செவ்வாய், 16 ஜூன், 2009

சரவெடி: கலைஞர், ரகுமான் காமெடி சந்திப்பு

அறிவிப்பு :இது முழுக்க முழுக்க வெறும் கற்பனை கலந்த நகைச்சுவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

இடம்: கோபாலபுரம் கலைஞரின் இல்லம்

நேரம் :காலை 10 மணி

செக்யூரிட்டி செக்கப் எல்லாம் முடித்து விட்டு கையில் அலிகார் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தோடு கலைஞரின் வரவேற்பு அறைக்குள்ளே நுழைகிறார் ரகுமான்.

ரகுமான்: அஸ்ஸலாமு அலைக்கும்..

கலைஞர்: (ஆற்காட்டாரைப் பார்த்து) அந்த தம்பி என்னய்யா சொல்லுது?

ஆற்காட்டார்: உங்க மீது சாந்தி உண்டாகட்டும்னு சொல்றாரு தலைவரே!

கலைஞர்: சாந்தியா? யாருய்யா அது?

ஆற்காட்டார்: ஆகா! மறுபடியும் வாயக்குடுத்து வம்ப இழுத்துடாதிய தலைவரே!

கலைஞர்:வாங்க தம்பி. உக்காருங்க.அது என்ன கையில.

ரகுமான்: இது அலிகார் பல்கலைக்கழகம் எனக்கு குடுத்த டாக்டர் பட்டம் தலைவரே! நீங்க வரச்சொன்னதா ஆற்காட்டார் போன் செஞ்சாரு. அத்தோட இதையும் உங்கள்ட காட்டிட்டு வாழ்த்து வாங்கிட்டுப் போவலாமுனு வந்தேன்.

கலைஞர்: டாக்டர் பட்டம் வாங்க மொத்தமா எவ்ளோ செலவு ஆனிச்சி தம்பி?

ஆற்காட்டார்: தலைவரே! எல்லாரும் உங்கள மாதிரின்னு நெனக்காதிய. இவங்களுக்கெல்லாம் அவங்களா தேடிவந்து குடுப்பாங்க. ஆனா நம்ம ஆளுங்க வாங்குற‌ டாக்டர் பட்டமெல்லாம்.........

கலைஞர்: சரிய்யா!சரிய்யா! கம்பெனி சீக்கிரெட்ட வெளிய சொல்லாதய்யா. தம்பி என்ன சாப்புடுறீய?

ரகுமான்: ஒன்னும் வேணாம் தலைவரே.

கலைஞர்: அட சும்மா கூச்சப்படாதிங்க. லெமன் ஜூஸ் சாப்புடிறீயலா? ஹேய்! கோன் கிதர். தோ கிளாஸ் நிம்பு பாணி தியோ!

ரகுமான்: என்ன தலைவரே! ஹிந்தி பேசுறீய?

கலைஞர்: அது ஒன்னுமில்லப்பா! நம்ம சின்னப்பேராண்டி ஹிந்திகிளாஸ் போறாரு. அவருகிட்ட கத்துகிட்டது தான்.

ஆற்காட்டார்: என்ன தம்பி முழிக்கிறீய! நாளைக்கு அவரும் டெல்லிக்குப் போவனும்ல. டில்லிக்கு போயி தமிழ்ல பேசி ஒரு டீ கூட வாங்க முடியாது. அப்பறம் எங்க கோ'டீ வாங்குறது. ஹேய்! ஜல்தி ஆவ். ஹிஹி! எதுக்கும் முன்னேற்பாடா நம்ம பேரனையும் ஹிந்தி படிக்க வச்சிருக்கேன்.

ரகுமான்: அப்ப தலைவரே, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், ரயில் முன்னாடி படுத்தேன்னு பக்கம் பக்கமா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதறதெல்லாம்????

ஆற்காட்டார்: அட அதுவா! அது ஒரு பெரிய காமெடி தம்பி.. தலைவர் ஒரு தடவ சென்னையிலேந்து திருச்சிக்கு ஒருகூட்டத்துக்கு போறதுக்காக ட்ரைனில‌ டிக்கெட் எடுக்காம வித்அவுட்ல போயிருக்காரு. அந்த சமயம் பாத்து டால்மியா புரத்துல செக்கிங் ஏறிட்டாங்க. இதப் பாத்த தலைவரு அவங்க கண்ணுல படாம எஸ்கேப் ஆகி ஓடியிருக்காரு. தலைவரு பாஞ்சி ஓடுறத‌ பாத்த‌ பாத்த டிடிஆர் இவர வெரட்டிக்கிட்டு ஓட, தலைவர் அவரசரத்துக்கு பதுங்க எடம் இல்லாம ரயில் எஞ்சின் முன்னாடி போயி உள்ளார ஏற முயற்சி பண்ணும் போது கால் தவறி தண்டவாளத்துல விழுந்துட்டாரு. வேகமா ஓடியாந்த டிடிஆர் தலைவர்கிட்ட வந்து ஹிந்தில ஏதோ கேட்க அதற்குத் தலைவர், ஒன்னுமே புரியல தமிழ்ல பேசுய்யா, தமிழ்ல பேசுய்யான்னு கத்த அங்க கூட்டம் கூடிடிச்சி. உடனே தலைவர் ஹிந்தி ஒழிக அப்டின்னு கத்திக்கிட்டே தண்டவாளத்துல படுத்துட்டார். கூட இருந்த உடன்பிறப்புகளும் சேர்ந்துபடுக்க ரணகளமாயி பேப்பர்ல, கலைஞர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்னு போட்டோ வந்திடுச்சி.அத வச்சே இத்தன எலக்சனையும் தலைவர் ஓட்டிட்டார்.

கலைஞர் : யோவ் பூனைய மடில கட்டிக்கிட்டு சகுணம் பாத்தக் கதயா, நீ ஒரு ஆள் போதும்யா என்னய‌ கவுக்கறதுக்கு.

(லெமன் ஜூஸ் வருகிறது. அனைவரும் குடிக்கிறார்கள்)

ரகுமான்: சரி தலைவரே நான் கெளம்பறேன். நன்றி.

ஆற்காட்டார்: தலைவரே! என்ன சும்மா இருக்குறீய, மேட்டர போடுங்க.

கலைஞர்: தம்பி, இருங்க! அதுக்குல்ல என்ன அவசரம். உக்காருங்க. நான் இப்ப புதுசா ஒரு கதை ஒன்னு எழுதியிருக்கேன். அதச் சொல்றேன். கேட்டுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

ரகுமான்:(என்னது கதையா! ஆகா, நல்லா மாட்டிக்கிட்டோமே! எப்டி எஸ்கேப் ஆவுறது) இல்ல தலைவரே! எனக்கு அவசரமா ஒரு வேலையிருக்கு, நான்... கெளம்பறேன்..,

என எழ முயன்ற ரகுமான் தோளைப் பிடித்து அழுத்தி “அட சும்மா கேளுங்க தம்பி என கரகரக்கும் குரலில் சொல்கிறார் ஆற்காட்டார். அவரது பிடியைக் கண்டு அதிர்ந்த ரகுமான் அப்படியே சேரில் அமந்துவிடுகிறார்.

கலைஞர்: என்ன தம்பி கேக்குறீயலா?

ரகுமான்:(கத கேக்க மாட்டேன்னு சொல்லி ஆற்காட்டாருகிட்ட அடி வாங்குறத விட விதியேன்னு கதையக் கேட்டுட்டு உசுரோட ஊடு போய் சேந்திர வேண்டியது தான்) சரி தலைவரே! சொல்லுங்க.

ஆற்காட்டார்: தலைவரே!ஒரு அடிமை சிக்கிட்டான், நீங்க கதைய ஆரம்பிங்க. நான் போய் கதவ சாத்திட்டு வாரேன்.

கலைஞர்: தம்பி! அயோத்திக்குப்பத்தில இருந்து தான் நம்ம‌ கதை ஆரம்பிக்குது. அங்க சோமன், தட்சிமன், வ‌ரதன்னு அண்ணன் தம்பி 3 பேரு. சோமனோட மனைவி கோதை. ஒரு நாளு கோதயப் பாத்துக்குறச் சொல்லி தட்சிமன்கிட்ட சொல்லிட்டு மீன்புடிக்க கட்டுமரத்த‌ எடுத்துக்கிட்டு சோமன் கடலுக்குள்ள போயிடுறான். கோத அவங்க வீட்டு வாசல்லயே ஆப்பக்கட வச்சி யாவரம் பண்ணிக்கிட்டு இருக்குது.அந்த நேரத்துல தட்சிமன் சரக்குகடைக்குப் போயி புல்லா சுண்டக்கஞ்சிய குடிச்சிட்டு ஆப்பக்கட வாசல்ல மல்லாந்துடுறான். இந்த நேரம் பாத்து கந்துவட்டி காவண‌ன் வந்து, தனியா இருக்கிற கோதகிட்ட “வட்டிக்காசு தர வக்கு இல்ல உனக்கெல்லாம் யாவாரம் ஒரு கேடான்னு அவகிட்ட ஒரண்ட இழுத்து கோத வச்சிருந்த ஆப்பச்சட்டிய அடுப்போட தூக்கிகிட்டு போயிடுறான்.

அந்த நேரம் கடல்லேந்து திரும்புன சோமன்கிட்ட இந்த செய்தியை கோத சொல்லிடுது. உடனே கடுப்பான சோமன், எங்கே என் உடன்பிறப்பு தட்சிமன் அப்டின்னு கேக்க, அதுக்கு கோத,"தோ பாருய்யா உன் ஒடம்பொறப்ப, புல்லா சுண்டக்கஞ்சிய அட்சிகினு மல்லாந்து கெடக்கீது, நீ இன்னா செய்வியோ மருவாதயா என் ஆப்பச்சட்டியும் அடுப்பையும் இட்டாந்தா உன்னான்ட குடும்பம் நடத்துவேன், இல்லாகாட்டி என் ஆத்தா வூட்டுக்கு போறேன் சொல்லிட்டு பொட்டிய கட்டிடுது". நேரா கந்துவட்டி காமணன்கிட்ட போன சோமன் அவன அடிச்சி போட்டுட்டு ஆப்பச்சட்டிய தூக்கிகிட்டு வந்துடுறான். ஒடனே காமணன் இத குப்பத்து ப‌ஞ்சாயத்துல சொல்லி நீதி கேக்க, சோமனையும் தட்சிமனையும் 14 மாசம் குப்பத்த விட்டே தள்ளிவச்சிடுறாங்க பஞ்சாயத்துகாரங்க.

பஞ்சாயத்து முடிஞ்சி போவும்போது அங்க கெடந்த வ‌ரதனோட புது செருப்ப ல‌வட்டிக்கிட்டு போயிடுறான் சோமன். விசயம் தெரிஞ்சி ஓடியாந்த வரதன் அவன்கிட்ட இருந்து செருப்ப புடிங்கிகிட்டு வந்து அந்த செருப்பாலயே பஞ்சாயத்து பேசுன பெரியமனுசங்கள அடி அடின்னு அடிக்கிறான். திடீர்னு..,

ஆற்காட்டார்: தலைவரே! நான் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் போயி கதவ சாத்திட்டு வர்றதுக்குள்ளே இங்க நீங்க ராமாயணக் கதய அப்டியே ரீமேக் பண்ணி ரீல் ஓட்டிக்கிட்டு இருக்கியலே! இது ஏற்கனவே ராமாயணம்கிற பேருல படமா வந்திடுச்சி. அதுல கதாநாயகன் பேரு ராமன்.

கலைஞர்: ராமனா? யாருய்யா அது?

