ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

ஏன் சிரிப்பொலி ? கலைஞர் காமெடி கடிதம்

உடன்பிறப்பே! ஈழம் ஒருபுறம் எரியதமிழகம் ஒருபுறம் கொதிக்கதங்களை தமிழின தலைவர்கள் என சொல்லித்திரிபவர்கள் தங்கள் நாடகங்களை அறங்கேற்ற, நானும் என் பங்குக்கு ஓரளவிற்கு செய்ய, ஒன்றுமே வேலைக்காகாமல் போய்விட்டது. நான் என்செய்வேன்? 40 MP களும் ராஜிணாமா செய்வார்கள் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவர் ரிஸீவரை லைனிலேயே வைத்துவிட்டு தடாலென தரையில் வீழ்ந்து, புரண்டு புரண்டு சிரித்தாரேஅப்போது நான் அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயமாக நின்றதெல்லாம் யாருக்காக உணக்காகத்தானே உடன்பிறப்பே! 

இப்போது நீங்களெல்லாம் உசாராகி விட்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆமாம் நானும் அழுது அழுது கண்கள் பொங்கி விட்டன. கடிதம் எழுதி எழுதி கை வீங்கிவிட்டது. உலகத்தமிழர்களின் அழுகையை நிறுத்த நான் எடுத்த சிறுமுயற்சி தான் இந்த செருப்பொலி, மன்னிக்க சிரிப்பொலி. இந்த காமெடி சேனலை நீங்கள் பார்ப்பது மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம். இலங்கைத்தமிழர்கள் இனியும் கவலைப்படவேண்டா. "டயலாக் டிவி" வழியாக உங்களுக்கு சிரிப்பொலி கிடைக்கும்.  மக்கள் டிவியைப் பார்த்துப் பார்த்து மண்டையை சொரிந்து கொண்டிருக்கும் மலேய தமிழர்கள் இனி "அஸ்த்ரோ" வழியாக சிரிப்பொலியைக் காணலாம். தமிழகமே! இன்னும் இசையருவிக்கே இடமளிக்காமல் இழுத்தடிக்கும் என் இதயம் இனித்த இம்சைகளின் சன்குழுமம் சிரிப்பொலியை சிதைக்காமல் அளிக்குமா என்பது சந்தேகமே! நான் சிரிப்பொலியென்றால் அவர்கள் ஆதித்யா என்கிறார்கள். நான் என் செய்வேன்..,மாற்றச் சொல்ல முடியாது அந்தப் பெயரை. ஆதித்யா என்பது என் கண்மணி கணிமொழியின் மகனல்லவா?  பாருங்கள் என்குடும்ப சிக்கலைஅது காய்ந்து போன இடியாப்பம் போன்றது,  பிரிக்க நினைத்தால் உடைந்து விடும். எந்தமிழ்மக்களே! உங்கள் துயரங்களைப் போக்க சிரிப்பொலி வரும் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தமிழகம் இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிப்பாய் சிரிக்கட்டும். -கலைஞர்

1 கருத்து:

NSK சொன்னது…

2009 ன் சிறந்த நகைச்சுவை இதுவாகத்தான் இருக்க முடியும்