வியாழன், 26 பிப்ரவரி, 2009

சேப்பாக்கத்தில் நடந்த கேலிக்கூத்து

செய்தி1: உலகம் முழுதும் அதிகம் ரசிகர்களை பெற்றது சன் குழுமம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். அதிலும் சன் செய்திகள், சன்நியூஸ் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை என நம்பும் மக்கள் மிகமிக அதிகம். சில நாட்களுக்கு முன்பு அந்த தொலைக்காட்சிகளில் அரசு வழங்கும் இலவச டிவிகள் வெடிக்கின்றன, அடிக்கடி பழுதாகிறது என ஜெயா டிவியையும் தாண்டி செய்திகள் ஒளிபரப்பாகி பரபரப்பாயின.

செய்தி2: இல்லாத மின்வெட்டை இருப்பதாக காட்டி மக்களுக்கு திமுக மீது வெறுப்பை ஏற்படுத்தி மாறன் சோகோதரர்கள் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.-ஆற்காடு வீராச்சாமி

செய்தி3: எங்களுக்கும் தலைவர் கலைஞருக்கும் இடையே வெறுப்பை பற்றவைத்து அதாவது போட்டுக் கொடுத்து எங்களை திமுகவை விட்டு வெளியேற்றியது ஆற்காடு வீராசாமி தான்.-கலாநிதி மாறன்

செய்தி4: சேப்பாக்கத்தில் மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்ற இலவச டிவி வழங்கும் விழாவில் தயாநிதி மாறன் வெடிக்காத இலவச டிவிகளை வழங்கினார். அருகே மிக அருகே தமிழகத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது என்று காமெடி செய்து வெக்கமில்லாமல் சிரித்து இன்னமும் மின்வெட்டுத்துறை அமைச்சராகவே நீடிக்கும் ஆற்காடு வீராசாமி. 

சாக்கடயில உழுந்த பொறவு கருப்பு பன்னியென்ன வெள்ள பன்னியென்ன...,,

படந்தான் கருப்பு வெள்ள ஆனா குடுக்குற டிவி கலருங்க.., நீங்க கமெண்ட போடுங்கப்பு..

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்கள்". படிக்கத்தவறாதீர்கள்

கருத்துகள் இல்லை: