செவ்வாய், 5 மே, 2009

கலைஞரின் உண்ணாவிரத காமெடிகள் பாகம் 2

ஒரு ஊருல ஒரு பண்ணையாரு இருந்தாராம். அவருகிட்ட கணக்கப்புள்ளையா காத்தமுத்து வேலை பார்த்தாராம். ஒரு நாளு பண்ணையார் அவர்ய் குடும்பத்தோட பண்ணையைச் சுத்திப் பாத்துட்டு வீட்டுக்குப் போயிட்டாராம். வீட்டுக்கு போனதும் அவரு மகளோட கால்ல கெடந்த வெள்ளிக்கொலுசை காணலயாம். பண்ணையாரு எல்லாப்பக்கமும் தேடிட்டு கடைசியா பண்ணையில தான் விழுந்திருக்கும்னு கணிச்சி பண்ணைக்கு வந்தாராம். அவரு வருவதப் பாத்ததும் கணக்குபிள்ளை காத்தமுத்து வேகமா ஓடிவந்து ஐயா! இந்தக் வெள்ளிக்கொலுசு நம்ம கெணத்தடிகிட்ட கெடந்துச்சி அபடின்னு சொல்லி அவரு கையில குடுத்தாராம். 

அதக் கண்டு மணம் மகிழ்ந்த பண்ணையாரு, "கணக்கு உன் நேர்மையைப் பாராட்டி அதையே உனக்கு பரிசாகத் தருகிறேன்" அப்டின்னு அவரு கையில குடுத்திட்டுப் போயிட்டாராம். இது நடந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நாள் பண்ணையாரு தோட்டத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டாராம். அவரு போனபெறகு அவரு உக்காந்து இருந்த கயித்துக்கட்டிலுக்கு கீழ 5 பவுணு மைனர் சங்கிலி கெட்ந்துச்சாம். அதப்பாத்த கணக்குப்பிள்ளை "ஆகா இது நம்ம பண்ணையாரோட சங்கிலியாச்சேன்னு" செனச்சி அத எடுத்து பைக்குள்ளே வச்சிக்கிட்டாராம். அடுத்த நாளு வீடெல்லாம் சங்கிலிய தேடுன பண்ணையாரு வேர்க்க விறுவிறுக்க பண்ணைக்கு வந்து தோட்டம் பூரா அலஞ்சி திரிஞ்சி தேடினாராம் 

இத ரொம்ப நேரமா கவணிச்ச கணக்குப் பிள்ள ஒன்னுமே சொல்லாம அவரு வேலையப் பாத்துக்கிட்டு இருந்தாராம். தேடிக் கலச்சிப்போயி அசதியான பண்ணையாரு கயித்துக்கட்டில்ல வந்து படுத்தாராம். ஒடனே கணக்குபுள்ள ஐயா! நீங்க என்னத்த இவ்ளோ நேரமா தேடிக்கிட்டு இருந்திய? அப்டின்னு கேட்டாராம். அதுக்கு பண்ணையாரு அது ஒன்னுமில்ல கணக்கு என்னோட 5 பவுண் சங்கிலிய காணோம். அதத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் அப்டின்னாராம். ஒடனே கனக்கு தன் பைக்குள்ள கையவிட்டு அய்யா! அது இதான்னு பாருங்க அப்டின்னு காட்டுனாராம். 

அதப்பாத்த பொறவு தான் பண்னையாருக்கு உசிரே வந்திச்சாம். ஏய்யா! நான் காலைலேர்ந்து இத நாயாத் தேடிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா இத எடுத்து பைக்குள்ள வச்சிக்கிட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி இருக்கிற, அப்டின்னு கேட்டாராம். அதுக்கு கணக்கு அய்யா இத நாங்க உங்ககிட்ட கொண்டுவந்து குடுத்தா நீங்க அதுக்காக என்னயப் பாராட்டி அத எனக்கே பரிசாக் குடுத்திருவீங்க. அது எப்படியும் எனக்குத்தான் வரப்போகுதுன்னு தான் நானே வச்சிக்கிட்டேன் அப்டின்னு கணக்கு சொன்னதக் கேட்டு சுதாரித்த பண்ணையார் "யோவ் அது நீ ஒரு மொற செஞ்சதுக்கு அண்ணிக்கே முடிஞ்சி போச்சிய்யா" அதயே இதுக்கும் நெனச்சி கணவுகானாதே அப்டின்னு சொல்லிட்டு கெளம்பிட்டாராம். 

அது சரி இந்தக் கதைக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்? புரியலையா, கலைஞர் எப்பக் கடிதம் எழிதினாலும் நான் அன்னிக்கு ரயில் முன்னாடி படுத்தேன், இலங்க பிரச்சினைக்கு 2 தடவ பதவியத்தொறந்தேன்னு பழைய தேஞ்சிபோன CD க்களை மறுபடியும் மறுபடியும் ஓட்டிக்கிட்டு இருக்காரே? அதுக்குத் தான் எவ்வளவோ பதிலீடுகள் செஞ்சாச்சே! மறுபடியும் ஏன் அதயே சொல்லி ஓட்டுக்கேக்கிறார்? புதுசா எதுவும் செய்யலியா அல்லது செய்ய மணமில்லையா? அது கெடக்குது நீங்க காண்டு கபாலிய பாருங்க.

UPDATE TODAY: அதிசய உலகம் "கதறவைத்த கொடூர விபத்து"

8 கருத்துகள்:

கிரி சொன்னது…

//அதுக்குத் தான் எவ்வளவோ பதிலீடுகள் செஞ்சாச்சே! மறுபடியும் ஏன் அதயே சொல்லி ஓட்டுக்கேக்கிறார்? //

எனக்கும் தோன்றும் கேள்வி

கிரி சொன்னது…

கலைஞர் உண்ணாவிரத படத்திற்கு உங்க கமெண்ட் அருமை :-)))))

டாஸ்மாக் கபாலி சொன்னது…

வருகைக்கு நன்றி கிரி சார். பாகம்1 க்கு இருந்த வரவேற்பு ஏனோ பாகம் 2க்கு இல்லை என நினைக்கிறேன்.

Selva சொன்னது…

பட கமெண்ட் சூப்ப்பரு

Gokul சொன்னது…

Please watch this...

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU

-Gokul

பெயரில்லா சொன்னது…

Kaludhai,

This Thinnai post in 1999 still stands true. Jimmy Gandhi - hilarious - have a look at this post

This Thinnai post in 1999 still stands true. Jimmy Gandhi - hillarious - have a look at this post

http://www.thinnai.com/?module=displaystory&story_id=79912032&format=html

வீணாபோனவன் சொன்னது…

படமும் காமெண்ட்டும் சூப்பர் தல...

-வீணாபோனவன்.

ஆகாயமனிதன்.. சொன்னது…

கலைஞரின் "டெபாசிட் காலி" www.onely1.blogspot.com