ஞாயிறு, 24 மே, 2009

கலிஞரின் ஜிகிடிஜிக்கான் வேலைகள்

அவசர அவசரமா பிளைட்டு புடிச்சி வேகமா கட்சியின் பொதுக்குழுவையும் கூடவே கூட்டிகினு அதாங்க அண்ணன் அழகிரி, கவிஞர் கணிமொழியம்மா, அண்ணன் தயாநிதி (இவங்கள யாராவது குடும்ப உறுப்பினர்கள்னு சொன்னா தொலச்சிருவேன் தொலச்சி, இவுகதேண் கட்சி, கட்சிதேண் இவுக) ன்னு அல்லாரையும் கூட்டிகினு மஞ்சா கலருல ரெண்டு சால்வ வாங்கிகினு, கலீஞர் ஆஸ்பத்திரியான்ட இருக்கசொல்லோ நெறயாச் சேந்த பூங்கொத்துல நல்லதா பாத்து ரெண்டு எடுத்துகினு டெல்லிக்கு பிளைட்ல சீட்டு கெடைக்காட்டியும் பரவாயில்ல, நின்னுகிட்டாவது போயிரேன்னு சொல்லி கெளம்பி வந்து டெல்லிக்கு சேந்து ஒரு நல்ல ஓட்டலா பாத்து ரூமு போட்டுகினு காங்கிரஸு கட்சி ஆளுக்கல கூப்புட்டு கையில துண்ட போட்டு பேச்சிவார்த்தய ஆரம்பிச்சாரு கலீஞரு. 

ஆரம்பத்துலயே 7  ன்னு ஆரம்பிச்சி நெலக்கரி,ரயிலு,ஐடி,கப்பலு சாலை அப்டின்னு அடிக்கிகிட்டே போயி எலவச இணைப்பா ரெண்டு கேபிணட்டு அமைச்சரு வேனும் அப்பிடின்னு கேக்க பக்கத்துல இருந்த அண்ணன் அழகிரி திடீர்னு "அப்பா அப்பா எனக்கு ஒன்னு வாங்கிக் குடுப்பா" அப்டின்னு கேக்க ஒடனே தலீவரு உனக்கு இல்லாமயா என் கண்மனி நீ வேனும்னா பிரதமர் ஆயிடுறியான்னு கேக்க, ஒடனே அவரு அதுக்கு இப்ப என்னப்பா  அவசரம் அதெல்லாம் ஒரு மாசம் கழிச்சி பாத்துக்கலாம் அப்டின்னு சொல்லிட்டாராம். அவுக கேட்ட சீட்டயெல்லாம் குடுக்க முடியாதுன்னு யாவாரம் பேசவந்தவுக துண்ட ஒதறி தோள்ல போட்டுகினு கெளம்பிட்டாக. ஒடனே மண்மோகன் சாருக்கு போன போட்டு பாத்தா அது சுவிட்ச் ஆப் செஞ்சியிருந்திச்சாம். ஆகா.,, நம்ம கிட்டயேவா அப்டின்ன்னு ரூமுக்கு வாடக கூட குடுக்காம எல்லாரும் அன்னிக்கே எஸ்கேப் ஆயி மெட்டுராஸுக்கு ஓடியாந்துட்டாக. 

தலீவரு கலீஞரு இல்லாமலேயே பதவியேற்பு வெழா நடந்துடுச்சி.கூட்டத்துக்கு வந்தவுக எல்லாரும் கலீஞரு எங்கே கலீஞரு எங்கே அப்டின்னு கேக்க அதுக்கு சிரிச்சிகினே மழுப்பிட்டாரு மண்மோகன் அண்ணாச்சி. ஊருக்கு வந்த கலீஞர் இந்த மேட்டரு சம்பந்தமா பேசறதுக்கு செயற்குழு இன்று கோபாலபுரத்துல சாரி நாக்கு பொறண்டுடுச்சி அறிவாலயத்துல நேத்திக்கு கூடுற‌தா இருந்திச்சி அது திடீருன்னு ரத்துன்னு சொல்லிட்டாக. இன்னாடா மேட்டருன்னு வெசாரிச்சா டாக்டருங்க அட்வைஸ்ஸயெல்லாம் கேட்டுக்காம‌ டெல்லி போயிகினு வந்த தலீவருக்கு மருக்காவும் முதுகு வலி வந்திருச்சின்னு சொல்லி நேத்திக்கு சாயங்காலம் அப்பல்லோ ஆஸூபத்திரிக்கு போன தலீவரு நைட்டு தான் ஊட்டுக்கு போனாராம். 

ஆகா தலீவரு இந்த பிரச்சினைய வச்சிகுனு இன்னொரு உண்ணவிரதம் இல்லாக்காட்டி பந்த் போட்டுறுவாருன்னு டர்ரான மண்மோகனு சாரு கட்ட கடீசியா, திமுகவுக்கு 2 கேபினட்டு அமைச்சரு பதவிகளையும், 5 எணை அமைச்சர் பதவிகளும் தர்ரதா போன போட்டு சொன்னாராம். அதுகாண்டில்லாம நம்ம பாலு சாரு, நம்ம ஸ்பெக்ட்ரம் ராசா சாரு (அய்ய‌ "நிழல்கள்" ரவி, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, மதிரி இவருக்கும் பட்டம் ஒட்டிக்கிச்சுபா) மேல தனக்கு எந்த காண்டும் இல்லைன்னும், அவுக‌ தன்னோட‌ பணிபுரிஞ்ச‌ மிக மரியாதைக்குரிய அமைச்சர்கள்னும்(?),அவுக மேல எந்த ஊழல் புகாரும் இல்லைன்னும் (அவ்...., முடியல), அவுகளயே மருக்காவும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளத் தயாரா இருப்பதாகவும் பிரதமரு மன்மோகனு சாரு சொல்லிக்கினாராம். 

ஆனாக்க‌, திமுக கேக்குற மாரி 3 கேபினட்டு அமைச்சர்கள், 4 இணையமைச்சர்கள், சால‌ மற்றும் கப்பலு போக்குவரத்து, ரயில்வே ஆன‌ கேபினட்டு அமைச்சரு பதவிகளை குடுக்க‌ முடியாதுன்னும் காங்கிரஸுல சொல்லிக்கினாங்க. ஆனாக்கா தகவலு தொழிலுநுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை ஆகிய கேபினட் பதவிகளையும், தனிப் பொறுப்புடன் கூடிய கனரக தொழில்துறை பதவியையும், சுகாதாரம், பெண்கள் நலம், ரயில்வே, சுற்றுலா ஆகிய சுத்தமா மீட்டரு பேராத போங்கு இணையமைச்சர் பதவிகளையும் தர்ரதா மேலும் சொல்லிகினு இருக்காங்கோ.

அதுமட்டுமில்லாம 3 கேபினட்டு வேணும்னு அடம் புடிச்சா தனிப் பொறுப்போடு கூடி இணையமைச்சர் பதவிய கொறச்சிகினு ஒரு சிங்கிள் டீயிக்கு கூட பைசா பெறாத தொழிலாளர் நலம் போன்ற டுபாகூர் தொறையைத் தான் தர முடியும்னு மருக்காவும் தீர்மாணமா சொல்லிப்புடிச்சி காங்கிரஸூ. இப்புடியே போயிக்கினு இருந்த உள்ளதும் போச்சிடா நொள்ளக் கண்ணான்னு ஆயிடுமேன்னு பீதியான தலீவரு கலீஞரு கட்சித் தலைவர்களுடன் (அட எத்தனவாட்டி தான் எழுதுறது. ஒருக்கா சொன்னா ஒங்களுக்கு புரியாது ? அதாங்க ஸ்சுடாலினு,அண்ணன் அழகிரி..........) தொடர்ந்து தன்னோட பீதியச் சொல்லி ஆலோசனய‌ நடத்திகினு இருக்காராம் தலீவரு. திமுகவுடன் சிக்கல் தீர்க்கப்பட்ட பின்னால‌ வரும் செவ்வாகெழம அமைச்சரவைய‌ விஸ்தாரப் படுத்த மன்மோகனு சாரு முடிவு பண்ணியிருக்காராம்.பாத்தீகலா நம்ம தலீவர் கலீஞரோட கைவண்ணத்த? இதுக்கு மட்டும் பிளைட்டு புடிச்சி போயிடுவாரு, மெரட்டலு குடுப்பாரு ஆனா ஒரு இளிச்சவாய பிரச்சனை அதாங்க ஒரு பைசா பேராத ஈழத்தமிழர் பிரச்சிணைக்கு மட்டும் தந்தி கொடுங்க தாபால் போடுங்க எஸ்.எம்.எஸ் அனுப்புங்கோ,உண்ணாவிரதமிருங்கோ, பஸ்ஸ ஓடவிடாம பந்த் பண்ணுங்கோன்னு கடிதமா எழுதி குமிச்சிருவாரு. 

ஒதய சூரியன் சின்னத்திலே, ஓட்டுப்போட்ட‌மே  மொத்தத்திலே

2 கருத்துகள்:

சரக்குபார்டி சொன்னது…

டாஸ்மாக் கபாலி,ஓட்டுப்போட்ட‌மே னு அப்படி ஒட்டுமொத்தமா ஒரு முடிவுக்கு நாம வரகுடாது (காசு வாங்கி ட்டு ஓட்டுப்போட்டவுக கோவப்படுவாக). யாருக்காக தலைவரு டெல்லி க்கு பேனார்? ஓட்டுப்போட்டவுகளுக்கு திரும்ப வருகின்ற தேர்தல்க்கு காசு கொடுக்கணும்ல அதுக்கு அண்ணன் அழகிரி, கவிஞர் கணிமொழியம்மா,அண்ணன் தயாநிதி போன்ற தன் கட்சி காரர்களுக்கு சீட்டு வாங்கி குடுத்து நிதி திரட்ட தான் முதுகு வலியிம் பொருட்படுதாமுள் தலீவரு டெல்லி போனார். அதனால ஓட்டுப்போட்டவுக (காசு வாங்கி ட்டு ஓட்டுப்போட்டவுக) யாரும் கவலை பட வேண்டாம் தலீவரு எது பண்ணினாலும் சீரும் சீரப்பும் செமையாக தான் பண்ணுவார்

பெயரில்லா சொன்னது…


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்