புதன், 18 பிப்ரவரி, 2009

சுவாமியை சுளுக்கெடுத்த சூரர்கள்

நம்ம சூனா சாமி எப்பவோ இந்தியாவுக்கு பிரதமரா வரவேண்டியவரு., அவரு மட்டும் இன்னேரம் பிரதமரா இருந்தா காஷ்மீர் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும். ஏன்னா அப்போ இந்தியா பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக இருக்கும். அட ஆமாங்க, இந்தாளு பிரதமரா வந்திருந்தார்னா இன்நேரம் இந்தியாவை பாகிஸ்தானுக்கு விற்றிருப்பார். யாராலும் தீர்க்கமுடியாத காஷ்மீர் பிரச்சனையும் தீர்ந்திருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் புரோக்கர்களை பார்த்திருக்கலாம். ஆனால் அரசியலின் முதல் புரோக்கர் இந்த சூனா சாமி தான். இப்ப நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். அதிலே நடிகர் சோ முதலிடம் வகிக்கிறார்,. சூனாசாமி தன் அறிவை நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் இந்தாளுதான் இந்தியாவின் பிரதம வேட்பாளர். சந்திரலேகா மந்திரத்தால் இந்தியா பிழைத்தது. இப்ப என்ன மேட்டர்னா நம்ம சூனா சாமியை 17/02/2009  காலையில் சென்னை உயர்நீதிமண்ற கிளையின் உள்ளார வைத்து நீதிபதிகள் முன்னாடியே கதற கதற குமுறிவிட்டார்கள் சக வக்கீல்கள்.அணைத்து கதவுகளும் சாத்தப்பட்டதால் சூனா சாமி சுத்தி சுத்தி வந்து அடிவாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த சூனாசாமி மீது இரக்கப்பட்ட சில வக்கீல்கள் சோடா தெளித்திருக்கிறார்கள். மயக்கம் தெளிந்த சூனாசாமி இனிமேல் அடிக்கமாட்டார்கள் என நம்பி எழும்பிய வேளையில், தயாராய் இருந்த அழுகிய முட்டை மற்றும் அழுகிய தக்காளிகளால் அபிசேகம் செய்திருக்கிறார்கள். அசைவத்தில் சந்திரலேகாவைத் தவிர எதையுமே கண்டிராதா சூனாசாமி அழுகிய முட்டையடி வாங்கியது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அடிவாங்குவது என்பது சூனாசாமிக்கு பழகிய ஒன்றுதான். ஒரு எடம் ரெண்டு எடம்னா பரவாயில்ல. பலஎடத்துல வாங்கி வாங்கி பழகிப்போச்சி.,, இவிங்க எப்போதுமே இப்டிதான் அடிச்சிகிட்டே இருப்பாங்கே., இவிங்க அடிக்கிறத பாத்தா தொழில் பண்ண முடியுமா? அட வாங்க பாஸ்.,,

கருத்துகள் இல்லை: