சனி, 28 பிப்ரவரி, 2009

கலைஞருக்கு மீண்டும் இனித்த இதயம்

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லைநிரந்தர நண்பனும் இல்லைன்னு எவன் முதல்ல சொன்னானோ அவனே ஞானி. இத்தனை காலமும் எதிரிகள் போல் நடித்த வசணகர்த்தா கலைஞரும், முன்னால் பழைய படம் ஒன்றில் நடித்த நடிகர் மருத்துவர் அய்யாவும் மீண்டும் ஆஸ்பத்திரியில் சந்தித்து தழுவிக்கொண்டார்கள். "உன்ன விட்டா எனக்கு வேற நாதியில்ல, என்னவிட்டா உணக்கு வேற நாதியில்ல" என்ற பாணியில் இருவரின் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இருவருக்கும் இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல என விலகிவிட்டு மக்களுக்கு பூச்சிகாட்டிய நிலையில், அன்புமணியின் மாமா முன்னால் தமிழக காங் தலைவர் கிருஷ்ணசாமி இந்த கூட்டணி மீண்டும் வருவதற்கு "அந்த முயற்ச்சியை" செய்ததாக தவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.அண்புமணிக்கு பதவியை "ரினிவல்" செய்து கொடுக்க வேண்டும் என  சம்மந்தியிடம் சத்தமில்லாமல் சொன்னாராம் மருத்துவர். அதன் பின்னரே இந்த சந்திப்பு ஏற்பாடு என்கிறது கோபாலபுரத்து பட்சி ஒன்று. இதன் பின்னர் முதல்வரை மீட்டிய ராமதாஸிடம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியிலேயே பாமக நீடிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்ததாகவும், தானும் அதையே விரும்புவதாகவும் ராமதாஸ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இப்ப என்ன நியூஸ்னா கொஞ்ச நாளைக்கு முன்பிருந்து இன்றுவரை அப்பாவி திமுக,பாமக தொண்டர்கள் வெட்டிக்கொண்டும்,குத்திக்கொண்டும், குடும்பப் பகையாலும் பிரிந்தார்களே! அந்த முட்டாள் தொண்டர்கள் குடும்ப பகைகள் ஜென்ம பகையாகி விட்டனவே! இதற்கு கலைஞரும்,மருத்துவரும் என்ன சொல்லப் போகிறார்கள்? தேர்தல் என்று வந்து விட்டால் நாயுடன் பூனையும், பூனையுடன் நாயும், ராஜேபக்சேயுடன் பிரபாகரனும், பராக் ஒபாமாவுடன் ஒசாமாவும் கூட்டனி சேர்ந்தாலும் நாம பாத்துகினு தான் இருக்கனும் போல. "காவலரே வேசமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே".,

ஞாயிறு அதிரடி: "கலைஞருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ்". நாளை படிக்கத்தவறாதீர்கள்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சத்தியராஜ் பாணியில் சொன்னால் நம்மையெல்லாம் இவன்கள் முட்டாப்புன்** என்று நினைத்துகொண்டு இருகிறாங்கள்.