செவ்வாய், 23 ஜூன், 2009

உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே!

தனது 36 வது பிறந்த நாளை இனிதே கொண்டாடிய விஜய் அங்கு கூடியிருந்த ரசிகர்களை உற்சாகமாகச் சந்தித்தார். அத்தோடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின் சாராம்சங்கள் இதோ

//ஆண்டுதோறும் என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகின்றனர்.//

ஆமாங்கண்ணா! ஆண்டுதோறும் உங்க ரசிகர்களின் அட்டசாசம் டாஸ்மாக்ல இருந்து ஆரம்பிச்சி நகரத்தின் சந்துபொந்துகள் வரை அவங்க கொடுக்குற அளப்பறை கொஞ்ச நஞ்சமா? பெரியப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து ஃபுல்சவுண்டில் பாட்டுப்போட்டு நடுரோட்டில் போக்குவரத்தை இடைஞ்சல் செய்து ஆட்டம் போடுகிறார்கள்,மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் ஆட்டம்பாம் வெடிகளை வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள்.அதிலும் குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோடு முதல் பாரதி சாலை,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை.மீர்சாகிப்பேட்டை வரை,புதுப்பேட்டை சாலை பிஎஸ்என்எல் முதல் ஆல்பர்ட் தியேட்டர் வரை,அமைந்தக் கரை முதல் செனாய் நகர் வரை, மவுண்ட் ரோடு தேனாம்பேட்டை வாணவில் உள்ளிருந்து ஜிஎன் செட்டி சாலை வரை ரொம்ப ரொம்ப மோசம். இது வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

//பலர் தங்களின் வருமானத்துக்கு மீறி என் மீதுள்ள அபிமானத்தில் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்து வருகின்றனர். //

கரெக்ட்ங்கண்ணா! வீட்டில கொழந்தைங்களுக்கு பால் வாங்க வச்சிருக்கிற காசைத் திருடிக்கிட்டு வந்து உங்க கட்அவுட்டுக்கு பீர் வாங்கி ஊத்துதுங்க வெளங்காம போறதுங்க. முன்னெல்லாம் ஏதோ உங்க பட டிக்கெட்டுகளை பிளாக்ல வித்து இதெல்லாம் சரி கட்டினிச்சிங்க‌. ஆனா இப்ப உங்க பட டிக்கெட்ட ஒயிட்ல வாங்கவே ஆளக்காணோம்.

//இனி உலகம் கம்ப்யூட்டர் மயமாகப் போகிறது. இன்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. //

ஆமா ராசா! உங்க படமெல்லாம் இன்டெர்நெட்டுல தானே ரிலீஸ் ஆவுது. அப்ப அவசியம் இன்டெர்நெட் தேவதான். போற போக்குல இனிமே உங்க படமெல்லாம் இன்டெர்நெட்டுல மட்டும்தான் ரிலீஸ் ஆகும்னு பேசிக்கிறாங்களே உண்மையா!

// ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன். இதை ரசிகர்களிடம் கூறியதுமே அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர். //

அப்ப எல்லாச் செலவும் அந்த அப்பாவி ரசிகர்களோடது தானா? பத்து பைசா உங்கள்ட இருந்து பேராதுண்ணு சும்மாவ சொன்னாய்ங்கே!

// இந்த ஆண்டு எனக்கு மிகவும் விசேஷமான பிறந்தநாள்.//

ஆமா! ஆமா! இந்த ஆண்டு உங்க படமெல்லாம் சில்வர் ஜூப்லில. விசேசம் தான். //ரசிகர்கள் என் பொருட்டு கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். அரசியல் அமைப்பாக மாறினால் இதே நலத் திட்டங்களை பெரிய அளவில் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.//

கட்சி ஆரம்பிக்கிற எல்லாரும் இப்படித் தான் சொல்லுவாங்க. ரசிகர்கள தனியா கூப்புட்டு கேட்டமுன்னா "அவன் கெடக்குறான் வெளங்காத பய" அவன் தலைவராகுறதுக்கு நாங்க கெடந்து கஷ்டப்படனுமா? அப்டின்னு கேப்பாங்க..

// அரசியல் அமைப்பாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது உண்மைதான். நானே நேரடியாக ரசிகர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். அதன் பிறகு தற்போது என்னுடைய பணியான நடிப்பதை செய்து வருகிறேன்.//

உஷ்! இப்பவே கண்ணக் கட்டுதே. அண்ணாச்சி மொதல்ல சினிமாவுல ஒழுங்கா நடிக்க முயற்சி பண்ணுங்க. அப்பால அரசியலுக்கு வரலாம். உங்களச் சொல்லிக் குத்தமில்ல. ஒரு படம் ஓடின ஒடனே, வருங்கால முதல்வர் வாழ்கன்னு கும்பல்ல நின்னுகிட்டு கத்துறான் பாருங்க, அவன மாறி ஆளுகள கண்டுபுடிச்சி என்கவுண்டர்ல‌ போட்டுத்தள்ளுனா நாட்டில லட்டர்பேடுங்க எண்ணிக்கை கொஞ்சம் குறையும்.

// அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. //

எப்போதுமே நெனக்க வேணாமுன்னு தான் சொல்றேன். உங்க இம்ச தியேட்டரோட ஒழியட்டும்.

//ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது.//

இந்த மாதிரி ரொம்ப காலமா சொல்லிச் சொல்லியே ஒருத்தர் தலைல துண்ட போட்டுக்கிட்டு கைல துப்பாக்கியோட “ஜக்குன்னு மூலைல உக்காந்த கத ஞாபகம் இருக்கா?

//என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர். //

கட்சிய ஆரம்பிச்சி அவங்கள குண்டர்களா மாத்திருங்க‌! இப்பவே இந்த ரகள உடுதுங்க உங்க ஒடம்பொறப்புக, இதில கட்சி வேறஆரம்பிச்சிட்டா கிளிஞ்சிடும்.

// என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர்.//

உங்க படம் நல்லா இல்லைன்னு சொல்லி டிக்கெட்டுக்கு கொடுத்த காசை திருப்பிக்கேட்டு தியேட்டர்காரங்ககிட்ட பிரச்சினை பண்ணினா, அந்த போராட்டத்தில் உங்கள் ரசிகர்கள் பங்கேற்பார்களா?

//நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.//

சே! சே! அது எப்டிங்கண்ணா உங்க படத்த எதிர்த்து, நீங்களே????????.

// அரசியல் கட்சி துவங்குவது பற்றி மிரட்டல் வந்ததா? 'மிரட்டற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை...//

கவலையே படாதீங்க உங்கள யாரும் மிரட்ட மாட்டாங்க.(லட்டர் பேடுங்க) பத்தோட பதினொன்னு,அத்தோட இது ஒன்னுன்னு உங்க கட்சியை தலைவர்கள் நினைச்சிக்குவாங்க. // வேட்டைக்காரன் படத்தில் ரசிகர்களுக்கு பெரிய செய்தி இருக்கும், தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் //

இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே! இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது. போனஸ் காமெடி:

ராமு: அந்த தியேட்டர்ல என்ன இவ்வளவு கூட்டம்?

சோமு: யாரோ விஜய்யோட வில்லு படத்துக்கு டிக்கெட் முன்பதிவு பண்ண வந்திருக்காங்கலாம். அது யார்னு பாக்கத்தான் இவ்ளோ கூட்டம்.

என்ன தான் இருந்தாலும் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழகத்தின் ஒளிவிளக்கு,இளைய தளபதி அண்ணன் விஜய் நூறாண்டு வாழ்க என வாழ்த்துவோம்.

அறிவிப்பு:சரவெடி நாளை வெளிவரும்.

4 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

அண்ணாத்த அப்டியே கொஞ்சம் நம்ம பக்கமா வந்து பாத்துகினு போன குஜாலாருக்கும் தல.
ponmaalaipozhuthu.blogspot.com

பெயரில்லா சொன்னது…

super-na..
vayiru valikka sirichen..
ayyo ayyo...

பொன் மாலை பொழுது சொன்னது…

கபாலி அண்ணாத்த ஒரு விசியம் சொன்னாக்க கேட்டுகினும் . சொல்லட்டா?
GAA ண்டு கபாலி
அப்படீன்னு வச்சிணுகிரீயே அத்த பேர மாத்து நைனா ." காண்டு " அப்படீன்னு இந்திகாரன்கிட்டே கேட்டுகினா நம்ள நாலு வூடு கட்டிகினு அடிக்க வருவான் வாத்தியாரே. அப்படீனா......... அப்டீனா .....இன்ன அர்த்தம் தெர்தா. .... உன்னக்கு பின்னாடி கீதே ஆ .... அத்தா ... அத்தா

எத்தோ ம்பா நம்மால்லாகீரியா அப்பாலா நல்ல எளுதிகீனுகீர அத்தா,.
சரிபா ..நம்ம கட பக்கம் வா வாஜாரே
ponmaalaipozhuthu.blogspot.com

கழுதயின் காதலன் சொன்னது…

இவரு காமெடி படத்துல தான்னு பார்ததா நிஜதலயுமா! தயவு செஞ்சி படத்தோட நிருதிகங்க டாக்டர் விஜய் ( டாக்டர் - இத நெனைச்சா உங்களுகே ராத்திரில தூக்கம் வரதே).

அரசியல் கட்சி துவங்குவது பற்றி மிரட்டல் வந்ததா? இப்படி ஒரு கேள்வி யாருங்க கேட்டது ?????? சாமி யாராவது இவர மிரட்ட முடியுமா????? மக்களை இவர்தான் படத்துக்கு படம் மிரடரறே

நிஜமாங்கண்ணா! வில்லு படத்துக்கு நானும் என் நண்பானும் போனோம், படம் போட்டு 15 நிமிசத்துள்ள என் நண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை -> வாடா ஓடிடலாம்

நம்மாழுக்காக ஒரு குரூப்பு STRIKE பண்ணுதாம் அது எதுக்கு? அத படிச்சிபுட்டு நீங்களும் பங்கேத்துகங்க

http://tamiltherai.blogspot.com/2009/05/blog-post_26.html