
நேற்று பிரபாகரனும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது இலங்கையின் ராணுவ அமைச்சு. இதே செய்தியை நேற்று முழுவதும் ரூபவாஹினி மற்றும் டிஆர்டி ஆகியவைகளும் வழிமொழிந்தன. அது மட்டுமின்றி சில இந்திய செய்தித் தொலைக்காட்சிகளிலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாகின. ஆனால் இலங்கை அரசு இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஜோர்டான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்சே திடீரென அவசர அவசரமாக நாடு திரும்பினார். அதுமட்டுமின்றி நேற்றய தினத்தை கொண்டாடுமாறு இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளைக் வைத்துத்தான் நேற்று பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.
நேற்று புலிகளுக்கும் ராணுவத்திற்கும் மிக நெருக்கத்தில் கடுமையான சண்டை நடந்தது. ராணுவத்தின் அதிரடிப்படையை சீர் குலைக்க கரும்புலிகள் அடுத்தடுத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கரும்புலிகள், படை பிரிவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.அப்போது ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி பிரபாகரனும், அவரது சகாக்களும் வெளியேற முயன்றனர். ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் ஏறி பிரபாகரன் சென்றார்.
ஆனால் சிங்கள ராணுவத்தினர் அந்த பகுதியில் இருந்து யாரையும் தப்ப விடவில்லை. அப்பாவி தமிழர்கள் உள்பட அனைவரையும் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த அதிரடி தாக்குதலில் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.அவருடன் சூசை மற்றும் பொட்டுஅம்மானும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை ராணுவத்தை மேற்கொள் காட்டி HEAD LINES TODAY தொலைக்காட்சி இன்று மதியம் செய்தி ஒளிபரப்பியது.மத்திய அரசின் U.N.I செய்தி நிறுவனமும் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இந்த தகவலை சிங்கள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நாணயகாரா AFP செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்தார்.
அது மட்டுமின்றி வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த செய்தி எஸ்.எம்.எஸ் வழியாகப் பரவியது. பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஜனாதிபதி மாலை அல்லது இரவு அறிவிப்பார் என்றும் அந்த எஸ்.எம்.எஸ் யில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் நடேசன்,புலித்தேவன், ரமேஷ் மூவரும் இன்று அதிகாலை நடந்த கடும் சண்டையில் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டது. அவர்கள் 3 பேரின் உடல்களை வடக்கு வெள்ள முள்ளி வாய்க்கால் பகுதியில் சிறப்பு படை வீரர்கள் கண்டெடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவராக செயலாற்றி வந்தார். வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்பம் பயின்று திரும்பிய சார்லஸ் தான் இலங்கை அரசின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய புலிகளின் வான்படையை உருவாக்கினார். அது மட்டுமின்றி புலிகளின் விமானதாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதும் சார்லஸ் தான். முன்னர் இலங்கை ராணுவத்தின் வெறித்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் நண்பர் சார்லஸ் அந்தோணியின் பெயரைத் தான் தன் மகனுக்கு வைத்தார் பிரபாகரன். கடந்த மாதம் சிங்கள ராணுவத்தாக்குதலில் சார்லஸ் அந்தோணி படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது.அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இராணுவத்தின் இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழ்மக்கள் மத்தியிலே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் முன்னர் இலங்கை அரசில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். அதில் இருந்து விலகி புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னர் நடேசன் அந்தப் பொருப்பினை ஏற்றுக்கொண்டார்.
புலித்தேவன் விடுதலைப்புலிகள் இயக்க அமைதி செயலக பொறுப்பாளராக இருந்தார். ரமேஷ் விடுதலைப்புலிகள் மூத்த தலைவர்களில் ஒருவர்.சிறுவர்கள் மற்றும் இளம்புலிகளுக்கு போர் பயிற்சி அளித்து அவர்களை போரில் ஈடுபடுத்தி வந்தார். இலங்கை ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் புலிகளின் ஒவ்வொரு இடங்களும் கைப்பற்றப் பட்டன. அதுமட்டுமின்றி அவர்களுக்கு செல்லும் உணவு மற்றும் ஆயூதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக சரிவைச் சந்தித்த புலிகள் கடைசியில் இன்று முழுவதுமாக தங்களை இழந்துவிட்டது தான் பரிதாபத்திற்குரியது. ஈழத் தமிழர்களின் 36 வருடப் போராட்டம் கடைசியாக முடிவுக்கு வந்து விட்டது.
வேண்டுகோள்: முந்தைய பதிவில் சில நண்பர்கள் நான் ஏதோ தமிழீழ எதிரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.இலங்கையிலே கொன்றழிக்கப் படிகின்ற என் இன மக்கள் காக்கப் படவேண்டும் என்பதிலோ தனி ஈழம் அமைந்து அங்கே நம்மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக ஒரு வேட்டுச்சத்தம் கூட இன்றி அமைதியாக வாழ்வேண்டும் எனபதிலோ எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. நிச்சயம் அந்தநாள் வரும் என்பதிலே நம்பிக்கையிழக்க மாட்டோம். நேற்றய செய்தி முழுக்க முழுக்க இலங்கை ஊடகங்களில் குறிப்பாக ரூபாவாஹினி மற்றும் டிஆர்டி தமிழ் போன்ற இலங்கை காட்சி ஊடகங்களிலும் இந்தியாவின் சில முக்கிய தொலக்காட்சிகளிலும் வெளியான செய்தி தான்,தவிர என்னுடைய சொந்த கற்பனையல்ல.
அதுமட்டுமின்றி இந்த செய்தி இலங்கை ராணுவம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது தான். ஆனால் அரசு அறிவிக்கவில்லை. என்வே முந்தைய செய்திவெளியீட்டில் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. ஆனால் கருத்துப்பகுதியை நேற்று யாரோ முழுக்க முழுக்க சாட்டிங் செய்ய பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். தேவையற்ற அநாகரிக வார்த்தைகள் மற்றும் கொச்சை வார்த்தைகள் நிறைந்திருந்தன. அது மட்டுமின்றி சில நண்பர்கள் என்னையும் வாரி இருந்தனர். எனவே தயவுசெய்து நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு முழு உரிமையும் உண்டு.எனவே தயவுசெய்து அநாகரிக ஆபாச வார்த்தைகள் தவிர்த்து உங்கள் சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மட்டுமே வெளியிடுங்கள். நன்றி.
12 கருத்துகள்:
வணக்கம் டாஸ்மாக் கபாலி!
உங்கள் பதிவு
நன்றாகத்தானிருக்கிறது! உண்மையான செய்திகளைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது. நான் சொல்ல முற்படுவது இப்போதைய செய்தியை அல்ல! ஏற்கனவே சில உண்மையான செய்திகளை வெளியிட்டமைக்காக குமுதம், தினமலர், தமிழ்மணம் ஏன் பிபிபிசியைக்கூட விட்டுவைக்கவில்லை. சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் - என்ன செய்வது! அவர்களை மாற்ற முடியாது! கவலைப்படாமல் உங்களுடைய எண்ணக் கருத்துக்களைத் தாராளமாக எழுதுங்கள்! நன்றி.
உங்களை மாதிரி பதிவர்கள் உண்மையை எழுதினால் இப்படிதான் வைவார்கள்.
பிரபாகரன், அப்பாவி தமிழன் என்று ஸீன் ஒரு பக்கம் போட்டபடி, இன்னோரு பக்கம் ஈழத்தமிழனின் இந்த நிலமைக்கு காரணமான காங்கிரஸுக்கு பின்பாட்டு பாடும் கட்சிக்கு ஆதரவளிக்கும் நபர்கள்தான் இந்த கலிகாலத்தில் நல்லவர்கள்!!!
டாஸ்மாக் கபாலி ,தனி ஈழம் அமைந்தல் தான் இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழமுடியும் எனபதில்லை. தனி ஈழம் கேட்டு புலிகள் யுத்தம் செய்ததினால் தான் வேட்டுச்சத்தத்துடன் மக்கள் வாழ்வு அழிந்தது. வெளிநாடுகளில் வசதியாக வழ்ந்து கொண்டு யுத்தத்தை ஆதரித்து எழுதப்படும் பதிவுகள் இலங்கையில் தமிழர்களின் எண்ணங்கள் அல்ல.
http://i39.tinypic.com/2lnjzfm.jpg
கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே
ellam valla eraivanai vaendikondirukkum pala kodi Thamilargalil oruvan
( Nile Raja )
:-(
ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவிலிருந்து ராஜீவ் காந்தி ஆத்மா வரை இனி சாந்தியடையும்
Yahoo! Butcher Killed!
//ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவிலிருந்து ராஜீவ் காந்தி ஆத்மா வரை இனி சாந்தியடையும்//
அதோடு ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் ஆத்மாவும் சாந்தியடையும்.
வயித்துக்கு சோறு போட்டா போதும், சாப்டு அக்கடான்னு கிடைச்சதோட படுத்துட்டு, நாயிலும் கேவலமா செத்துப் போகலாம்னு இருக்கிற உங்களுக்கெல்லாம், அடிமைத்தனம் பத்தியும், சுதந்திரம் பத்தியும், போராட்டம் பத்தியும் சொல்லி புரியவா போறது. உன்னோட மண்டைல இருக்கிற குப்பை, நிறைய பேருக்கு இருக்கு!
என் கண்ணு போனாலும் பரவல்ல, பக்கத்துக்கு வீட்டுக்காரன் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற கூட்டமே, உங்களுக்கு எப்போதான் அறிவு பிறக்குமோ. உன் வீட்டில பிரச்சனைன்னா பக்கத்து வீட்டுக்காறன கூப்டு பொண்டாட்டி கிட்ட பேசச் சொல்லுவியா, இல்ல நீயே பேசிக்குவியா. இப்படிப்பட்ட கேவலங்கெட்ட நாயிங்க இருக்கிறதாலதான் தமிழன் அழிஞ்சு போறான். நல்லா தின், தின்னுட்டு நாசாமா போ.
வெளிநாட்டில இருந்து ஒன்னும் பண்ண முடியலயேன்னு கொதிச்சுக்கிட்டு இருக்கிறவன் பத்தி உனக்கு தெரிய நியாயமில்லை. செத்த பிணங்களுக்கு இதெல்லாம் எப்படி உறைக்கும். சில பேருக்கு சுடுகாட்டுக்கு போனாலும் புத்தி வராதாமே. நீயெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா..!! உன் மூஞ்சில கோடிக்கணக்கான தமிழர்கள் காரி உமிழ்கிறது உணரல நீ?
சீ தூ.... செத்துப்போ மிருகமே!
ennagkannaa ningkalee sollipooddu niigkalee name illama vanthu pathi pooduringka
//சீ தூ.... செத்துப்போ மிருகமே!//
எப்பவும் அடுத்தவனை சாகடிக்கிறதுலேயே இருப்பீங்களாடா தீவிரவாத நாய்களா
கருத்துரையிடுக