வியாழன், 12 பிப்ரவரி, 2009

விஜய்க்கு சங்கு ஊதிய ரசிகர்கள்

பாலாபிசேகம்,பீராபிசேகம் போன்ற கருமங்களையும் தலையில் கைக்குட்டையைக் கட்டிகொண்டு தண்ணீர் பாக்கெட்டுகளை பொதுமக்கள் மீது பீச்சியடித்தும் திரையரங்க இருக்கைகளை கிழித்தும் அதன் மீது ஏறி ஆடியும் கிருகிருத்துப்போன விஜய் கிருக்கன்கள் முதல் முறையாக ஒரு நல்ல காரியம் செய்துள்ளனர். விஜய் ரசிகர்கள் தாங்கள் நடத்திவந்த இணையதளத்திற்கு தாங்களே ஷட்டர் போட்டு விட்டனர். விஜயின் அப்பா சந்திரசேகரின் அளப்பறை தாங்க முடியவில்லையெனவும் நாங்கள் நஷ்டத்தில் ஓட்டுவதாகவும் அதிலே கூறியுள்ளனர். மேலும் இனிமேல் விஜய்படத்தை வெறும் ரசிகராக மட்டுமே இருந்து பார்ப்போம் பழைய படி பாலேபிசேகமெல்லாம் பண்ணமாட்டோம் எனவும் கூறியுள்ளது மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாட்டுக்கு நன்மையான ஒரு காரியம். இதக்கண்டாவது மற்றவர்கள் அடக்கிவாசிக்கட்டும். அண்ணே! சந்திரசேகர் அண்ணே இனிமே விஜய்பட ரிலிஸூக்கு பொட்டிக்கு முண்ணாடி ஆட, "முன்னமாதிரி" கூலிக்குதான் ஆள் புடிக்கனும்.
நம்புங்கப்பு உண்மதான். அட இங்க பார்ரா. இங்க போயி பாருங்க அவுகளே சொல்லுறாக.,

2 கருத்துகள்:

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

வாழ்க நீ எம்மான்.. நல்ல செய்தி.. பகிர்ந்தமைக்கு நன்றி..

கோவி.கண்ணன் சொன்னது…

ஹலோ, பாலோயர் பட்டியல் இணைங்க, பாலோயர் ஆகனும் !