ஆற்காட்டார்: ஆகா! வேணாம் தலைவரே! ஏற்கனவே ராமன இழுத்து வாயக்குடுத்து வடஇந்தியாவரைக்கும் வாங்கி கட்டிக்கிட்டது பத்தாதா? வேற ஏதாவது புதுக் கதயச்சொல்லுங்க தலைவரே! அங்க பாருங்க நீங்க சொன்ன கதயக் கேட்டு தம்பி தூங்க ஆரம்பிச்சிட்டாரு. தம்பி முழிச்சிக்கிங்க. தலைவர் அடுத்த கதய சொல்லப்போறாரு. கேளுங்க.

ரகுமான்: என்னது அடுத்தக் கதயா? (இந்தக் கதைக்கே பாதி கோமா நெலக்கி போயிட்டேனே! இனி அடுத்த கதையக் கேட்டா சங்குதான். என்னிக்கோ பண்ணின பாவம், அதுக்கு இன்னிக்கு தண்டனை) சொல்லுங்க தலைவரே சொல்லுங்க.

கலைஞர்: தம்பி! இந்தக் கதையில மொத்தம் 5 அண்ணன் தம்பி, அவுங்க 5 பேரும் சேந்து ஒரு பொண்ண கட்டிக்கிறாங்க..,ஒரு நாளு 5 அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கிளப்புக்கு போயி மூனு சீட்டு ஆடும் போது...

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத‌ மஹாபாரதம்ங்க பேர்ல நான் சின்னப்புள்ளயா இருக்கும் போதே எங்க ஆயா சொல்லியிருக்கு. என்ன தலைவரே! இதுக்குத் தானா கஷ்டப்பட்டு எங்கயுமே போவாத ரகுமான போன போட்டு இங்க வரச்சொன்னேன்? நல்லா கதயா சொல்லுங்க தலைவரே!

கலைஞர்: இருய்யா,இருய்யா! ஆங்! ஐடியா வந்திடுச்சி. இந்தக் கதையில 2 அண்ணன் தம்பி..,

ஆற்காட்டார்: ஏங்க! உங்களுக்கு அண்ணன் தம்பி கதைய வுட்டா வேற எதுவுமே தெரியாதா? அங்க பாருங்க ரகுமான, கசாப்பு கடையில மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆடு மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்காரு.

கலைஞர்: அட இருய்யா அவசரப்படாதே, அண்ணன் தம்பி கதை என் வாழ்க்கையோட கலந்ததுயா.அவங்க இன்னிக்கு அடிச்சிக்கிவாங்க, நாளைக்கி சேர்ந்துகுவாங்க. அதே மாதிரி தான் இந்தக் கதையும் ரொம்ப ரொம்பப் புதுசு. தம்பி படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா? "பாசப் பச்சோந்திகள்"

ஆற்காட்டார்: அப்படி போடுங்க தலைவரே! அருமையான டைட்டில். நீங்க கதைய ஆரம்பிங்க. நான் அந்தப் பக்கமா போயி இந்தப் படத்த தயாரிக்க எவனாவது இளிச்சவாயன் சிக்குறானான்னு பாத்துட்டு வாரேன்.

(இந்த மொக்கை சந்திப்பு அடுத்த வாரமும் தொடரும். காத்திருங்க. கருத்து சொல்லுங்க)

5 கருத்துகள்:

oviyangal சொன்னது…

யம்மாடியோவ் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...

மெட்ராசில ரூம் போட்டு எழுதிறீங்களா...

டாஸ்மாக் பக்கம் போயிட்டு வந்து எழுதினதா...

கலையரசன் சொன்னது…

நல்லா சொல்லுறீங்க.. கதை!
அடுத்த பாகம் எபபோங்கண்ணா?

- பிக்காரி பித்தன்

suresh kannan சொன்னது…

tamili varum bloggil neengal toppu......nalla thiramai..... nalla thairiyam.....

அஹோரி சொன்னது…

அந்த 'கேள்வி - பதில்' அறிக்கை இம்சையையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

super...