ஆக்ஸிடென்ட்னா ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணலாம்., ஆனா ஆம்புலன்ஸே ஆக்ஸிடென்ட் ஆனா யாருக்கு போன் பண்றது. அந்த கதயில சந்தி சிரித்துவிட்டது சட்டமும் நீதியும். தமிழகத்திற்கே கேவலம் விளைவித்த இந்தகசமுசா கலகம் நடந்தேறியது டாஸ்மாக் கடையில் அல்ல. நீதிகிடைக்கும் என சில ஏ(ழை)மாளிகள் கால்கடுக்க காத்திருந்து கடைசியில் கருப்பு கோட்டு கணவான்கள் காசுக்கு வேசம்போட்டு கயவர்களை காப்பாற்றும் அந்த இடத்தில், அதாங்க நம்ம சூனா சாமிய குணியவச்சி கும்முனாங்கெல்ல அந்த உயர்நீதிமன்றத்தில். காக்கிகள் ஒருபக்கம் கல்வீச மறுபுறம் கருப்புகள் கல்வீச மண்றவளாகம் போர்களமாகி ரணகளமாகியது. வழக்கம்போல எவன் செத்தாலும்,எவன் அழிந்தாலும் உற்சாகத்தோடு படம்பிடிக்கும் மீடியாக்கள் தங்கள் பணிகளை செய்ய நேரலையிலும்,கோணலலையிலும் ஒருநாள் பொழுதை அங்கேயே ஓட்டி விட்டனர். இந்த சான்ஸை பயன்படுத்தி பழைய கடுப்பை வைத்து முகம்தெரியாத யாரோ சிலர் தலைமை நீதிபதியின் தோசைக்கல் தலையில் கொத்துபரோட்டா போட்டுவிட, ஸான்ட்விச் பிரட்டில் இருந்து வழியும் ஜாம் போல நீதியின் தலையில் இருந்து இரத்தம் கொட்ட அனைவரும் பரபரப்பு ஆனார்கள்.அப்பறம் ஆளாளுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.நம்ம சூனாசாமி வைத்த வெடி நினைத்ததை விட நன்றாகவே வெடித்துவிட்டது. நிச்சயம் இதற்கு அம்மாவிடம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் உண்டு. காவல்துறையை கையில் வைத்திருக்கும் கலைஞர், வழக்கம் போல அய்யகோ! என் ஆட்சியை கலைக்க சதி என கூப்பாடு போடுகிறார். ஆக கலைஞர் ஆட்சி வந்தால் பஸ்மறியல்,கடையடைப்பு, பந்த் போன்றவை இலவச இணைப்பாக கூடவே வந்துவிடும்,கலைஞர் ஆட்சியில் பிளேடு வச்சிருக்கறவன் பியூன மெரட்டுவான்,கத்தி வச்சிருக்குறவன் கலக்டர மெரட்டுவான் என்பது 100% உண்மை.இவ்ளோ நடந்தும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சீராக இருக்கிறது என்று சொல்வது தான் ஆஸ்கார் விருது காமெடி.
சனி, 21 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
//கலைஞர் ஆட்சி வந்தால் பஸ்மறியல்,கடையடைப்பு, பந்த் போன்றவை இலவச இணைப்பாக கூடவே வந்துவிடும்,கலைஞர் ஆட்சியில் பிளேடு வச்சிருக்கறவன் பியூன மெரட்டுவான்,கத்தி வச்சிருக்குறவன் கலக்டர மெரட்டுவான் என்பது 100% உண்மை.//
அப்படியா!!!
கருத்துரையிடுக