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் !!!

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//கபாலி,இப்படி கலாய்க்கிறீங்களே! எல்லா பணமும் உழைச்சு /சம்பாதிச்சதுங்கோ..//
கார்த்தி மாமே! தெரிஞ்சிகினே வாயக்கிண்டி நியூஸ‌ புடுங்கவா? அதான் நடக்காது.வேனுமினா நாளைக்கி கடபக்கமா வாங்க,காதுல சொல்றேன்.

டாஸ்மாக் கபாலி சொன்னது…

ஆகா ரம்யாக்கா வாங்க வாங்க. நன்றி

டாஸ்மாக் கபாலி சொன்னது…

நைஜிரியாக்காரர ஆளையே காணோமே.எந்த கடயில‌ உக்காந்து இருக்காரோ?

RAMYA சொன்னது…

//
டாஸ்மாக் கபாலி கூறியது...
நைஜிரியாக்காரர ஆளையே காணோமே.எந்த கடயில‌ உக்காந்து இருக்காரோ?

//

அண்ணன் கிளம்பிட்டாரு கபாலி !!

RAMYA சொன்னது…

//
ttpian கூறியது...
Tasmac Hit!
For every viewver,
One bottle old arrack free

//

Supuer ttpian!!

RAMYA சொன்னது…

//
குவாட்டர் கோயிந்தன் கூறியது...
அப்படின்னா... இருக்குற டப்பை அண்டர்வேருக்குள்ள பத்திரமா வச்சி, டாஸ்மாக் குள்ளே பூந்துறது பெட்டருங்கிரியா கண்ணு...

//

குவாட்டர் கோயிந்தன் பெயர் நல்லா இருக்கு.

இராகவன் நைஜிரியா சொன்னது…

என்னா நைனா...

நல்லா கீறயா...

உனக்கு அங்க டாஸ்மாக் கீதுப்பா...

அதுவும் இல்லன்னா, நாட்டாம படம் கீதுப்பா..

இங்க அப்படி இல்ல நைனா..

இப்ப கொஞ்சம் ஜோலி சாஸ்தியாபுடுச்சுங்க.. அதான் ரொம்ப லேட்..

சரி நைனா, டாஸ்மாக் கீற போது என்னாத்துக்கு நாட்டம படம் பாக்க போன..

ஒரே டமாசுப் போ..

இராகவன் நைஜிரியா சொன்னது…

// ஏற்கனவே வாழ்க்கையில் விரக்தியடைஞ்சி போயிருக்குற நண்பர்கள் இந்த படத்த பாத்தீகண்ணா, அத்தோடு முடிஞ்சது உங்க கத.அப்பறம் அடுத்த நாளு உங்க படத்தோட செய்திய பேப்பர்ல தான் பாக்கனும். //

சிரிச்சு சிரிச்சு, கண்ணுல தண்ணியே வந்துடுச்சு நைனா..

வீணாபோனவன் சொன்னது…

நல்லாவே எழுதுறிங்கப்பூ... தொடருங்க...

-வீணாபோனவன்.

குடுகுடுப்பை சொன்னது…

கழுதை பின்னாடி இனிமே நானும் வரேன். உதைக்காம இருப்பா.

அது இன்னாதுப்பா "ஆட்டய போட்ட அமெரிக்க காசு"

செந்தழல் ரவி சொன்னது…

கலக்கற கபாலி !!!!!!!!!!!!

doctor purudaa சொன்னது…

ilayaraaja vaazhka

பாலகிருஷ்ணா சொன்னது…

அடப்பாவிகளா, குடும்பத்துல கொழப்பத்தை கிளப்புறீயளே.. நல்லா இருப்பீயளா. இது ரண்டாவது. அவருக்கு நாலாவது. கணக்கு இடிக்குதுல்லே... அதான் சரி செஞ்சுப்புட்டாரு நாட்டாம....