திங்கள், 11 மே, 2009

ஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்?

கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில்  போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் தன்ராஜை ஆதரித்து வாழப்பாடி சந்தைப்பேட்டை அருகே முன்னாள் கன‌வு நாயகன் ராமராஜன் பிரசாரம் செய்தார் அவர் பேசியதாவது, 

தமிழகத்தில் வரும் 13-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோற்பது உறுதியாகிவிட்டது. இலவச டி.வி. கொடுத்த தி.மு.க. அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். டி.வி. கொடுத்ததினால் கருணாநிதி குடும்பத்தினருக்கு கேபிள் இணைப்பு மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 

தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ உப்பு 9 ரூபாய்க்கு விற்கிறது. தீப்பெட்டி ஒரு ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் எதற்கும் பயன்படாத ரேஷன் அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்குவதாக தி.மு.க.வினர் பெருமிதம் பேசுகின்றனர். 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும். ஜெயலலிதா ஆட்சியில் ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம், கருணாநிதி ஆட்சியில் ரூ. 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.கருணாநிதி ஆட்சி நீடித்தால் ஒரு பவுன் தங்கம் ரூ. 1 லட்சம் வரை விற்கும். 

வாழப்பாடி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர்வழங்குவதாக கூறுகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது போல மின்சாரத்துக்கும் தி.மு.க அரசு விடுமுறை விட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. 

இருண்டு கிடக்கும் தமிழகத்தை ஒளிரச் செய்ய அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள் என பொரிந்து தள்ளிவிட்டார் மக்கள் நாயகன்

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே! உன் மேல ஆசப்பட்டு காத்துக்காத்து நின்னேனே!.  

கருத்துகள் இல்லை: