திங்கள், 4 மே, 2009

தனக்குத் தானே வேட்டு வைத்தக் கலைஞர்

சும்மா போன ஆசாரியக் கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வையுங்கன்னு சொன்ன கதயா, சத்தமில்லாம தூங்கிட்டு கெடந்த‌ சிங்கத்த குச்சியால குத்தி கிளப்பி விட்டுட்டார் கலைஞர். ஆமாங்க, மக்களே மறந்து போயிருந்த பஸ்கட்டண உயர்வை அவரே ஞாபகப்படுத்தி கிளப்பி விட்டுட்டு இன்னிக்கி பரிதாபமா மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டிருக்கார். தன் வெற்றிக்கு தானே வேட்டு வைக்க இந்த சிறப்பு தேர்தல் கட்டண குறைப்பை அமுல்ப்படுத்தி விட்டு வழக்கம் போல கலர்டிவி கணவு கண்டு கொண்டார். ஆனால் இவ்வளவு காலமும் இம்சை படுத்திவிட்டு எலக்சன் வந்தவுடன் இந்த கட்டணக்குறைப்பு கரிசணம் மக்கள் மத்தியில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது. 

சாதாரணமாக திமுகவிற்கு ஓட்டுக்களைக் குத்திக்குமுறி விடும் அரசு ஊழியர்கள் கூட அதாவது பஸ்களிலே பயணம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த முறை திராவிட முன்னேற்றக்கழகத்தை முன்னேற்ற அவர்கள் முயற்சிக்கப் போவதில்லை. காரணம் பஸ்கட்டணத்தைப் பற்றி காரசார விவாத அரங்கங்களை நடத்துவது அவர்கள் தான். தாழ்தளம்,தங்கரதம் என பெயரைப் போட்டு மினிமம் 5 ரூபாய் வசூலித்த கலைஞர் இதெல்லாம் தேவையா எனக் கேட்டதற்கு பெங்களூரை ஒப்பிட்டு கதையை அளந்தார். 

 இந்த நிலையில் அறிவிக்கப்பட்டது நாடாளுமன்றத் தேர்தல் 2009. முதலில் திமுக வெல்வது போன்ற ஒரு மாயை தெரிந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை விவகாரத்தில் கலைஞரின் அந்தர் பல்டியை புரிந்து கொண்ட மக்கள் அவருக்கு எதிராக எதிர்பலையை உண்டாக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் அம்மாவின் தமிழீழ ஆதரவுப் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர இப்போது அம்மாவின் வெற்றி கிட்டத் தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. எப்படியும் ஒரு 10 சீட்டுத்தான் கிடைக்கும் என உளவுப்படை மூலம் உறுதிசெய்த கலைஞர் மீண்டும் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்தார். அதுவும் பெயிலியர் ஆகிவிட்டதை தொடர்ந்து நைசாக பஸ்கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டார். 

சமீபத்தில் இந்த பஸ் கட்டணங்கள் திடீரென குறைக்கப்பட்டன. எல்லா பஸ்களிலும் சாதாரண பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாய்மொழி உத்தரவு மூலம் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தன. அதன்படி குறைந்தபட்சம் 2 ரூபாய் என கட்டணங்கள் மாற்றப்பட்டன. 

இதற்கிடையே திடீரென பஸ் கட்டணங்கள் குறைக் கப்பட்டிருப்பது, தேர்தல் விதி முறை மீறல் என்று தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் கே.ன். நேரு, தமிழ்நாட்டில் பஸ் கட்டணங்கள் உயர்த்தவும் இல்லை. குறைக்கவும் இல்லை  என்று யாருக்கும் புரியாத ஒரு புது விளக்கம் அளித்தார். இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. 

இது குறித்து விளக்கம‌ளித்த‌ தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிதமிழ்நாட்டில் பொதுமக்களின் நன்மைக்காக சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சொகுசு பேருந்துகளில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டணங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்று என்று ஒரு அருமையாக விளக்கம் அளித்தார். 

தலைமைச் செயலாளர் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையர்கள் ஏற்கவில்லை. சொகுசுப் பேருந்துகளை சாதாரணப் பேருந்துகளாக அறிவித்து இருப்பது ஒரு வகையில் கட்டணக் குறைப்புதான். எனவே அதை திரும்ப பெற வேண்டும். ஏப்ரல் 30-ந் தேதிக்கு முன்பு எந்தெந்த வகை பேருந்துகளில் எத்தகைய கட்டணம் வசூலிக்கப் பட்டதோ, அதே கட்டணங்களே தொடர வேண்டும்  என்று உத்தரவிட்டனர். 

இந்த கட்டண குறைப்பு ரத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு பஸ்களில் மீண்டும் பழைய கட்டணங்கள் நடை முறைப்படுத்த நேற்றிரவே உத்தரவிடப்பட்டது. 

பஸ் கட்டணங்கள் மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்பட்டது, இன்று காலை நடைமுறைக்கு வந்தது. சாதாரண கட்டணம் அகற்றப்பட்டு பஸ்களின் வகைக்கு ஏற்ப இன்று கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இது தினமும் பஸ்சில் சென்று வரும் சாதாரண, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பல பஸ்களில் பயணிகளுக்கும்   கண்டக்டர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

 குறைவான கட்டணத்தை நம்பி கொஞ்ச பணமே எடுத்து வந்திருந்த பயணிகள் இன்று மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டதை அறிந்து ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தனர். அவர்களது விரக்தியான விவாத குரல்களுக்கு பேருந்து கண்டக்டர்களால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் சொல்லி சொல்லி அலுத்துப் போன கண்டக்டர்கள் மவுனத்தையே பதிலாக சொல்ல முடிந்தது. 

மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே பஸ்சுக்கு 1 வாரத்துக்கு முன்பு ஒரு கட்டணம் வாங்குகிறீர்கள், திடீரென குறைக்கிறீர்கள், பின்னர் பழையபடி மீண்டும் கூட்டி வாங்கினால் என்ன அர்த்தம் என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

அவர்களிடம் கண்டக்டர் கூறும்போது, நான் என்ன செய்ய முடியும், எங்களுக்கு வரும் உத்தரவுபடிதான் நாங்கள் டிக்கெட் கொடுக்க முடியும்  என்றார்.

 ஆக ஆறிப்போயிந்த புண்ணை மறுபடியும் கிளறி மருந்து போடலாம் என நினைத்திருந்த கலைஞருக்கு மக்கள் உசாராகியது பெறும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இனிமேல் வேறு என்ன மாதிரி சலுகைகளை அறிவிக்கலாம் என ஆலோசித்து வருகிறாராம்.

எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாரோ? உக்காந்து யோசிப்பாரோ?

14 கருத்துகள்:

கிரி சொன்னது…

இந்த நடத்துனர்கள் நிலை இந்த விசயத்தில் ரொம்ப பரிதாபம்..

பிரச்சனை செய்வது ஒருத்தர் மாட்டி கொள்வது இன்னொருத்தர்.. பொதுமக்கள் காலையில இவங்க மண்டைய உருட்டி இருப்பாங்க

விக்னேஷ்வரி சொன்னது…

கலைஞரும் ஏதாவது செஞ்சு ஆட்சியப் பிடிச்சிடலாம்னு பார்க்கிறார். ஆனா பாவம். எல்லாம் இப்படி ஊத்திக்குது. :)

Selva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Selva சொன்னது…

என்ன செய்வது வயது போட்டுதல்லோ அதுதான் முளை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதற்காக தான் தற்போது ஆஸ்பத்திரி்க்கு சென்றிருக்கிறார். ஆப்பரேசன் செய்வதற்கு.

பெயரில்லா சொன்னது…

தண்டம்.

பதி சொன்னது…

//எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாரோ? உக்காந்து யோசிப்பாரோ?//

இல்லை.. உண்ணாவிரதமிருந்து....

பெயரில்லா சொன்னது…

சன் டிவி சீரியல் மாதிரி இது கலையர் சீரியல்.இன்னும் நிறைய இருக்கு ,தற்சமைய காட்சி மருத்துவமனை நோயாளி

தீப்பெட்டி சொன்னது…

//இந்த நடத்துனர்கள் நிலை இந்த விசயத்தில் ரொம்ப பரிதாபம்..//

உண்மைதான்... அவருக்கென்ன ஆஸ்பத்திரிக்கு போய் படுத்துட்டார். இங்க அல்லாடுறது யாரு

Raja சொன்னது…

//உண்மைதான்... அவருக்கென்ன ஆஸ்பத்திரிக்கு போய் படுத்துட்டார். இங்க அல்லாடுறது யா//

அதுவும் சும்மா தேர்தல் ஜுரம்

pappu சொன்னது…

வெட்டி வேலை. என்னவோ பண்றானுங்க. நமக்கு நம்பிக்கையே போயிருது

பெயரில்லா சொன்னது…

தமிழனை உயர்த்தியவரம் இவர்தான் தமிழனின் சுயமரியாதையை இழக்கசெய்தவரும் இவர்தான்
.,.,.கோவிந்தராஜன் -திருவதிகை _பண்ருட்டி

shabi சொன்னது…

சொந்த செலவுல சூனியமா இல்ல மக்கள் செலவுல சூனியமா

எட்வின் சொன்னது…

ஏழரை ஆரம்பிச்சாச்சு போல இருக்கே... மஞ்சத்துண்டுக்கு

பெயரில்லா சொன்னது…

Who ever comes to power, only public to suffer with all price hike etc.,
Politicians are also a public servant
why there is no code of conduct and retirement at the retirement Age as Government servants are retired.

EC must fix retirement age of maximum
60 to all Politician, as a leader when they are unable to think, remember, walk how can they serve the Country.