வியாழன், 26 பிப்ரவரி, 2009

அம்மாவை சீண்டும் உதவிப் பேராசியர்

இத்தன நாளா யாருக்கும் தெரியாததால பேராசிரியர் என போட்டுக்கொண்ட பேராசியர் உண்மையிலேயே உதவிபேராசிரியர் (அநேகமாக டுடோரியல் கல்லூரியாக இருக்கலாம்) என்பதை ஜெயா வெளிப்படுத்திய போது தான் நமக்கே தெரிந்தது. கலைஞர் முரசொலியில் சின்னக்குத்தூசி,ஆபிஸ்பாயாக ஒழிந்து கொண்டு சில கேள்வி பதில்களைப் போடுவார்.நிஜத்தில் நம்ம பேராசிரியரும்,மின்வெட்டாரும் தான் ஆபிஸ்பாயாகவும்,சின்னக்குத்தூசியாகவும் கலைஞருடைய செய்திகளை முரசறையும் ஜெமினி பொம்மைகளாக காலங்காலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் பேராசிரியர் மூலமாக ஊதிய செய்திதான் இன்றைய பரபரப்பு.

உயர்நீதி மண்றக் கலவரத்துக்குக் காரணம் ஜெ தான் என அடித்துச்சொல்கிறார் நம்ம சின்னக்குத்தூசி அய்யா. உலகில் எங்குமே இல்லாத வகையில் காவல்துறை, நீதித்துறை பிரச்சணையைக் கண்டு உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கின்றன. ஜெ ஆட்சியிலிருந்த போது காவல்துறை,அரசுத்துறை ஆகியவைகள் அடிபணிந்து கிடந்தன. கலைஞர் ஆட்சி வந்தவுடன் பெஞ்சி தேய்க்க மற்றும் ராணி,குமுதம்,விகடன் படிக்க எங்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளம் போதவில்லை என போர்கொடி தூக்கும் அரசு ஊழியர் சங்கங்கள் நிதம் ஒரு ஆர்ப்பாட்டம் திணம் ஒரு போராட்டம் என நடத்தி சேப்பாக்கத்தை நாரடித்து, திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் அருகே அமைந்திருக்கும் ஆர்த்தி உணவக கழிப்பறையை தினந்தோரும் நிரப்புகின்றனர். ஜெ ஆட்சிவந்தால் எங்களுக்கு யாவாரமே கிடையாது.ஆனால் மகராசன் கலைஞர் வந்து விட்டால் தினம் கூட்டம் நிரம்பி வழியும் என்கிறார் அந்த உணவக ஊழியர் ஒருவர். அதுபோலத் தான் கட்டுப்பாடின்றி அடித்துக் கொள்ளும் நீதித் துறையும் காவல்துறையும்.., இதற்கெல்லாம் விடிவு எப்போது?

நரி நாட்டாம பண்னுனா பல்லிகூட பழிச்சிக் காட்டுமாம்...,

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்". படிக்கத்தவறாதீர்கள்

1 கருத்து:

சிவாஜி த பாஸ் சொன்னது…

ஆஹா ஆஹா.... தொடரட்டும் தங்கள் பணி...!