புதன், 25 பிப்ரவரி, 2009

பட்டய கெளப்பும் விஜய T ராஜேந்தர்

எச்சரிக்கை:இதயநோயாளிகள்,கர்பிணிப்பெண்கள்,வயது  முதிர்ந்தவர்கள் தயவு செய்து மேலே உள்ள படத்தை பெரிசு பண்ணி பார்க்க வேண்டாம். பின் விளைவுகளுக்கு கழுதை பொருப்பாகாது.,

ஏற்கனவே லட்சிய திமுக என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொருப்பில் உள்ள விஜய T .ராஜேந்தர்தன் அயராத பணிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களுக்காக புதியதாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் என்ற அதிர்சியான செய்திதான் இன்றைய ஸ்பெசல். "தமிழ் இன பாதுகாப்பு முன்னணி"என்ற இந்த மாபெரும் அமைப்புக்குத் தலைவராக T.ராஜேந்தரே செயல்படுவார் என்று அவரே அறிவித்துக் கொண்டார். இதிலே கவிஞர் புலமைப்பித்தன்நடிகர் மன்சூர் அலிகான் போன்ற பெருந்தலைகள் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரட்டை அரங்கத்தில் அளப்பறை கொடுக்கும்  TR புது இயக்கம் தொடங்கியுள்ளது அனைவருக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சிய திமுகவில் அவர் மகன் சிம்புமனைவி உஷாபிள்ளைகள்இலக்கியாகுரலரசன் ஆகியவர்களே உறுப்பிணர்ளாக இல்லாத நிலையில், T. ராஜேந்தர் சினிமாவில் 7  பொருப்புகளை கையாளுவது போல லட்சியதிமுகவின் அனைத்துப் பொருப்புகளையும் அவர் மட்டும் தான் கவனிக்கிறார். உலகமே "கருப்பண்ணன் காதலி" என்ற TR ன் அடுத்தத் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் போது தலைவர் இப்படியொரு முடிவு எடுத்தது அனைத்து ரசிகர்களுக்கும்  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொசுறுத் தகவல்: ஆஸ்கார் விழா முடிந்த பிறகு தான் செலக்ட் கமிட்டியிணர் நம்ம TR ன் "வீராசாமி" படத்தைப் பார்த்தார்களாம். படம் முடிந்து வெளியே வந்த குழுவினர் பத்திரிக்கையாளர்களிடம் "ஸ்லம்டாக் படத்துக்கு நாங்கள் தவறாக விருது கொடுத்துவிட்டோம். நாங்கள் முன் பே வீராசாமியைப் பார்த்திருந்தால் 8 ம் வீராசாமிக்கே" என தெரிவித்தனர். உஷ்.,, இப்பவே கண்ணக் கட்டுதே.,,,

கருத்துகள் இல்லை: