ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

வாயப் புடிங்கிய வைக்கோ

நம்ம சைக்கோ சாரி வைக்கோ தீக்குளித்து இறந்த ஒரு திமுக தொண்டருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நல்ல விசயம் தான். ஆனால் என் அன்புத்தம்பியே என்னைக்கொல்ல முயன்றான், கள்ளத்தோணியேறி கஸ்மாலம் வைக்கோ என் வாழ்வை முடிக்க முயன்றான், அதனால் அவனோடுள்ள உறவை முறியுங்கள் முடிந்தால் அவன் கையையும் முறியுங்கள் என்று முன்னர் சொன்னாரே உங்கள் அன்பு அண்ணன், அண்ணாவின் இதயக் கண்ணன் கலைஞர்., ஞாபகம் இருக்கோ உங்களுக்கு தலீவா? அதமுன்னிட்டு 3 அப்பாவி தொண்டர்கள் சோப்பு,டவல் கூட எடுக்காமல் அவசர அவசமாக தீக்குளித்தார்களே அல்லது குளிப்பாட்டப் பட்டார்களே! புயல் தலைவா அப்போது கூட நீங்கள் இதேபோலத் தானே சொன்னீர்கள், அன்று நீங்களும் உங்கள் அண்ணனைப் போல ஒரு இரங்கல் கவிதை வாசித்து அவர்களுக்கு சங்கு ஊதிவிட்டு அதன் நினைவாக சங்கொலி ஆரம்பித்து தலீவர் கலைஞரை தாருமாறாக வாருவாரு என வாரியதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்குமென நினைக்கிறேன் தலீவா! அப்பால மறுபடியும் என் மன்னன் அன்பு அண்ணன் கலைஞர் தான் என ஓடி வந்து 23 சீட்டுக்கு சீட்டியடிக்க ., தலைவர் கலைஞர் வழக்கம்போல வாடா தம்பி என்னை நம்பி என அழைத்து பின் ஒன்றும் இரண்டும் மூன்று தானே என்று ஒன்னாம் வகுப்பு கணக்கை உங்களிடம் சொல்லி உங்களுக்கு ஆப்படிக்க, நீங்கள் வெடித்து கிளம்பி அன்பு சகோதரியிடம் உங்கள் கம்பெனியை அடகுவைக்க இன்னமும் நீங்கள் அம்மாவிடம் அடிபணிந்து, தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக சிறந்த ஓ.பண்ணீர்செல்வம் விருது வாங்கிவிட்டதெல்லாம் உங்களுக்கு கணவு போல இருக்கலாம். ஆனால் உங்களுக்காக தீக்குளித்த அல்லது குளிப்பாட்டப் பட்ட 3 பேர் உங்கள் தாயகத்தில் போட்டோ வடிவில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது தீக்குளிக்கும் திராவிட தங்கங்களுக்கெல்லாம் உதாரணமப்பா, ஆனா அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா., வழக்கம் போல நீங்க கலக்குங்க தலீவா. உங்களிடம் தான் ஏற்கனவே சங்கொலி இருக்குல்ல., ஊதுங்க ஊருக்கெல்லாம் .,,

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi kaluthai , your name says your activities , donkey dont know who is standing near to us and far to us donkey's character always kicking any one or for any reason.

vaiko did't ask any one to go for sucide.

At the same time as a political party all of parties changed thier alliances behalf of the groud realities and for thier ground situations.

Not vaiko and mdmk only changed thier alliances.

For ANYTHING OR ANYCOST VAIKO IS STANDING OR SUPPORTING EELAM AND EELAM TAMILS WIHOUT COMPROMISE FOR ANYTHING. I LIKE THIS STAND. Vaiko is the only leader been into jail for supporting eelam and tigers, after he joined jaya to get mp seat to him or minister birth to him. None he likes. He is looking power to support tamil eelam. Not for his personal welfare.

Count your words and post in public.

ALEX MATHEW